Wednesday, 20 February 2013


நான் ஒத்து கொள்கிறேன்: 
நான் ஒத்து கொள்கிறேன். எனக்கு தமிழ் மொழி போல மற்ற எந்த ஒரு மொழியிலும் புலமை அவ்வளவாக இல்லை என்று. ஆனால் அந்த புலமையும் கொஞ்சம் என்பதையும் ஒத்து கொள்கிறேன். தமிழ் என்னை வளர்த்த மொழி .வேறு எந்த மொழியாலும் நான் வளரவில்லை.என்னுடைய வளர்ச்சி அறிவு, உடல் ர்தியில் எனக்கு தமிழ் கொடுத்தது.பொருளாதார ரீதியிலும் கொடுத்து கொண்டு இருக்கிறது. ஆனால் வேறு எந்த மொழியிலும் எனக்கு அறிவு இல்லை. உதாரணத்துக்கு எடுத்து கொண்டால் ஆங்கிலம். இது நான் மிகவும் நேசிக்கும் மொழிகளில் ஒன்று. இதற்கு காரணம் இருக்கிறது.நான் ஹாலீவுட்  படங்களை  பார்த்து பார்த்து ஆங்கிலம் பேசும் வெளிநாட்டு அம்மணிகளின் மீது மோகம் என்னுள்  உருவானதே இதற்கு காரணம்.ஆனால் அந்த ஆங்கிலத்தை இது நாள் வரையில் ஒரு நாள் கூட உணர்ந்து தமிழ் போல படித்து இல்லை.என்னவோ ஒரு மொழி இந்த மொழி சிறு வயதில் இருந்து என் மீது திணிக்கப்பட்ட மொழி.எனக்கு ஆங்கிலத்தை உணர்ந்து படிக்கும்போது எல்லாம் என் கூட ஒரு பெண் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்த சிந்தனைக்கும் ஹால்லிவுட் படங்களே காரணமாக இருக்கலாம்.அப்படி நான் ஆங்கிலத்தை ரசித்து படிப்பது ஆங்கில செய்தி தாள்களில் வரும் சினிமா பகுதிகளே ஆகும்.நான் தற்போது ஆங்கிலத்தில் புலமை பெற்றேன் என்று கூற முடியாது .நான் படித்து கொண்டே இருக்கிறேன் .ஆனால் ஆங்கிலத்தை பேச என்னால் முடியவில்லை. ஏனென்றால் அந்த ஆங்கிலம் என்னுடைய குறிக்கோளாக இருப்பதால்.அந்த குறிக்கோளை அடைய அடைய இன்னும் இன்னும் படித்து கொண்டே இருக்கிறேன்.ஆனால் ஆங்கில வார்த்தைகளை பேசி தமிழர்களை ஏமாற்ற விரும்பவில்லை.இந்த ஏமாற்றுதல்  என்ற நினைவு கூட தமிழ் திரைப்பட  நடிகைகள்  பேசும் ஆங்கில வார்த்தைகளை கேட்டு தோன்றிய எண்ணமாக இருக்கிறது.
என்னை பொறுத்தவரையில் ஆங்கிலத்தை கற்று கொண்டே இருக்கிறேன்.ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்களிடம் அதை உபயோகப்படுத்த விரும்பவில்லை.ஏனென்றால்,இதற்கு கூட என் மனது ஒரு காரணத்தை கூறுகிறது"தமிழர்கள் புத்திசாலிகள் அவர்களிடம்  ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.மற்ற மொழியினரை பார்த்தால் அவர்களை  தின்று ஏப்பம் விடுவதற்கு கூட தயங்கமாட்டார்கள்.தமிழர்களிடம் இருந்து ஒரு ஆங்கிலன் தனது காரியத்தை சமயோசிதமாக சாதித்து கொள்ள விரும்பினால் அதற்கு தமிழ் மொழி பேச கற்று இருக்க வேண்டும்"இது போன்ற எண்ணங்கள் என்னை ஆங்கிலத்தில் சிறிது புலமையாக இருந்தாலும் பேச விடாமல் தடுத்தன.உதாரணத்திற்கு  தமிழ் அல்லாத மற்ற மொழியினரை சில்லறையில் இருந்து கோடி வரை வியாபாரம் செய்தால் சுலபத்தில் ஏமாற்றி விடும் பழக்கம் தமிழர்களிடம் இருக்கிறது .இதற்கு அவர்கள் மொழி தொன்மை வாய்ந்ததாக மிகவும் அறிவு பூர்வமானதாக இருப்பதால் ஆகும்.அதனால் ஒரு இந்தியனை முட்டாள் என்று சொல்லும் சிங்களவன் ஒரு தமிழனை கோழையன் என்று சொல்வான் .ஆனால் முட்டாள் என்று சொல்லமாட்டான்.ஏனென்றால் இந்த உலகம் முழுவதும் தெரிந்தது தமிழர்களின் புலமை மற்றும் அறிவு, புத்திசாலிதனத்தை.இப்படிப்பட்ட தமிழர்களை பார்த்து உடல் கலாசாரம் பின்பற்றும்  எந்த ஒரு கலாச்சாரமும் பயப்படுவதில் தவறு ஏதும் இல்லை.ஏனென்றால்  உடல் கலாசாரத்தை  பொறுத்தவரையில் மூளைக்கு வேலை கொஞ்சம் ஆனால் உடலுக்கு அதிகம். இதனால் உடல் ரீதியிலான பல சாதனைகள் இந்த உலகத்தில் உடல் கலாச்சாரத்தால் நிகழ்த்தப்படுகிறது.ஆனால் மூளை திறன் அதிகம் பெற்று இருக்கும் தமிழ் மொழி அறிந்தவர்கள் உடல் கலாசாரத்தை பின்பற்றுவதில்லை. இதனால் உடல் கலாசாரத்தை சேர்ந்தவர்கள் தமிழர்களுக்கு முட்டாள்களாக தெரிகிறார்கள்.ஆனால் தமிழர்கள் மூளையை மட்டும் அதிகமாக உபயோகம் செய்து தனது உடலை ஆரோக்கியமாக பின்பற்றாமல் இருப்பதால் இவர்கள் அறிவு கூலிகளாக உலகெங்கிலும் தனது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.அதனால் உடல் கலாசாரத்தை சேர்ந்தவர்களுக்கு தற்கால தமிழர்கள் கோழைகளாக தெரிகிறார்கள்.இதில்  ஆங்கில  வாழ்க்கை முறை என்பது வேறுபட்டது.அது உடல் அளவிலும் சாதனை மற்றும் அறிவு அளவிலும் சாதனை நிகழ்த்தி தனது அடையாளங்களை  சாதனையாக பதிவு செய்து கொள்கிறார்கள்.இந்த வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் நான் பல படி கலாசாரத்தை சேர்ந்த தமிழ் கலாசாரத்தில் வாழ்வது என்பது இருந்தால் அது எப்படி இருக்கும். அதுவும் தமிழ் மொழியில் புலமை பெற்று இருந்தால் எப்படி இருக்கும்?எப்படி இருக்கும் என்றால்  தனது படி நிலையில் சுகம் பெற்று தனது உத்தியோகம்,குடும்பத்தை கவனித்து வரும் சமுதாய குழு தனித்துவமான தன்னை விட  வேறுபட்ட ஒரு சிறந்த கலாசாரத்தில் வாழும் ஒரு மனிதன் மாட்டி  கொண்டால் அவனை தனது எதிர்ப்பாளனாக பார்ப்பது இங்கு உள்ள பழக்கவழக்கங்களில் ஒன்று.அந்த எதிர்ப்பை அவர்கள் காட்டும் விதம் மூளை அளவில் மட்டும் இருக்கும்.அதுவே மனிதனை கொள்ளும் தன்மை உடையது.
எங்கு தனது சமுதாயத்தின் மனிதர்களால் செய்த தவறுகளை இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காண்பித்து விடுவானோ என்று வேறுபட்ட கலாசாரத்தை சேர்ந்தவனுக்கு மன ரீதியாக பல தொல்லைகள் தருகின்றனர். இதற்கு ஒரு காரணத்தையும் நமது முன்  வைக்கின்றனர். நீயும் இப்படி இருந்தால் எல்லாரும் உன்னை போலதானே இருப்பார்கள்.ஏன் ஒன்றுபடுத்தி பார்க்க வேண்டும் .இங்குதான் தனித்துவம் என்பது இல்லை.அதனால் ஒருவர் கடைபிடிக்கும் விசேஷமான விஷயத்தை மற்றவர்கள் அப்படியே காப்பி அடிக்கும் செயல் இங்கு அதிகமாக காணப்படுகிறது.இப்படி இருக்கும் ஒரு கலாசாரத்தில் அதுவும் எந்த நேரம் எந்த ஆபத்து தனது உடலுக்கு எந்த ரீதியில் வரும் என்று கணிக்கமுடியாத ஒரு பாதுகாப்பு இல்லாத கலாசாரத்தில் வாழ்ந்து கொண்டு அந்த கலாசார மக்கள் பெரும்பான்மை மொழியை பேசாமல் வேற்று நாட்டு மொழியை பேசி இவர்களிடம் திறமையாக  பொருளாதார,ஆரோக்கிய, அறிவு நிலையில் வாழ்வது,முன்னேறுவது என்பது முடியாத  காரியம் என்று நினைத்து இருந்தேன்.ஆனால் தனது படி கலாசாரத்தின் மூலம் வசதி வாய்ப்பு பெற்று வெளிநாடுகளுக்கு சென்று அங்கு திறமையை மட்டும் காண்பிக்க வேண்டும் என்பதால் சுகம் பெற முடியாமல்  திரும்பி தமிழகத்துக்கு  வந்து இங்கு உள்ள தமிழ் மட்டும் பேசும் மக்களை தனது முழு அடிமையாக பார்த்து தனக்கு தெரிந்த வேற்று மொழிகளில் சாதாரண மக்களிடம்  தனது அதிகாரத்தை செலுத்துகின்றார்கள்.இவர்கள் போன்றவர்களை தமிழ் மொழியிலேயே எப்படி பதிலடி கொடுக்கலாம் என்பதுதான் எனக்கு  தமிழ்நாட்டில் இருக்கும் மிக பெரிய சவால்.ஏனென்றால் இவர்கள் வெளிநாட்டு சென்று அடிபட்டு வந்தவர்கள்.நான் எந்த ஒரு அடியும் படாமல் தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்ல விரும்புகிறேன்.ஆனால் வெளிநாட்டு சென்று அங்கு உள்ள சூழ்நிலைகளை கண்டு வரும் இந்த அதிகாரங்கள் உள்ள அதிமேதாவிகள் தமிழக மக்களை ஏளனமாக பார்க்கிறார்கள்.தமிழ் மொழியையும் ஏளனமாக பார்க்கிறார்கள்.இவர்கள் வெளிநாட்டு செல்வது எதற்கு என்றால் அங்கு உள்ள அனுபவத்தை வைத்து தமிழகத்துக்கு வந்து அது போல கலாசாரத்தை உருவாக்குவதற்கு அல்ல.தனது குடும்பத்தை மட்டும் அது போல உயர்த்தி கொள்வார்கள்.ஆனால் அங்கு உள்ள நேர்மறை சூழ்நிலைகள் போல இங்கிருந்து தான் கற்ற கல்வி மூலம் ஒரு தனி மனிதன் வாழ ஆசைப்பட்டு தன்னை சார்ந்தவர்களையும் வாழ வைக்க நினைத்தால்,அந்த வெளிநாட்டு சென்று வந்த அதிமேதாவிக்கு பொறுக்க முடிவதில்லை.இவர்கள் அதிகாரத்தில் இருந்தால் இவர்களுக்கு கீழ் உள்ளவர்களை தான் சென்ற நாட்டவர் தன்னை எப்படி பார்த்தார்களோ அந்த பார்வையை இங்கு வந்து வீசுகின்றனர்.நான் இது போன்ற தமிழர்கள் உடன் அதிக வார்த்தைகளை பேசுவதை தவிர்க்கிறேன்.ஏனென்றால் முட்டாளிடம் பேசினால்  நானும் முட்டாளாகி விடுவோம்.நோயாளி உடன் வாழ்ந்தால் நாமும் நோயாளி ஆகி விடுவோம் என்ற காரணத்திற்காக நான் இவர்களிடம் அதிக வார்த்தை பேசுவதை தவிர்க்கிறேன்.ஏனென்றால் இவர்களிடம் ஆரோக்கிய போட்டி மனோபாவம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.ஒரு வளர்ச்சி பெரும் ஒருவனை அமுக்க மட்டும் பார்ப்பார்கள்.இது போன்றவர்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன் நீங்கள் ஒரு அமெரிக்கனிடம் உங்களது ஆங்கில திறமையை நிரூபித்து அதில் இருந்து என்ன கற்றீர்கள் என்று கேட்டால் இவர்கள் வெட்கி தலை குனிவார்கள்.ஏனென்றால் அந்த தலை குனிவு மட்டும் அமேரிக்கா  போன்ற நாட்டில் இவர்களின்  ஆங்கிலத்துக்கு இருக்கும்.நான்  பேசுகிறேன் அமெரிக்கனிடம் அமெரிக்க ஆங்கிலத்தில் திறமையாக .ஏனென்றால் அங்கு பேசப்படும் ஆங்கிலம் உலகத்தில் உள்ள அனைத்து கலைகளையும் உள்ளடக்கிய உதாரணமாக இருக்கும்.அது அறிவியல் ரீதியிலானதாக இருக்கும்.ஆனால் நான் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டது இல்லை.இனிமேல் என் பயணம் இருக்கும்.ஆனால் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஒரு சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களின் மொழியை மட்டும் பேசுவேன்.அவர்களே வேற்று மொழியை பேசினாலும் தமிழ் மொழியை தவிர வேற்று மொழியை தமிழ்நாட்டில் பேச மாட்டேன்.ஆனால் தமிழ்நாடு எல்லை தாண்டிய பின்பு எனக்கு கூடுதலாக  ஆங்கிலம்,மட்டும் பேசுவேன் ஒரு ஆங்கிலேயனை போல .ஏனென்றால் நான் ஒரு ஆங்கிலேயனாக என்னால் வளர்க்கப்பட்டதை நான் ஒத்துகொள்கிறேன்.நான் ஆங்கிலத்தில் புலமை பெற்றுகொண்டு இருக்கிறேன் உற்சாகமாக ....
                                                                                             இப்படிக்கு,
                                                                                   தமிழ்நாட்டில் ஒரு ஆங்கிலன்.
                                                                                            

                                                                                            

No comments:

Post a Comment