Thursday, 27 June 2013

உத்தர்காண்ட் மழை வெள்ளம்:
 
அழகான சுற்றுலா தலம் ,ஆன்மீக தலம் ,பனி  நிறைந்த குளிரான பிரதேசம் போன்றவற்றிற்கு சொந்தமான மலைப்பகுதி.
இங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை விட மத்திய அரசின் மீட்பு பணி இதுவரையில் உலகில் எங்கும்  நான் பார்த்து இல்லை.இதற்காக தங்கள் உயிரையும் இழந்து இருக்கிறார்கள் சில ராணுவ வீரர்கள்.மிகவும் ஆபத்தான பணியை மிக சிறப்பாக செய்து கொண்டு இருக்கும் ராணுவ வீரர்கள் மற்றும் இதர சமூக சேவகர்கள்,பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியோரை பாராட்டுவது என்பது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு ஊதிய உயர்வு,உயிர் இழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு இழப்பு தொகை  அழிப்பது மத்திய அரசின் கடமையில்  ஒன்று ஆகும்.மிக கடினமான மற்றும் உயிருக்கு ஆபத்தான வேலைகளுள் ஒன்று பேரிடர் மேலாண்மை ஆகும்.
இந்த பேரிடர் மேலாண்மையில் வேலைக்கு ஆட்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு போதிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு உயிரையும் மதிப்பு மிக்கதாக நினைத்து ராணுவ வீரர்கள் காப்பாற்றி கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் காப்பாற்றுவது எந்த உயிரை,
எதிர்மறையானவர்கள் மற்றும் நேர்மறை எண்ணம் கொண்டவர்கள்  என இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.
இதில்  எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாக ,
1.புனித மதமான இந்து மதத்தை இழிவு செய்யும்  நோக்கில் செயல்பட்ட குடும்பங்கள்
2.திருடர்கள்
3.விபச்சாரிகள்
4.போலி சாமியார்கள்
5.சோம்பேறிகள்
6.சமூகத்திற்கு எந்த வகையிலும் பயன் அற்றவர்கள்
7.பிச்சைக்காரர்கள்
மேற்கண்ட எதிர்மறையாளர்கள் தங்களது பாவங்களை நீக்குவதற்கு மற்றும் பிழைக்கவும் இது போன்ற ஆன்மீக தளங்களுக்கு வருகிறார்கள்.
ஏன் என்றால் இந்துமதம் என்பது தற்போது உள்ள நிலைமை ,
1. மேற்கண்ட எதிர்மறை செயல்கள் செய்பவர் தன்னை பாதுகாக்க  கட்டும்  கோவில்கள்.
2.சோம்பேறிகள் பிழைக்க சமுதாயத்தை பயமுறுத்தி குறி சொல்லும் நிலையை கடைப்பிடித்து உட்கார்ந்த இடத்தில் பணம் பெறுவதற்கு.
3.காம சுகம் கண்ட விபசார வேலை செய்பவர்கள்  அந்த வேலை நீடிப்பதற்கு பாதுகாப்புக்கு வருகிற இடம்.
4.திருடர்கள் பாவ மன்னிப்பு பெற்று மேலும் திருட்டு தொழிலை செய்வதற்கு.
இது போன்ற எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள்  இருக்கின்ற இடமாக தற்போது உள்ள இந்து மத சமூகம் இருக்கிறது.இவர்களையும் மத்திய அரசு மீட்பு குழுவினர் மீட்டு இருக்கின்றனர்.
இந்து மதத்தில் நேர்மறை எண்ணம் கொண்டவர்களாக ,

 
1.நேர்மையான தொழில் செய்து அதில் மீதம் இருந்த பணத்தில் ஆலயம் கட்டி அதன் மூலம் மக்கள் தங்கள் நம்பிக்கை மூலமாக கொண்டு உடல் மற்றும் உள்ளத்தில் உள்ள பாதிப்புகளை அகற்றும் இடமாக இருக்க செய்யும் நபர்கள் .
2.சமூகத்தில் வாழும் பல்வேறுபட்ட மக்கள் தங்களை புதுமையான மனிதனாக உருவாக்க மற்றும் தங்கள் குடும்பங்களின் ஒற்றுமை நீடிக்க சென்று வரும் சுற்றுலா செல்பவர்கள்.
3.தங்களது  வாரிசு ஒரு அழகான இடத்தில் உருவாக வேண்டும் என்று வருகிற தேனிலவு கொண்டாடும் புது மன தம்பதிகள்.
4.தங்கள் தொழில் துறை வளர்வதற்கு மற்றும் தொழிலில் புதிய யுக்திகள் புகுத்த சந்திப்பு நிகழ்த்த வரும் வியாபாரிகள்.
5.புதிய கதைகள்,கவிதை போன்றவற்றை எழுத புதிய இடத்தை தேடி வரும் கவிஞர்கள்.
6.பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வி சுற்றுலா.
7.இப்படி பல்வேறு மக்கள் வரும் இடத்திற்கு அவர்களை உபசரித்து தங்க இட வசதி அளித்து மற்றும் வியாபாரம் செய்து வாழும் உள்ளூர் மக்கள்.
போன்ற நேர்மறையான மக்கள் என்று இரு வேறுபட்ட மக்களை இந்திய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் இந்திய ராணுவம் ஆகிய இரண்டும் இணைந்து காப்பாற்றி இருக்கிறது.


ஒரு ஆபத்தில்                  
1.ஏழை - பணக்காரன்
2.நல்லவன்-கேட்டவன்
3.திறமையானவன்-திறமை இல்லாதவன்
இவை எதுவும் பார்ப்பதில்லை.மாற்றாக உயிரை காப்பாற்ற வேண்டும் என்று ஒரே நோக்கத்தில் செயல்படுகிற இந்திய ராணுவம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் இதர தொண்டு நிறுவனங்கள் மற்றும் செஞ்சிலுவை சங்கம் ,ரெட் கிராஷ் அமைப்புகளுக்கு  "இந்த நூற்றாண்டின் சிறந்த மீட்பு பணி"என்ற விருதை அளிக்கிறேன்.இந்த விருது பெற்று இருக்கும் சாதனையை முறியடிப்பதற்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறேன்.ஆனால் இது உண்மையான சாதனையா?என்று கேள்வி எழுப்பும்போது,உண்மையான சாதனை என்பது பேரிடர் முன் பாதுகாப்பை சிறப்பாக செய்தல் என்பது  எனது எண்ணம்.
சரியான மற்றும் உறுதியான வானிலை அறிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.இந்த விஷயத்தில் "வரும் முன் காப்பது"கூடுமான அளவு வரை சிறப்பாக செய்து "பேரிடர் மீட்பு பணி"ஒரு படி மேல் சென்று அனைத்து உயிரையும் பாதுகாப்பது சாதனை ஆகும்.
பேரிடர் கால உண்மையான சாதனை என்பது இரண்டு வகை .
1.வரும் முன் காப்பது
2. வந்த பின்பு காப்பது
என இரண்டு வகைப்படுகிறது.
1.வரும் முன் காப்பது:
-ஊடகங்கள் வாயிலாக முன் அறிவிப்பு செய்வது மற்றும் பாதுகாப்பான இடத்தில் மக்களை தங்க வைப்பது
-பேரிடர் கால பாதுகாப்பு கவசங்களை தயாராக வைத்து இருந்து அதை உபயோகிக்கும் பயிற்சிகளை மக்களுக்கு அழிப்பது
-வெள்ளம் என்றால் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லாமல்  திசை திருப்பும் வேலையில் ஈடுபடுவது.
-அத்தியாவசிய பொருட்களான உணவு,உடை,இருப்பிடம் போன்றவற்றிற்கான ஏற்பாடுகளை செய்வது மற்றும் சேமித்து வைப்பது.
-காவல்துறை மைக் மற்றும் நோட்டீஸ் மூலம் முன் அறிவிப்பு செய்வது .
2. வந்த பின்பு காப்பது :
-வரும் முன் காப்பதை சிறப்பாக செய்தால் வந்த பின்பு காப்பது எளிதாக இருக்கும்
-உயிர் இழப்பு  மற்றும் பொருளாதார இழப்பு குறையும்.
மேற்கண்ட இரண்டு மட்டும் உண்மையான சாதனை .இதில் மீண்டும் மீண்டும் சாதனை முறியடிப்பு செய்து  பேரிடர் தகவல் முன் அறிவிப்பில் தொழில்நுட்பம் சிறந்து காணப்பட்டால்  மற்றும் வளர்ச்சி அடைந்தால் பேரிடர் வந்த பின்பு ஏற்படும் இழப்பு அதிகம் இருக்காது.
இழப்பு எங்கு அதிகம் இல்லாமல் இருக்கும் இடம் சாதனைக்கு சொந்தமான இடமாக காணப்படுகிறது.
இழப்பு இல்லாமல் சக்தியை கூட்டுவது என்பது சாதனை நிகழ்த்த மற்றும் சாதனையை முறியடிக்க உதவும்.
அந்த சக்தியை அதிகரிக்க  உடல்,உள்ளம்,அறிவியல் ஆகியவற்றில் முழு ஆரோக்கிய நிலை வேண்டும்.அந்த ஆரோக்கியத்தில் சாதனை நிகழ்த்த வேண்டும்.அப்பொழுது அங்கு சாதனை முறியடிப்பு நிகழும்.
ஆனால் உத்தரகாண்டில் நடந்தது  "வரும்  முன் காப்பது 'சிறப்பாக செயல்படாத காரணத்தால்   கீழ் கண்ட இழப்பு ஏற்பட்டது,


1.உயிர் இழப்பு
2. பொருளாதார இழப்பு
பின்பு மீதம்  இருக்கிற பொருளாதாரத்தையும் மற்றும் உயிர் இழப்பையும் மீட்பதற்கு அதிக எண்ணிகையில் தேவைப்பட்டது இரண்டு,
                  1. மீட்பு படை 
                  2. நிவாரணம் 
மேற்கண்ட இரண்டிலும் மீட்பு பணியில் உள்ளபோது இழப்பு ஏற்படுகிறது.இப்படி இழப்பு மேல் இழப்பு ஏற்பட்டாலும் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை மற்றும் நடுத்தர பொருளாதாரம் உள்ள நாட்டில் மீட்பு பணியினர் செய்த செயல்கள் ஆசிய கண்டத்தை பொருத்தவரையில் ஒரு சாதனை ஆகும்.
வரும் முன் காப்பதற்கு ஒரு உதாரணம்:
ஒருவர் டென்னிஸ் பந்தை அடிக்கிறார் என்றால் எதிரில் நிற்பவர் முன்னவர் அடிக்கும் முன்பாக விழிப்புடன் இருக்க வேண்டும்.
1.அதாவது முதலில் பந்தை அடித்தவர் எந்த பகுதியில் அடிப்பார்   2.அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்.
3.அதற்கு உரிய மன திடம் மற்றும் உடல் திடம் கொண்டு தயாராக நிற்பது அவசியம்.
மேற்கண்ட இந்த மூன்றையும் காண நொடி நேரத்தில் யோசித்து  செய்தால் பந்தை எதிர்கொள்பவர் பந்து வந்தவுடன் எளிதில் எதிரில் நிற்பவருக்கு அடித்து விடுவார்.வேறு ஏதாவது யோசித்து கொண்டு இருந்து  பந்து வந்த உடன் அடித்து கொள்ளலாம் என்று நினைத்தால்,பந்து வரும் திசையை கணிக்க இயலாமல் புள்ளியை இழக்க நேரிடும்.
எனவே வரும் முன் காப்பது சிறப்பாக இருந்தால் வந்த பின்பு காப்பது  மிக எளிதாகிவிடும்.இதுவே சாதனை ஆகும்.
பேரிடரை சமாளிப்பது எளிதாக இருந்தால்  அது  பேரிடர் மேலாண்மை சாதனை எனப்படும்.

No comments:

Post a Comment