Wednesday, 26 June 2013

ஜூலியன் அசாஞ் .எட்வர்ட் ச்நோவ்டேன் ஆகியோர் மீது அமெரிக்காவின் எதிர்மறை செயல்பாடுகள் ஏன்?



அது என்ன அமெரிக்க சுதந்திர பொருளாதார கொள்கை?


மேற்கண்ட இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்றால் இருக்கிறது.

அமெரிக்காவின் சுதந்திர பொருளாதார கொள்கை என்பது 

1.எந்த சட்டமும் கட்டுப்படுத்தாத வியாபாரம்

2.அத்தியாவசிய பொருட்களான உணவு,உடை,இருப்பிடம்,ஆரோக்கியம்  ஆகியவற்றில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாதது.

(உதாரணம்:ஜி 8 மாநாடு நடக்கிறது என்றால் கூட அங்கு அமெரிக்க பிரதிநிதிக்கு எந்த நிலை பிடித்திருக்கிறது .அது போல செயல்படுவார்.அங்கு வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு ,சட்டத்திற்கு கட்டுப்படாதவராக இருப்பார்)

3.அசாதாரணமான சாதனை ,அதாவது சாதனை முறியடிப்பு  இவை இரண்டும் சுதந்திரத்தின் அடிப்படை தளம் .இது அமேரீக்க கலாசாரம்.


ஆனால் சமீப காலங்களில் அசாஞ்சே மற்றும் ச்நோவ்டேன் மீது அமெரிக்க அரசின் நடவடிக்கையில் ,அந்த நாட்டின் சுதந்திர பொருளாதார கொள்கை மீது சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை.மாறாக அந்த நாட்டின் அரசியல் மீது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.அவர்கள் அரசியல் நடத்த ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து செயல்படுகிறார்கள்.அது என்னவென்றால் எப்பொழுதும் மீடியாக்கள் தங்களின் செயல்பாடுகளை பற்றி விவாதித்து கொண்டு இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.அது கூட தங்களது சுதந்திர பொருளாதார கொள்கைகளை உலகெங்கும் விரிவுபடுத்துவதற்கு ஏற்படுத்த கூடிய விளம்பரமாக  உருவாக்குகிறார்கள்.

ஒரு சுதந்திரம் என்பதின் அடிப்படை தளம் எது?சுதந்திரம் என்பதின் மூலதனம் எது?என்று கேட்டால் அது "கட்டுப்பாடு"என்ற ஒரு வரியில் பதிலை கூறிவிடலாம்.

அந்த கட்டுப்பாடு என்பது உலக அரசியலில் வைத்து பொருளாதாரத்தில் சுதந்திரத்தை கடைப்பிடிக்கிறார்கள்.

அந்த அரசியல் கட்டுப்பாடுகள் மற்ற நாடுகள் மீது திணிக்கப்பட்டு, அந்த நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக திரும்பும் முன்பு தனது சுதந்திர பொருளாதார கொள்கைகள் மூலமாக அந்த நாடுகளை திருப்தி செய்கிறது. இதன் மூலம் அமெரிக்க பொருளாதாரம் வலிமை அடைகிறது.அது கால் ஊன்றிய நாடும் பொருளாதாரத்தில் தற்காலிகமாக வலிமை அடைகிறது.இது முதலீடு செய்பவருக்கும்  ,சுய  உற்பத்தி செய்பவருக்கும் இடையில் ஒரு இணைப்பை உருவாக்குகிறது.இதுவே பொருளாதார சமநிலைக்கு வழி செய்கிறது.


அமேரீக்க அரசியலில் உள்ள கட்டுப்பாடு:

1.சமீப காலமாக மற்ற நாடுகளை பற்றிய தகவல்களை சேகரித்தல் மற்றும் உலக நாடுகளை பற்றிய அமெரிக்காவின் கருத்துகள் 

2.செல்போன்,ஈமெயில் போன்ற தகவல்களை ஒட்டு கேட்பது போன்றவற்றில் வெளிப்படுகிறது.இது மற்ற நாடுகளின் செயல்பாடுகள் ,உலக நாடுகளின் பார்வை போன்றவைகளை அமெரிக்க அரசியல் அறிந்து அதற்கு ஏற்றவாறு தமது பொருளாதார சுதந்திர கொள்கைகளை விரிவுப்படுத்துவது  என்பது ஆகும்.

மேற்கண்ட இரு அரசியல் செயல்பாடுகள் கட்டுப்பாடு என்று குறிப்பிடுவது எதனால்...

அதற்கு காரணம் இருக்கிறது.இது போன்ற அரசியல் செயல்பாடுகளில் வேலை செய்பவர்கள் ஒரு இந்தியர் அல்லது ஆப்பிரிக்கர் என்று இருந்தால் அவர்களின் அடிமை மனப்போக்கு அரசியல் செயல்பாடுகளுக்கு முழு ஆதராவாக இருந்து ஒத்துப்போகிறது. அவர்களால் இந்த அரசியல் செயல்பாடுகள் வெளி உலகத்திற்கு தெரிய வருவது இல்லை.ஆனால் பரந்த உலகம் அனைத்தும் தனது வீடு என்று நினைக்கும் தனித்துவ நிலையில் சுதந்திரத்தை காண விரும்பும் வெள்ளை இனத்தை சேர்ந்தவராக இருந்து மற்றும் அந்த இனத்தில் தீவிர பற்று உடையவராக காணப்பட்டால் அவரது மனம் இந்த அரசியல் நிலை தனது பறந்த மனப்பாங்கை சுருக்க செய்து அமெரிக்க அரசுக்கு மட்டும் சேவகம் செய்யும் ஒரு அடிமையாக ஆக்கப்படுவதை உணரும் நிலையில் அது கட்டுப்பாடு என்ற நிலையை வெள்ளை இனத்தவர் மனம் அடைகிறது.கட்டுப்பாடு என்பது தான் உருவாக்க வேண்டும்,தனக்கு வெளிப்புறத்தில் இருந்து உருவாக கூடாது என்ற மன நிலையை பெற்று இருக்கும் வெள்ளை இனத்தவர் தனக்கு விதிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாட்டை உடைத்து உலகம் அனைத்துக்கும் நான் பொதுவானவன்.தன்னை அமெரிக்க அரசாங்கத்திற்குள் மட்டும் சுருக்கி விட முடியாது என்ற நிலையை அடையும்போது அமெரிக்காவின் அரசியல் செயல்பாடுகள் வெளி உலகத்திற்கு தெரிய வருகிறது.

சுதந்திர பரந்த மனப்பான்மை கொண்ட நாடுகளுக்கு செய்ய வேண்டியதை தற்போது அந்த நாடுகளின் பிரதிநிதியாக விளங்குகிற அசாஞ் மற்றும் ச்நோவ்டேன் போன்றவர்கள் மீது அமெரிக்க அரசியல் செயல்பாடு காணப்படுகிறது.

உலக அரசியலில் கட்டுப்பாடு மற்றும் பொருளாதாரத்தில் சுதந்திரம் இது அமெரிக்க நாட்டின் சமநிலை.இந்த சம நிலை உலக அரசியலில் சுதந்திரம் ஏற்படும்போது அமெரிக்க பொருளாதாரத்துக்கு  மதிப்பு குறைந்து அந்தந்த நாடுகளின் உள்நாட்டு பொருளாதாரம் சுதந்திர நிலை அடைகிறது.

உலக அரசியலில் கட்டுப்பாடு விதிக்கப்படும் நிலையில் அந்தந்த நாடுகளின் பொருளாதாரமும் கட்டுப்பாடு அடைகிறது.அந்த நிலையில் அமெரிக்க பொருளாதார கொள்கைகளை அறிமுகப்படுத்தி தனது பொருளாதார சுதந்திரத்தையும் மற்றும் அரசியல் கட்டுப்பாடுகளும் விதித்து முதலீடு செய்த நாட்டின்  பொருளாதாரம் என்ற அடையாளம் இல்லாமல் செய்து விடுகிறது.இதனால் அமெரிக்காவுக்கும் பயன்,அது முதலீடு செய்யும் நாட்டுக்கும் பயன்.அமெரிக்க பொருளாதாரம் வலுவாக இருக்கும் வரையில்....ஆனால் ஒரு நாள் அமெரிக்க பொருளாதாரம் லேசாக சரிவு நிலையை அடையும்போது அதனை சார்ந்து இருக்கும் நாட்டுக்கு அதிக அளவில் பாதிப்பு அடைகிறது.இதனால் அமெரிக்க பொருளாதாரம் தனது முதலீடுகளை எடுத்து கொண்டு தனது நாட்டில் முதலீடு செய்து பொருளாதாரம் மீண்டும் வலுவான பொருளாதார நிலையை அடையும்போது அது முதலீடு செய்த நாடு அப்பொழுது தனது உள்நாட்டு உற்பத்தியை திரும்பி பார்த்து கொண்டு இருக்கும்.மீண்டும் உள்நாட்டு உற்பத்தி சிறிது வளர்ந்த உடன் மீண்டும் அமெரிக்க பொருளாதாரம் வலிமை அடைந்து மற்ற நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி உடன் கை கோர்த்து தனது பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்துகிறது.இந்த நிலையில் இடையில் வரும் அமெரிக்க பொருளாதார கொள்கையால் தனது நம்பிக்கை பொருளாதார கொள்கையை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றி  கொண்டு இருக்கும் நாட்டின் முதலாளிகள் தொழிலாளிகளாகி அமெரிக்க முதலாளிகள் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்குகிறார்கள்.இதற்கு காரணம் மற்ற நாடுகளின் கட்டுப்பாடு பொருளாதாரம் அமெரிக்க சுதந்திர பொருளாதார கொள்கை உடன் கை சேரும்போது கட்டுப்பாட்டை விழுங்கி சுதந்திரம் ஏப்பம் விடுகிறது.இது இயற்கை.ஏனென்றால் பெரும்பான்மை மக்கள் சுதந்திரத்தை விரும்புவர்களாக இருக்கும் நாட்டில் அமெரிக்க பொருளாதாரம் வெற்றி பெறுகிறது.

மிதமான கட்டுப்பாட்டை விரும்பும் நாட்டில் அமெரிக்க பொருளாதாரம் பார்ட்னராக செயல்படுகிறது.

அதிக கட்டுப்பாடு உள்ள நாட்டில் அமெரிக்க பொருளாதாரம் கால் வைக்க முடிவது இல்லை.எனவே அந்த நாடுகளின் மக்கள் தங்கள் நாடு போல சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு அமெரிக்க அந்த கட்டுப்பாட்டு நாட்டின் மீது போர் தொடுக்கிறது.ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும் கட்டுப்பாடு மற்றும் சுதந்திரம் என்பது வெவ்வேறாக மாறுபடுகிறது.அது அவர் அவர்களின் கலாசாரத்தை பொருத்தது.ஆனால் உண்மையில் உலக நியதிப்படி போர் முறை வாழ்க்கைக்கும் மற்றும் சுதந்திர பொருளாதார வாழ்க்கைக்கும் மிக முக்கியமான பொது அடையாளம் இருக்கிறது.

அது உடல் அளவில் 

                                          1.ஒரு மனிதன் முகத்தில் மீசை தாடி  இருப்பது கூடாது .

                                           2. தலை முடி அதிகமாக இருப்பது கூடாது.

                                 3.முழுக்க முழுக்க ஆரோக்கியத்திற்கு தேவையானவற்றை மற்றும் கடைப்பிடிப்பது.

அப்படி பார்க்கும்போது அமெரிக்க சுதந்திர பொருளாதார கொள்கை மற்றும் அரசியல் கொள்கைகள் முழுக்க முழுக்க மனித உடல் ஆரோக்கியத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது.ஆனால் அது  உலக நாடுகள் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று ஆகும்.அதற்கு சுதந்திர பொருளாதார கொள்கையை மற்ற நாடுகள் எடுத்து கொள்ளும் விதத்தில் இருக்கிறது.

ஆனால் கீழ்க்கண்ட நாடுகள் அமெரிக்க பொருளாதாரத்தை எவ்வாறு பார்க்கிறது.

1.சீனா-பார்ட்னர் 

2.இந்தியா-அடிமையாகுதல் 

3.ஈரான்-தேவை இல்லை  


மேற்கண்ட இரண்டு நாடுகளும் அமெரிக்க தனத்தை ஏற்று கொள்கிறது ஆனால் ஈரான் அரசியலுக்கு இது முற்றிலுமாக பொருந்தாத ஒன்றாக இருக்கிறது.ஏன் என்றால் ஈரான் அரசியல் மத தலைவர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

இங்கு லாபம் மற்றும் நஷ்டம் இவை இரண்டையும் கருத்தில் கொள்ளாமல் ஈரான் தனது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து செயல்படுகிறது.

சீனா அமெரிக்க பொருளாதாரத்தை புரிந்து கொண்டு அதை கூட்டாளியாக ஏற்று கொண்டு செயல்படுகிறது.இது மிக சரியான முறை ஆகும்.இதை மற்ற நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தியா அதன் சுதந்திரத்திற்கு அடிமையாகி முதலில் அந்த நாட்டின் முழு கட்டுப்பாட்டுக்கு வருகிறது.

ஏனென்றால் அமெரிக்க அரசியல் கட்டுப்பாடு மற்றும் சுதந்திர பொருளாதார நிலை இந்தியாவை அதன் முழு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகிறது.சுதந்திர நிலைக்கு கொண்டு வர முடியவில்லை.

ஏனென்றால் இந்தியாவில் அரசியல் மற்றும் பொருளாதாரம் இவை இரண்டும் மதில் மேல் பூனை நிலையாக இருக்கிறது.

அந்த பூனை மெத்தையான   இடத்தை கண்டு தாவுகிறது.ஆனால் அந்த மெத்தை நிலையானது இல்லாமல் சுழன்று கொண்டு இருக்கிறது.அதற்கு ஏற்றது போல இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம் சுழல்கிறது.ஆனால் மேலே போவது மற்றும் சிறிது கீழே வருவது அமெரிக்க பொருளாதாரத்திற்கு மட்டும் பொருந்தும்.அது தனது சரிவை உடனடியாக சரிசெய்து கொள்ளும்.ஆனால் அந்த மெத்தை சுழன்ற காரணத்தால் மயக்கம் அடைந்த பூனை எழுவதற்கு நிச்சயம் பல வருட  நேரங்கள் ஆகும்.ஆனால் அந்த மெத்தைக்கு ஒன்றும் ஆவது இல்லை.

இங்கு 

            மெத்தை-அமெரிக்க சுதந்திர பொருளாதாரம் 

           பூனை-இந்தியா(அரசியல்+பொருளாதாரம்)

இந்த மாயை அறிந்து முதலில் இருந்து  தனது உள்நாட்டு உற்பத்தியை பெருக்க நினைக்கும்போது அமெரிக்க நிலையை அடைய ரொம்ப காலங்கள் ஆகும் அல்லது அடைய முடியாத நிலை கூட ஏற்படலாம்.ஏனென்றால் அளவுக்கு அதிகமான மக்கள் தொகை பெருக்கம் காரணமாக இருக்கலாம்.அதற்கு என்று நான் கூறியது "பெயர் அளவிலாவது இந்தியா மாறலாம் என்று"அந்த பெயர் (united states of bhaarat )  என்றும் ,மொழி அளவில் (ஆங்கிலம்)உயரலாம் என்று கூறினேன்.ஆனால் இந்த பெயர் மற்றும் மொழி ஆகியவை இந்தியர்களை தனித்துவ பொருளாதார நிலையில் உயர் நிலையை அடைய வைக்கும்.இதனால் இந்தியா சீக்கிரம் வளர்ந்த நாடாக முடியும்.

அமேரிக்கா இனி என்ன செய்ய வேண்டும்?

1.உலக அரசியல் கட்டுப்பாடும் மற்றும் பொருளாதாரத்தில் சுதந்திர நிலையை கடைபிடித்து தன்னை வலுப்படுத்தி கொள்ளும் சம நிலையை ச்நோவ்டேன் மற்றும் அசாஞ் போன்றவர்களால் சிறிது ஏற்ற தாழ்வு ஏற்படுகிறது.இருப்பினும் அவர்களின் பரந்த மனப்பான்மை கருத்தில் கொண்டும்,தனித்துவ சுதந்திர நிலையை கருத்தில் கொண்டும் மன்னிப்பு வழங்குவது அமெரிக்காவிற்கு பெருமை சேர்க்கும்.இந்த பெருமை தனது அரசியல் நிலைப்பாட்டிலும் மற்றும் பொருளாதார நிலைப்பாட்டிலும் சாதனை  செய்ய  உதவும்.

2. ச்நோவ்டேன் மற்றும் அசாஞ் ஆகிய இருவரும் அமெரிக்க ரகசியத்தை வெளிப்படுத்தியதற்கு காரணம்:

தங்கள் மனம் கட்டுப்பாடு என்ற ஒரு நிலையை அடைந்ததற்கு என்று முன்பு கூறினேன்.ஏன்?அமெரிக்காவில் வ மூத்த குடிமக்கள்.அவர்களுக்கு கட்டுப்படுதல் என்ற நிலை அனைத்து துறையிலும் வரும்போது அந்த துறைகள் எல்லாம் இந்தியர்களையும்   மற்றும் ஆப்பிரிக்கர்களையும் வேலைக்கு சேர்த்து விடலாமா?செய்ய கூடாது.அது அமெரிக்க புரட்சிக்கு வழி செய்யும்.வெள்ளை இனத்தவர் மனம் கட்டுப்படுதல் என்ற நிலையை அடைவதற்கு காரணம்: தங்களை ஒரு ஆப்பிரிக்கர் ஆள்வது காரணமாக இருக்கலாம்.அதனால் தனது பரந்த மனதின் சுதந்திரம் பாதிக்கப்படும் நிலை அவர்களுக்கு உருவாகிறது இந்த நிலை கட்டுப்பாடு ஆகும்.இதை உடைக்க தான் சுதந்திர பிரதிநிதி என்று உலகத்திற்கு அறிவிப்பு செய்ய வெள்ளை இனத்தவர் முயற்சிக்கிறார்.அதன் வெளிப்பாடு அசாஞ் மற்றும் ச்நோவ்டேன் போன்றவர்களின் செயல்பாடுகள்.இதனால் அமெரிக்க அதிபரை பதவியில் இருந்து ராஜினாமா செய்து விடலாமா?செய்யகூடாது.என்ன செய்ய வேண்டும்?அவர் ஆட்சி முடியும் வரையில் ச்நோவ்டேன் மற்றும் அசாஞ் போன்றவர்கள் தனது கட்டுப்பாடு நிலையை கடைப்பிடிக்க வேண்டும்.இல்லை   எனில் அமெரிக்க அரசிற்கு எதிரியாக தெரிந்து சிறை செல்ல நேரிடும்.எனவே பொறுமை,கட்டுப்பாடு ஆகிய இவை இரண்டும் நமது வெள்ளை இனத்திற்கு தற்போது தேவையான ஒன்று ஆகும்.

                                                                      இப்படிக்கு ,                         
                                                                                           சதீஷ் பிரிட்டிஷ் 

No comments:

Post a Comment