Tuesday, 5 February 2013


இந்தியாவில் ஆண்மை,பெண்மை,அரவாணிகள்:
ஆண்மை:
ஆண்மை என்பது என்ன?ஒன்றும் இல்லை பெண்மை என்பது ஆண்மை ஆகும்.சரி சமமான  நிலையை இந்தியர்களின் பார்வையில் ஆண்மையானவன் என்றால் பெண்களிடம் கட்டாயம் உடலுறவு வைத்து இருக்க வேண்டும்.பெண்கள் பின்னால் ஓட வேண்டும் காமம் என்று வரும் நிலையில் பெண்களின் காலில் விழுவதற்கு கூட தயாராக  இருக்க வேண்டும்.காதல் என்று வரும்பொழுது பெண்மையின் குடும்பத்தாரால் காரி உமிழப்பட்டாலும் துடைத்து கொண்டு  சாதரணமாக  நடந்து கொள்ள வேண்டும்.
ஆனால் அப்பொழுது கூட இந்திய பெண் ஆனவள் தனது குடும்பத்துக்கு மட்டும் விசுவாசமாக இருந்து தனது காதலனை அலைக்கழிப்பது  என்பதில் மட்டும் ஒரு பெண்ணை மையமாக வைத்து இயங்குகிற ஒரு சமுதாயத்தில் பார்வையில் அப்பொழுதுதான் ஆண்மை என்று ஏற்று கொள்கின்றனர்.இல்லை எனில் தனக்கு ஒரு பெண் சரி  சமம் ஆனவள்  என்று கருதும் ஒரு ஆணின் நடவடிக்கைகள் அவனை ஆண்மை அற்றவனாக சமூகம் பார்க்கிறது.அதுவும் சிலர் தங்களது வாயினால் வார்த்தைகளை வீசி வருகின்றனர்.அவர்களுக்கு நிர்வாணமாக நின்று நிரூபித்தாலும் கூட நம்பமாட்டார்கள்.அது இருக்கட்டும்  ஒரு ஆண்மையானவன் ஏன் தனது ஆண்மையை மற்றவர்கள் நம்பவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும்?தனது ஆண்மையை நிரூபித்து காட்டி கொண்டு இருக்கலாம் அல்லவா?அதற்கு பொறுமை வேண்டும்.பொறுமை என்பதில் ஆண்மை இருக்கிறது.

பெண்மை :
பொதுவாக பெண்மை என்பது நாணத்தில் இருக்கிறது என்று நினைத்து தற்போதைய கல்லூரி மாணவிகள் தனது தலை முடி பின்னலை முன் பக்கம் இழுத்து போட்டு கொள்கின்றனர்.இது ஒரு ஆணை தனது பக்கம் ஈர்க்கும் ஒரு பெண்ணின் நடவடிக்கை ஆகும்.இவ்வாறு ஒரு இந்திய பெண்மை தனது உடல் மற்றும் மன பலத்தால் ஆண்கள் போல தங்களை நிரூபிக்க இயலாமல் பலமற்ற உடலை வைத்து கொண்டு  பலம் அற்ற ஆண் இந்திய வர்க்கத்தை உருவாக்குகிறார்கள்.எவ்வாறு என்றால் பலமற்ற பெண்ணிடம் காதல் மற்றும் காமம் கொள்ளும் ஒரு இந்திய ஆண் எப்படி பலம் உள்ளவனாக இருப்பான்.அப்புறம் எப்படி ஆரோக்கியமான இந்திய கலாசாரம் பல சாதனைகளை படைக்கும்.இருக்கின்ற பணத்தை கொண்டு தாறுமாறாக தனது உடலை பெருத்து கொண்டு இல்லையேல் அதீத காமத்துக்கு அடிமையாகி தனது உடலின் சக்தியை இழந்து நோய்களுக்கு உள்ளாகும் சமூகம் எவரால் உருவாக்கப்பட்டது.பெண்மையால் மட்டும் ஆகும்.எனவே பெண்மை என்ற ஒரு சொல்லுக்கு அர்த்தம் உண்மையில் வீரம் என்று பொருள் கொள்ளுதல் வேண்டும்.அந்த வீரத்தை காட்டுவதற்கு வாருங்கள் நீங்களும் வாழ்க்கை என்னும்  போருக்கு.அப்பொழுது தெரியும் உண்மை பெண்மை.

அரவாணிகள்:
இந்தியாவில் உண்மையில் குரலை தவிர உண்மையான பெண்மை இவர்களிடம் காணப்படுகிறது.இவர்களிடம் இருக்கும் வீரம் மற்றும் ஆண்மை கலந்தது.மற்ற பால் இனத்தவரை போல இவர்கள் சட்டத்தால் ஊக்கம் அளிக்கப்பட்டால்   மிகப்பெரும் சாதனை செய்வார்கள்.
ஆனால் பல அரவாணிகள் இந்தியாவில் தங்கள் உடலை வைத்து பிழைப்புகளை செய்கின்றனர்.இதனால் எல்லோராலும்  தவறாக கணிக்கப்படுகின்றனர்.
எனக்கு ஏற்பட்ட அரவாணிகள் அனுபவம்:எனக்கு புது அனுபவத்தை பெற ஏதேனும் ஒரு வெளி ஊருக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வது எனது வாடிக்கை.
அது போல நான் மும்பை பயணம் மேற்கொண்டேன்.சென்னையில் இருந்து மும்பைக்கு சென்று அடையும் முன்பு  இரண்டு முழுமையான தூக்கம் போட  வேண்டும்.
பின்பு குளிர் அல்லது மழை  சாரலாக பட்டு எழுந்திருந்து பார்த்தால் ரயில் கர்நாடகத்தை தாண்டி மகாராஷ்டிரம் எல்லைக்குள் நுழைந்து கொண்டு இருக்கும்.புனேவில் அரவாணிகள் ரயிலில் ஏறி காசு கேட்பார்கள்.மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் இறங்கிய பின்பு எனக்கு ஒரு புதிய உலகத்தை பார்த்தேன்.அந்த உலகம் நான் அடிக்கடி ஹாலிவூட் படத்தில் பார்க்கும் லண்டன் மாநகரம் போல இருந்தது.அங்கு நான் போய் இறங்கும் நேரம் காலை விடிய காத்து இருந்தது.நான் சுரங்க பாதை வழியாக மேற்கு புறம் சென்று ஒரு பேப்பர் கடையில் தினகரன் செய்தித்தாள் தமிழில் இருப்பதை பார்த்த உடன் எனக்கு மும்பை எனது உலகம் என்ற நினைப்பு வந்தது.இங்கு எப்படி வேண்டுமானாலும் சுற்றி திரியலாம் என்று நினைவு வந்தது,.நான் சென்ற முதல் இடம் இந்தியா கேட் பகுதி பின்பு தாஜ் ஓட்டலை பார்த்துவிட்டு மும்பை நடுவில் உள்ள இளைஞர்கள் விளையாடும் கிரிக்கெட் மைதானத்துக்கு வந்தேன்.பின்பு ஒரு பிளாட்பாரம் கடையில் ஆம்லெட் இடையில் வைத்த  பிரெட் சாப்பிட்டு காலை உணவை முடித்தேன்.இருட்டும் வேலை பின்பு அந்த வழியாக பலர் நடந்து கொண்டு இருந்தனர்.ஒருவர் வந்தார்.அவரிடம் கேட்டேன்."மும்பையில் ரெட் லைட்  ஏரியா எங்கு உள்ளது "என்று.
அவர் என்னை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு "கிரான்ட் ட்ரன்க்"ரோட்டை காண்பித்தார்.நான் நடந்து சென்றேன்.வான் உயர்ந்த அடுக்கு மாடி குடியிருப்புகள்.அவை பார்ப்பதற்கு மலை போல இருந்தது.நான் நடந்து சென்றேன்.பின்பு வழி தெரியவில்லை அந்த இடம் எங்கு என்று ஒருவரிடம் விசாரித்தேன்.அவர் "பீலா ஹௌஷ்" அங்கு இருக்கு என்று கூறினார்.நான் அந்த இடம் "பீலா ஹவுஸ்" என்பதனை தெரிந்து கொண்டேன்.அந்த தெருவில் நான் அடி எடுத்து வைத்த  உடன் இரண்டு பக்கமும் பெண்கள் மேக்கப் போட்டு கொண்டு எனது கைகளை பிடித்து இழுக்க வந்தனர்.நான் அவர்களிடம் இருந்து விலகி சென்றேன்.ஒரு பெண்" பஜாஷ் ருபீ ஒன்லி  கம் " என்றாள்.எனக்கு அது ஒரு புதுமையான உலகமாக இருந்தது.அந்த தெருவில் உள்ள பார்பர் கடையில் சவரம் செய்துவிட்டு பின்பு அங்கு இருந்த ஓட்டலில் உணவு அருந்தி முடித்த பின்பு படம் பார்க்கும் நிலையில் என்னை நான் மறந்து ஒரு புதிய உலகத்தில் இருப்பது போல உணர்ந்தேன்.பெண்மையில் வீரம் மும்பையில் விதைக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டேன்.விபச்சாரம் செய்யும் பெண்களை பார்க்கும் மற்ற பெண்கள் தங்கள் வாழ்க்கை எந்த அளவு மேலானது என்று நினைத்து தங்களை  உயர்த்தி கொள்கின்றனர்.அவர்கள் தங்களது  கணவர்களுக்கு ஒரு புதிய ,நவீன ,நீ இல்லை என்றாள் எனக்கு இருக்கவே இருக்கு விபசார விடுதி என்ற நினைப்பு .இது போன்ற நினைப்பு எல்லாம் அங்கு உள்ள குடும்ப பெண்களின் வீரம் மற்றும்  துணிவுக்கும் வழி வகுக்கிறது.இந்த துணிவு குடும்ப பெண்கள்  போற்றி பாதுகாத்து வந்த தனது உடலுக்கு ,சோற்றுக்கு  கூட  வழி இல்லாத  நிலையில் ,தனது உடலுக்கு  துன்பம்  வரப்போகிறது  என்ற ஐயம்  வந்து  அந்த உடலை வைத்து சம்பாதிக்கவும் ,சுகம்  பெறவும்  என  ஒரு கல்லில்  இரண்டு மாங்காய்களை அடிக்கும் வித்தையை  விபச்சாரம் செய்யும்  பெண்களிடம் இருந்து கற்று கொண்டு உள்ளனர்.அதனால் தனது கணவனை விடவும் வீர பெண்களாக   மும்பை குடும்ப பெண்கள் திகழ்கிறார்கள்.அதாவது விபச்சாரத்தை மனதளவில் வைத்து நேர்மறையான வழியில் பல தொழில்களில் சாதனை செய்கிறார்கள்.இதனால் அங்கு உள்ள அரவாணிகள்  நிலைமை என்பது தனது உடலை வைத்து பிழைப்பு நடத்தியாக வேண்டிய கட்டாயம் மட்டும் அல்லாது அதற்கு தான் ஒரு பொருட்டல்ல என்பதனை உணர்ந்து கொண்ட அரவாணிகள் பிச்சை கேட்பது அதுவும் மும்பை ரயில்களில் கேட்பது என்பது பயணிகள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.காசு தரவில்லை எனில் தனது உடையை அனைவரும் முன்னிலையிலும் அவிழ்க்க தயாராகிறார்கள்.இதற்கு பயந்து அனைவரும் காசு கொடுத்து விடுகின்றனர்.சில அரவாணிகள் தனியாக இருக்கும் பயணியிடம் வற்புறுத்தி காசு கேட்கிறார்கள்.தரவில்லை எனில் தாக்குதலுக்கு தயாராகின்றனர்.எனவே பயந்து பயணிகள் காசு தந்து விடுகின்றனர்.அரவாணிகளிடம் இருப்பது ஆண்  பலம் உள்ள வீரம் .இவர்கள் தங்களை பெண்மையாக அடையாள படுத்தி கொள்கிறார்கள்.  இந்தியாவில் பெண்கள் பலவீனர்களாக இருந்து மனதளவில் குடும்பத்தையும் மற்ற சமூகத்திடம் "பெண் பாவம் பொல்லாதது"என்ற வசனங்கள் மூலமாக பாவமாக நினைக்க வைத்து ஆண்களை வீழ்த்துகிறார்கள்.எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் இந்த பெண்களிடம் உள்ள முழுமையானது  சுய நலம் என்ற ஒன்று ஆகும்.இந்த அளவு சுய நலம் உள்ளவர்களை  இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் காண முடியாது.சில பெண்கள் வீர பெண்களாக  தங்கள் சேவையை நாட்டுக்கு  அர்ப்பணிக்கிறார்கள் .அது இந்தியாவில் ஒரு  சதவீதம் கூட இருக்காது .அவர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்தால் கூட அதில் முழு சுயநலம் மட்டும் வெளிப்படுகிறது.இது இந்திய பெண் குலம் அவமானப்பட வேண்டிய ஒரு விஷயம்  ஆகும்.எனவே கூடுமான அளவு வரை பொது நல சேவைக்கு ஆண்களோடு ஆரோக்கிய போட்டி போடுவதற்கு முன் வருதல் வேண்டும்.ஆனால் இந்திய பெண்கள் ஆண்களை வீழ்த்த பார்ப்பது என்பது மட்டும் உண்மை.இது பெண்மை அல்ல.எனவே இந்திய ஆணும் பலவீனம் ஆக இருக்கிறான் இந்திய பெண்ணால். ஆனால் பலம் உள்ளவராக இருப்பது அரவாணிகள் ஆவர். எனவே பலம் உள்ளவனை அல்லது பலம் உள்ளவளை இந்திய சமுதாயம் ஆண்மை மற்றும் பெண்மைக்கு இடையில் உள்ள அரவாணியாக அல்லது இந்த மூன்றையும் கடந்த நிலையில் எனவே பலம் உள்ளவனை அல்லது பலம் உள்ளவளை இந்திய சமுதாயம் ஆண்மை மற்றும் பெண்மைக்கு இடையில் உள்ள அரவாணியாக அல்லது இந்த மூன்றையும் கடந்த நிலையில் அவர்கள் பூஜிக்கும்   கடவுளாக  நினைப்பதால்  இங்கு  பலம் உள்ளவர்கள் குறைவு .அவர்களும்  வேறு நாட்டில்  மறைவு .

No comments:

Post a Comment