Tuesday, 26 February 2013


அதிகாரம்:
அதிகாரங்கள் எப்பொழுதும் ஒன்றை உருவாக்கி  தனக்கு வேண்டாத பொழுது அதை அழித்துவிடும் செய்கை உடையது.ஏனென்றால்  அவ்வாறு உருவாக்குதல் மற்றும் அழித்தல் அதற்கு இடையில்  வரும்  காத்தல்  இவை  மூன்றும்  இருந்தால்  மட்டும்  அதிகாரம் சிறப்பாக  செயல்பட  முடியும்.அப்படி செயல்படும்  நிலைக்கு  பெயர்  அதிகாரம் எனப்படுகிறது .இப்படிப்பட்ட  அதிகாரங்கள் கடவுளுக்கு  மட்டும்  இருக்க  வேண்டியது . இந்தியாவை  பொறுத்தவரையில்  ஒரு பணியில்  இருக்கும்  அதிகாரம் உடையவரிடம்  இந்த மூன்றும்  இருந்து  மற்றவர்களை  ஆட்டிபடைக்கிறது .இது  அமேரிக்கா  மற்ற  நாட்டினர்  இடம்  காட்டும்  அதிகாரத்தை காப்பி  அடித்து  இந்த இந்தியாவில்  பணி  செய்யும்  அதிகாரம் உடையவர்கள்  தங்களது  கீழ்  பணிபுரியும்  ஊழியர்களிடம்  காட்டுகிறார்கள் .அந்த அதிகாரம்   எனக்கு  பொருந்தாதது .அதிகாரம் நாம்  மற்றவர்களுக்கு கொடுத்தால் மட்டுமே அந்த அதிகாரத்தால் மகிழ்ச்சி அடைய மற்றும் துன்பம் அடைய முடியும்.அப்படி அதிகாரத்தை மற்றவர்களுக்கு கொடுக்காமல் தனது உழைப்பு மற்றும் வேலை மற்றும் கடமையில் கொடுத்து முன்னேறும் ஒரு தனி மனிதனுக்கு இந்த அதிகாரங்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை.நான் இருக்கும் இடத்தில் சில அதிகாரங்கள் இருக்கலாம்.அவைகளை நான் எப்பொழுதும் கண்டுகொண்டதில்லை.ஆனால் அதன் வளர்ச்சியை கண்டுகொள்கிறேன்.நான் வளர்வதற்கு.இது ஆரோக்கியமானது.ஆனால் நான் அந்த அதிகாரங்களை வைத்து முன்னேறுகிறேன் என்று அந்த அதிகாரம் நினைத்து செயல்படும் நிலையில் முற்றிலும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.அது என்னில் இருந்து அந்த அதிகாரத்திற்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.அந்த அதிகாரம் நேர்மறையான அதிகாரத்தை என் மீது செலுத்தினால் அதை விட பல மடங்கு   பதில்  நேர்மறை  பிரதிபலிப்புகளை  என்னால்  கொடுக்க  முடியும்.அதுவே  எதிர்மறையான  அதிகாரத்தை செலுத்தும்  நிலையில் எதோ  ஒரு வகையில்  பல மடங்கு  எதிர்மறை  பாதிப்புகளை  என்னால்  தர  முடியும்.இதை  கண்டு  ஒன்றும்  பயம்   அடைய தேவை  இல்லை .இது அனைத்து  அசாதாரண மனிதர்களுக்கும்  உள்ள  இயல்பு  ஆகும் .இந்த பதில் அடியை கொடுக்க இதற்கு என்றே என்னால் கடுமையாக உழைக்க முடியும்.இந்த உழைப்பு என் முழு நேரத்தில் கால் பங்கு கூட இருக்காது.தன்னால் மட்டும் எல்லாம் நடக்கிறது என்று நினைப்பவன் அனைத்தையும் இழந்து தனது தன்மானத்தையும் இழக்கிறான்.நான் எப்பொழுதும் என்னால் மட்டும் எல்லாம் நடக்கிறது என்று நினைத்ததில்லை.என்னை சீண்டி பார்ப்பவர்களையும்  விட்டதில்லை.தன்னால் மட்டும் இந்த பையன் முன்னேற்றம் அடைகிறான் என்று நினைத்து என் மீது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துபவர்கள்  இது வரையில் பொருளாதாரத்தை இழந்ததுதான் மிச்சம்.ஏனென்றால் நான் நேர்மறை பொருளாதாரத்தை வளர்ப்பதற்காக யோகத்தால் உருவாக்கப்பட்டவன் என்பதால்...........

No comments:

Post a Comment