Monday, 18 February 2013

 இந்தியர்கள்  போல வாழ முடியுமா ?
ஒரு  நாள் இவர்கள்  போல  வாழ  ஆசைப்பட்டேன்
நிச்சயமாக  என்னால்  முடியாது  என்பதை  தெரிந்து  கொண்டேன் .
உண்மையில்  இந்தியர்களுக்கு எந்த அளவு சகிப்புத்தன்மை,சகோதரத்துவம்,சமத்துவம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.நிச்சயமாக எனக்கு இந்தியர்கள் போல வழ வேண்டும் இல்லை  எனில் மரண தண்டனை பெற வேண்டும் என்றால் தாராளமாக மரண தண்டனையை ஏற்று கொள்வேன்.நான் இதுவரையில் எனது வாழ்வில் இப்படிப்பட்ட சகிப்புத்தன்மை உள்ள மனிதர்களை கண்டதே இல்லை.ஆனால் உண்மையில் வாழ்க்கையை எந்த சூழ்நிலையில் இருந்தாலும் வாழ கூடியவர்கள் இந்தியர்கள்.ஆனால் இது இந்தியாவுக்கு மட்டும் பொருந்துமா?அல்லது வளர்ந்து கொண்டு இருக்கிற அத்தனை நாட்டுக்கும் பொருந்துமா?என்று கேட்டால் அதற்கு பதிலாக "முழுமையான வளர்ச்சியை நோக்கி பொய் கொண்டு இருக்கும் எந்த ஒரு சமுதாய குழுவுக்கும் நல்லது,கேட்டது போன்றவை தெரிவதில்லை.தனக்கு தெரிந்தது எல்லாம்  வளர்ச்சி.ஆனால் இந்தியர்கள் தன்னுடைய ஆரோக்கியத்தை அடகு வைத்து வளர்ச்சி பெறுகிறார்கள் .இது அவர்களுக்கு நல்லதா?இல்லை நல்லது இல்லை.அப்படி என்றால் இந்திய  சமுதாயம் தவறான வழியில் சென்று கொண்டு இருக்கிறது.இவ்வாறு கூறுபவர்களை தலைமையாக ஏற்று கொள்வார்கள்.ஆனால் அவர் கூறும் திறமை வழி எது என்று காது  கொடுத்து கேட்கமாட்டார்கள்.
இன்று மக்கள் கூட்டம் அதிகமாக வந்து போகும் இடமாக மருத்துவமனைகள் மாறி வருகிறது.இதற்கு காரணம் இந்தியர்கள் தனது ஆரோக்கியத்தை அடகு வைத்து வளர்ச்சியை பெற்று கொண்டு உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.இதற்கு தலைமை  ஒரு வார்த்தையில்  தனது நியாயத்தை முடித்து விடும்.அது என்னவென்றால் இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடு அங்கு இதுபோல இருப்பது சகஜம் என்று.ஆனால் இப்படி சொல்லியே மக்களை தவறான பாதையில் வளர்ச்சி பெற அரசியல்வாதிகள் பழக்கப்படுத்தி வைத்து இருக்கின்றனர்.மக்கள் மனம் மற்றும் உடல் பலவீனமாக இருந்தால் மட்டும் நமக்கு எதிராக புரட்சியில் ஈடுபடமாட்டார்கள் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் இந்த அரசியல்வாதிகள்.அதனால்  முழுக்க முழுக்க மக்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.இங்கு எல்லாமே தலை கீழாக நடைபெறுகிறது.பெண்கள் சரிசமமாக பார்க்கப்படும் நிலை இல்லை.ஆண்களின் சபல புத்தியை புரிந்து கொண்டு தனது காரியத்தை  கச்சிதமாக முடிக்கும் பெண்கள் ஏராளம்.இதனால் ஒரு பொருளாதாரம் என்று வந்து விட்டால் பெண் துணை இல்லாமல் எதுவுமே  சாதிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.இதனால் துணையாக  மட்டும் பெண்கள் இருக்க பழக்கப்பட்டுவிட்டனர்.அவர்கள் ஆண்களுக்கு  இணையாக வர பழக்கப்படவில்லை.குறிப்பாக இணையாக வர அவர்களே விரும்பவில்லை.இதற்கு  தனது பெற்றோர் முதல் கணவர் வரை உள்ள ஆணாதிக்க சமூக உறவுகளில் போராட வேண்டும்.அப்படியே போராடி  மீண்டு வந்தாலும் தான் வேலை செய்யும் அலுவலகங்களில் உள்ள மேலாதிகாரி  ஆணாக இருந்தால் அவரின்  சபல புத்திக்கு அடிபணிய வேண்டிய சூழ்நிலை.அதையும் எதிர்த்து வந்தால் வேலை போய்விடும்.இந்த வேலை போனால் போகட்டும் என்பது வேண்டும் என்றால் பண வசதி படைத்த பெண்களுக்கு ஒரு பொருட்டாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் தனது வருமானத்தை கொண்டு தனது  குடும்பத்தையே இயக்கம் ஒரு பெண்ணுக்கு வேலை போவதை விட அந்த மேலதிகாரியின் சபல புத்தியை பயன்படுத்தி கொண்டு மேல்நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.இதற்கு எவரையும் சொல்லி குற்றம் இல்லை. ஆனால் இந்த பாதை தவறான பாதை .இந்த வளர்ச்சி தான் முழுமையாக வளர்ச்சி பெற தனது பாதுகாப்புக்காக அதிகம் செலவிட வேண்டும் அப்படியே செலவிட்டாலும் கட்டுப்பாடான சமுதாய வளர்ச்சி பெரும் ஒரு கண்ணியமான குழுவுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும்.அது என்ன பதில் என்றால் அழிவுதான் அந்த பதில்.அதுதான் வட இந்தியா வளர்ச்சி பெறும்போது நடந்தது.அந்த அழிவு ஒரு மதத்தை சேர்ந்த தீவிரவாதிகளால் ஏற்பட்டது.அதே வளர்ச்சியை தமிழகம் பெரும் நிலையில் அந்த மாதிரியான தாக்குதல்  உள்ளாகலாம்.எப்பொழுது ஒரு தாக்குதல் நடைபெறுகிறது என்றால்   காவல்துறை அதிகாரம் மக்களிடம் செல்லும் நிலையில்.அந்த அதிகாரத்தை மக்கள் தங்கள் சுய நலத்துக்காக பயன்படுத்தும் நிலையில்.இதுதான். வட இந்திய பெரு நகரங்களில் நடந்தது.இதற்காக கட்டுப்பாடான காவல் துறை வேண்டும் என்றும் ,ஜனநாயகத்தை பாரபட்சம் அற்ற நிலையில் தண்டிக்க   வேண்டும் என்றும் நான் கூறவில்லை.எந்த ஒரு சமூகமும் தமது பொருளாதார வளர்ச்சியை அடைய தவறான ,ஆரோக்கியம் இல்லாத நிலைக்கு சென்று பொருளாதாரம் ஈட்டும் நிலைக்கு வந்துவிடுதல் கூடாது.அதனை  காவல் துறை குற்றப்பிரிவு கண்காணித்து தடுத்தால் போதும்.அப்படி பொருள் ஈட்டுபவர்கள் சாதாரண   கீழ்நிலையில் உள்ள மக்களிடம் இருந்து மேல்நிலை மக்கள் வரை இருக்கலாம்.காவல்துறை கீழிருந்து மேல் நிலைக்கு போகுதல் கூடாது.இந்த விஷயத்தை பொறுத்தவரையில் மேல்நிலையில் இருந்து கீழ் நிலைக்கு வருதல் வேண்டும்.அது யாராக இருப்பினும் பாரபட்சம் இன்றி தண்டித்தல் வேண்டும்.அது காவல்துறையில் பணி செய்பவர்களாக இருந்தாலும்.
எப்பொழுது பலம் இல்லாதவர்களாக சுகத்தை மட்டும் தமது வாழ்வாக கொண்டு பொருளாதார வளர்ச்சி பெறும்  ஒரு சமுதாயம் அந்த சுகத்தை  எதிர்மறை சுகமாக இருக்கும் நிலையில் ,தனது மதம் அல்லது ஜாதியில் உருவாக்கப்பட்ட கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடித்து வரும் ஒரு குழுவின் ஆளுமைக்கு எதிராக தோல்வி அடைந்து  பின்பு சிந்திக்க எண்ணுகிறது.இதற்கு பட்டால் மட்டும் புத்தி வரும் என்ற பழமொழியை உதாரணமாக கூறலாம்.இது இந்தியர்களுக்கு சரியாக பொருந்துகிறது.ஏனென்றால் இவர்கள் தனித்துவம் இல்லாதவர்கள் என்பதால்..........நான் இந்த கலாசாரத்தை கடைபிடிக்க விரும்பவில்லை என்பதை விட முடியவில்லை என்பதே உண்மை .நான் இவர்கள் கலாச்சாரத்திற்கு பழக்கப்பட்ட விரும்பவில்லை.ஏதேனும் ஒரு நாள் இவர்கள் போல வாழ்ந்து பார்ப்போம் என்று நினைத்து செயல்பட நினைத்தால் அது சோம்பேறி நிறைந்த அற்ப சுக வாழ்வாக இருக்கிறது.அந்த அற்ப சுகங்கள் போலி புகழச்சிகள்,வீண் பேச்சுக்கள் ,போதை பொருட்கள்,கோவில் சென்று மணிக்கணக்கில் தனது துணையோடு வீண்  பேச்சு, பிரயோசனம் இல்லாத ஒரு விஷயத்துக்காக தனது பிள்ளையை தயார் செய்வது ,தொலைக்காட்சியை மணிக்கணக்கில் பார்த்து மகிழ்ச்சி அடைவது.எவனாவது  பெத்து போட்டு இருக்கும் பெண் பிள்ளைகளை பார்த்து சைட் அடிப்பது,அடுத்தவர் மனைவியின் அழகை பார்த்து ரசிப்பது,இதற்கும் மேலே அவர்களுடன் தவறான உடலுறவு போன்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடுவது,தியேட்டருக்கு பொய் சினிமா பார்ப்பது போன்றவைகள் போல நிறைய அற்ப சுகங்கள் மட்டுமே இந்த சமூகத்தை வழி நடத்துகிறது. இது போல ஏதேனும் ஒரு தவறான பழக்கத்தை வைத்து பொருளாதாரத்தில் உயர்கிறார்கள்.இவர்களுக்கு அர்ப்பணிப்பு, பொதுநலம்,உண்மை,நேர்மறை,சாதனை,ஒலிம்பிக் சாதனை,கின்னுஷ் சாதனை,பொறுப்பு,கண்டுபிடிப்பு,நாட்டுக்காக வாழ்வை தியாகம் செய்வது,தாமும் ஆரோக்கியமாக சமூகமும் ஆரோக்கியமாக இருக்க வழிவகை செய்வது,போன்றவைகள் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள்.ஆனால் இது எல்லாத்தையும் சினிமாவில் போலியாக செய்துவிடுகிறார்கள்.ஆனால் அதற்கு அங்கீகாரமும் ஆரோக்கியமும் கிடைப்பதில்லை.சினிமா உலகத்தை பொறுத்தவரையில் அந்த  சமூகத்தின் மனிதர்களின் சாதனைகளை படமாக எடுக்க வேண்டும். தான் என்ன சாதனை செய்ய வேண்டும் என்று எதிர்கால  வாழ்வை பற்றியும் கூறுதல் வேண்டும் நிகழ்கால உண்மைகளை எடுத்து கூறுதல் வேண்டும்,இறந்தாகால நிலையின் உணமைகளை எடுத்து கூறுதல் வேண்டும்.ஆனால் சினிமாவில் என்ன நடக்கிறதோ அதுதான் தனது வாழ்க்கை என்று கடைப்பிடித்து செல்லும் ஒரு சமுதாயம் பொருளாதார வளர்ச்சியை பெறுகிறது என்றால் எப்படி அந்த பொருளாதாரத்தை அனுபவிக்க முடியும்.இவர்கள் சேர்த்து வைத்ததை வேறு ஒரு உண்மை வாழ்வு வாழ்கிற  ஆரோக்கிய சமுதாயம் வந்து அனுபவிக்கப்போகிறது.அடுத்த எந்த சினிமா வரும் அதன் படி வாழ்க்கையை நடத்தலாம்.கிரிக்கெட் தொடர் எப்பொழுது நடக்கும் அன்று தனது அலுவலகத்துக்கு லீவு போடலாம் என்ற நிலையில் இருக்கும் ஒரு சமுதாயம் தான் சேர்த்து வைத்த பொருளாதாரத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது.இது ஆரோக்கிய சமுதாயம் இல்லை.தானும் அனுபவிக்க வேண்டும் தனது எதிர்கால சமுதாயத்துக்கும்  சேர்த்து  வைத்து இருந்து தனது ஆரோக்கியத்தை முதன்மையாக கொண்டு மற்ற வேலைகளை அடுத்த நிலையில் வைத்து இருக்கும் ஒரு சமுதாயம் அழிவை அடைவதில்லை.ஆனால் அது தற்போதைய இந்தியாவில் காணப்படுவதில்லை.அதனால் என்னால் இந்திய கலாசாரத்தை கடைப்பிடிக்க முடியவில்லை.ஆனால் என்னால் முடியும் இந்திய சமுதாயத்தை ஆரோக்கிய நிலைக்கு அழைத்து செல்ல .அதற்கு எந்த நாட்டில் இருந்தாலும் அதற்கான முயற்சியை நான் இந்தியாவுக்கு செய்வதை,அர்ப்பணிப்பதை  பெருமையாக கருதுகிறேன்.இதை நான் ஒரு இந்திய மொழியில் எழுதவில்லை .ஒரு உலக மொழியில் உன்னதமான ஒரு மொழியில் எழுதுகிறேன்.
                                                                                                                 இப்படிக்கு ,
                                                                                                                   சதீஷ்,

No comments:

Post a Comment