ஒழுங்கு நிலை
:
பொருளாதாரம்
இருக்கு என்ற தைரியத்தில் தனது மானத்தை இழந்து விடலாமா?
தன்
மானத்தில் இழப்பு ஏற்படுவதை பொருளாதாரம் சரி கட்டுமா?
திறமையாக
வேலை நடந்தால் போதும் வருமானம் கிடைத்தால் போதும் ஒழுங்கு நிலை தேவை இல்லை என்று ஒரு
நிறுவனத்தை நடத்தலாமா?என பல
கேள்விகள் என்னுள் எழுந்த நிலையில் "ஒரு பொருளாதார உலகத்தில் அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் ஒரு நிறுவனம் ஒழுங்காக நஷ்டம் எதுவும்
இல்லாமல் இயங்க அந்த நிறுவனத்திற்கு உள்பட்ட அத்தனை விஷயங்களும் ஒழுங்கு நிலையில் இருக்க
வேண்டும்.அந்த ஒழுங்கு நிலையை ஏற்படுதுபவரை நாம் மேலாண்மை இயக்குனர் என்கிறோம் .அந்த
ஒழுங்கு நிலையை மேலாண்மை இயக்குனரிடம் மேற்பார்வையிடுபவர் அந்த நிறுவனத்தை நிறுவியவர்.இவ்வாறு
ஒழுங்கு நிலையில் ஒரு மாற்றம் ஏற்படும் நிலையில் ஒழுங்கு அற்ற நிலை ஏற்படுகிறது.இந்த
ஒழுங்கற்ற நிலையில் ஒரு நிறுவனம் எப்பொழுது ஏற்படுகிறது என்றால்
1. வேறொரு
நிறுவனம் ஊழியர்களுக்கு அல்லது மேலாண்மை இயக்குனருக்கு
இருந்தால்.
2.இந்த
நிறுவனம் எந்த நாட்டில் உள்ளதோ அந்த நாட்டில் கலாசாரம்,சட்டம்
ஒழுங்கு போன்றவற்றிற்கு எதிரான நிலையில் நிறுவனம் சென்று முன்னேற முயல்வது.
3.அந்த
நிறுவனத்தில் அந்நியர்களின் தலையீடு இருக்கும்போது.
தற்பொழுது
இதில் ஏதாவது ஒன்று கூட கல்வி கழகம் சரிவை சந்திப்பதற்கு காரணமாக இருக்கலாம்.
ஆனால்
இந்த கல்வி புலத்தில் உள்ள ஊழியர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்
இப்படி அணைத்து தரப்பினரும் மேற்கண்ட மூன்று தவறுகளில் ஏதேனும் ஒன்றை ஒரு குழுவாக செய்து
இருந்தால் நிச்சயமாக இது அணைத்து துறைகளின் ஆசிரியர்
,மாணவர்
,ஊழியர்களால் பின்பற்றப்பட்டு கல்வி கழகம் சரிவை சந்திக்கும் நிலை ஏற்படும்.இழுத்து மூடப்பட்ட நிலை வரும் .இந்த நிலையை சரி செய்வதற்கு மேலாண்மை
செய்பவரை மேற்பார்வையிடும் பொறுப்பை நிறுவனர் அல்லது அதற்கு சமமானவர் திறம்பட செய்து
இருக்க வேண்டும்.மாதம் ஒரு முறையாவது மேற்பார்வை செய்து இருக்க வேண்டும்.இதனால் அந்த நஷ்டம் மேர்பார்வையிடாத நிறுவனர் மீது சுமத்தப்பட்டு
அவர் வைத்து இருக்கும் ஏதேனும் மற்றொரு நிறுவனத்தை விற்று நஷ்டத்தை சரி செய்ய வேண்டும்.அப்படி
இல்லையென்றால் இழுத்து மூடும் நிலை வரும். இது கல்வி கழகம் என்பதால் காப்பாற்றுவதற்கு நிறுவனர் முயற்சி செய்வார்.நிறுவனத்தில் மீண்டும் ஒழுங்கு நிலை கடைபிடிக்கப்பட்டால்
இழுத்து மூடுவதை தவிர நிறுவனருக்கு வேறு வழி இல்லை.எனவே ஒழுங்கு நிலை அவசியம் ஆகிறது.
No comments:
Post a Comment