ஊழியர் சங்கம்:
பெருமைமிகு கல்வி
கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு
தலைவர்களாக இருப்பவர்கள் தங்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தில் அனைத்தையும்
போராட்டத்தின் மூலம் பெற கூடியவர்களாக இருக்கின்றனர்.
ஆனால் இது ஒன்றும் இந்த மாவட்டத்தில்
இயங்கும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனம் அல்ல.இது ஒரு கல்வி கழகம் அதுவும் ஒரு தனி
மனிதனால் ஆரம்பிக்கப்பட்ட கல்வி
கழகத்தில் பொதுவுடைமைவாதிகளுக்கு வேலை
இல்லை என்பதால் .
எனவே அவர்கள் சங்கத்தின்
கோரிக்கைகள் ,போராட்டம் போன்றவற்றை தமிழக ஆளும் கட்சிகளுக்கு எதிராக திசை
திருப்பினார்கள். உடனே அரசியலில் சிறப்பான
எதிர்காலம் அமைந்தது.
எனவே சங்க தலைவர இனி என்ன
செய்யபோகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த வேலையில் பல்கலை கழக பதவியில்
இருந்து கொண்டே கீழ்கண்டவற்றை செய்து முடித்தார்.
1.ஒரு கட்சி ஆரம்பித்தார்.அந்த கட்சிக்கு "தமிழக சாதனை
படை"(TSP)என்று பெயர் வைத்தார்.
2.கட்சியின் கொடியாக மேலும் கீழும் பச்சை வண்ணம் நடுவில் வெள்ளை
வண்ணம் அந்த வெள்ளை வண்ணத்துக்கு நடுவில் வெற்றியை குறிக்கும் கை சின்னம்.இந்த சின்னம் TSP கட்சியின் தேர்தல் சின்னம் என்று அறிவிக்கப்பட்டது.அது என்னவெனில் கட்டை விரலை மட்டும் உயர்த்தி மற்ற விரல்களை கைக்குள் அடக்குவது ஆகும்.
இதற்கு அர்த்தம்
"அமைதிக்கு பாதுகாப்பு சுற்றுசூழல் ஏற்படுத்தி கொண்டு நாங்கள் பல சாதனைகளை செய்வோம் "என்ற கருத்து .
3.கட்சியின் தளபதியாக ஊழியர் சங்க தலைவர் நின்று திறமையான
பேராசிரியர்கள் 40 பேரை தமிழக பாராளுமன்ற தொகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினராக நிற்க
வைத்தார்.திறமையான 234 ஊழியர்களை தமிழக 234 சட்ட
மன்ற தொகுதிகளில் நிற்க வைத்தார்..
4.இதற்கு தளபதியாக நின்று தமக்கு இந்த வாழ்வு அளித்த இணை
வேந்தரை முதல் அமைச்சர் பதவிக்கு
பரிந்துரைத்தார்.
5.தான் துணை முதல்வராக நின்று பல சாதனைகள் புரிய கீழ்கண்ட கொள்கைகளை
வெளியிட்டார்.
கட்சியின் பத்து கொள்கைகள் :
1.சாதி சான்றிதழை நீக்கி
விட்டு மேல் வர்க்கம் ,நடு வர்க்கம் ,கீழ் வர்க்கம் என்று பொருளாதார
அடிப்படையில் தமிழகத்தில் உள்ள
மக்கள் பிரிக்கப்பட்டு கீழ் வர்க்கம்,நடு
வர்க்கத்தை உயர்த்துவதற்கு சலுகைகளை சட்டத்தில் வழங்க திருத்தும் செய்யப்படும்.
2.தமிழ்,ஆங்கிலம்,இந்தி மூன்றும் கட்டாயம் கற்பிக்கப்படும்.
3.அணைத்து துறையிலும் அறிவியலை அடிப்படையாக கொண்டு சாதனை
நிகழ்த்துவது .
4.மது,போதை,சிகரெட் போன்ற பழக்கங்கள் முற்றிலுமாக தடை செய்யப்படும்.
5.அனைத்து நிலைகளிலும் நேர்மறை
சாதனைகளை நிகழ்த்துவதற்கு தமிழகத்தை
தயார் செய்வோம் .
6.விவசாயத்திற்கு என்று ஒரு
துறை ஆரம்பிக்கப்படும்.
அங்கு விவசாய அதிகாரிகள்
ஆரம்பிக்கப்பட்டு அங்கு விவசாய அதிகாரிகள் நியமனம் செய்யப்படும்.
விவசாயிகள் விரும்பினால் நிலம் ஏற்றுகொள்ள
செய்து அரசு அதிகாரிகளாக உருவாக்கி மாத
சம்பளம் வழங்க ஏற்பாடு செய்வோம்.
அது நிலத்தின்
மதிப்புக்கு ஏற்றவாறு அதிகாரிகளாக நியமனம் செய்வோம்.
7.தமிழகத்தில் பாலுணர்வு நோயை தவிர்க்க அங்கீகரிக்கப்பட்ட பாலியல்
விபசார விடுதி கிராமம் சென்னையை ஒட்டி ஆரம்பிக்கப்படும்.
8.சாதி, மத மோதல்களுக்கு காரணமாக இருப்பவர்களை ஆயுள் தண்டனை கிடைக்க வழி
வகை செய்வோம்.
9.சுற்று புற சூழ்நிலையை பாதிக்காத வகையிலான தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படும்.
10. அனைவருக்கும் வேலை மற்றும் அமைதியான மாநிலமாக தமிழகம் திகழ
செய்வதற்கு பொறுப்பாக இருப்போம்.
கட்சியின் முழக்கம் :
பொருளாதார சாதனை! அறிவு சாதனை! ஆரோக்கிய சாதனை!
No comments:
Post a Comment