பாரதிய காங்கிரஸ் பார்ட்டி:(BCP )
இரண்டு முறை இந்தியாவை ஆட்சி செய்கிறது.பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதால் அந்த கட்சியின் சாதனைகள்,ஊழல்கள் போன்றவற்றை வெளி உலகத்திற்கு தெரிய வரும் காலம்.இந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் நடக்கும் செயல்பாடுகள் தேர்தலை குறி வைத்து இருப்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகள் அனைத்தும் தங்களது மித மிஞ்சிய செயல்பாடுகளை வெளிப்படுத்துகிற காலகட்டம் இது.இந்த ஒரு வருடத்தில் பல விஷயங்கள் நடக்கப்போகிறது. அதற்கு ஆரம்பம் சத்தீஷ்கர் காங்கிரஸ் கட்சியினர் படுகொலை.அதன் முடிவை தேர்தல் முடிவு வரும் நாளைக்கு முந்தைய நாள் நடக்கும் நிகழ்வுகளாக இருக்கும்.காங்கிரஸ் அரசை பொருத்தவரையில் மக்களின் மனதில் இருப்பது :1.ராகுல் காந்தி (இவர் ஐரோப்பிய தாய்க்கு பிறந்தவர் என்பதால் இயல்பிலேயே ஐரோப்பிய மக்களிடம் இந்தியர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு காரணமாக மக்கள் இவரை தலைவனாக ஏற்கலாம்)
2.மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை வாய்ப்பு திட்டம்
3.வாயை விட்டு என்ன முடியாத அளவிற்கு கோடிகளில் ஊழல்
போன்றவைகள் ஆகும்.
இதில் மேல் குறிப்பிட்ட இரண்டை விட காங்கிரஸ் அரசின் ஊழல் பெரியதாக மக்களுக்கு தெரிகிறது.ஆனால் காங்கிரஸ் அரசு செய்த ஊழல் மாற்று அரசு அமைந்த உடன் மக்களுக்கு தெரிய வரவில்லை.காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கும் நிலையில் இந்த ஊழல் விவகாரம் வெளிப்பட்டு இருக்கிறது என்றால் அந்த அரசு தனது நியாயமான நிர்வாகத்தை மக்களுக்கு வெளிப்படுத்துகிறது என்று அர்த்தம் ஆகும்.
உதாரணத்திற்கு:மற்ற மாநிலங்களில் ஆட்சி செய்யும் ஆளுங்கட்சிகள் செய்யும் ஊழல் அந்த ஆட்சியில் இருக்கும்போது வெளிவரவில்லை. மாற்று கட்சி ஆட்சியில் அமைந்த பின்பு முந்தைய ஆட்சியின் ஊழல் விவகாரம் வெளிப்பட்டு இருக்கிறது.முந்தைய ஆட்சியை நிர்வகித்தவர்கள் சிறைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.இது ஊழல் செய்து கொண்டு இருக்கிற ஆளும் கட்சிகளின் திறமையான நியாயம் அற்ற நிர்வாகத்தினால் ஏற்பட கூடிய சூழல் ஆகும்.ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை செய்யவில்லை.தனது திறமையான நிர்வாகத்தை நியாயமான முறையில் ஆட்சி செய்கிறது என்பது புரிகிறது.காங்கிரஸ் கட்சி செய்த ஊழல் என்று சொல்லப்படுவது ஊழல் அல்ல.இதுவரையில் இந்தியாவை ஆட்சி செய்த அரசுகளின் உண்மையான தோற்றம்.அந்த தோற்றத்தை மக்களுக்கு அறிய செய்ததால் இதுவரை ஆட்சி செய்து வந்த அரசுகளின் பாதையில் இருந்து மாறி ஊழல் இல்லாத சமுதாயத்தை உருவாக்க மற்றும் ஒரு புரட்சி பாரதத்தை உருவாக்க காங்கிரஸ் அரசு முயற்சி செய்கிறது என்பது தெரிய வருகிறது.
எனவே காங்கிரஸ் அரசு செய்யும் புரட்சியின் யுத்திகளில் எனது யோசனைகளை சில.
1.காங்கிரஸ் அரசு தனது பெயரான இந்திய தேசிய காங்கிரஸ் பெயரை எடுத்துவிட்டு "பாரதிய காங்கிரஸ் பார்ட்டி" என்ற பெயரை வைக்கலாம்.
2.அமெரிக்காவில் இருப்பது போல இரு கட்சி ஆட்சி முறை மட்டுமே
இருக்க வேண்டும்.
அந்த இரு கட்சிகல் 1. பாரதிய காங்கிரஸ் பார்ட்டி
2. பாரதிய ஜனதா பார்ட்டி
மற்ற கட்சிகள் எல்லாம் இந்த இரு கட்சிகளில் வந்து இணைந்து விடவேண்டும்.அப்பொழுது வளமான பாரதத்தை காண முடியும்.
3.அதிகாரங்கள் பிரசிடன்டாக தேர்வு ஆன நபருக்கு தரப்பட வேண்டும்.
இதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும்,ஜாதிகள் ,மதங்களும் எதிர்த்து வந்தாலும் இந்த இரு கட்சிகளுக்கு மக்களுக்காக வளமான பாரதத்தை உருவாக்கியே தீர வேண்டிய கடமை இருக்கிறது.அந்த கடமையை செய்வதற்கு நானும் ஒரு மத்திய அரசு பணியாளராக பணி புரிய தயாராக இருக்கிறேன்.ஆனால் பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்தி விவாதம் காணுங்கள்.சந்தை கடையாக உருவாக்கம் செய்யாதீர்கள்.
No comments:
Post a Comment