Friday, 7 June 2013

வெள்ளத்தால்  பாதிப்புக்கு உள்ளான இடத்தில்  பின்பு வரும் மனித உளவியல் ரீதியிலான பிரச்சினைகளை   மேலாண்மை செய்து அகற்றுவது: 
கிராம மக்கள் தங்கள் நம்பிக்கை வைத்து இருந்த விவசாய தொழில் சேதம் அடைந்ததும் நம்பிக்கை சிதைவு ஏற்பட்டு பல்வேறு மனவியல் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

பொருளாதார இழப்பை ஈடுகட்டும் ஆளும் அரசின் செய்கையால் புது வாழ்வை அமைத்து கொள்பவர்கள் பாதிப்பில் இருந்து மீண்டவர்களாக காணப்பட்டனர்.

அரசுகளின் உதவியை நம்பியே வாழும் நிலைக்கு தன்னை தயார்படுத்தி கொண்டவர்கள் தாழ்வு நிலையை அடைகின்றனர்.
எனவே வெள்ள பாதிப்பால் சமூகத்தில் இரு தரப்பினர் உருவாகின்றனர்.

இதில் மீண்டு வாழும் மனிதன்  மகிழ்ச்சி,பெருமை,அன்பு,உற்சாகம் போன்ற ஆக்கப்பூர்வ எண்ணங்களை கொண்டு சிறப்பாக வாழ்ந்தனர்.

அரசு உதவியை நம்பி வாழும் மனிதன்  பயம்,குற்ற உணர்வு,வெறுப்பு,பொறாமை,தோல்வி மனப்பான்மை போன்ற எதிர்மறை அடையாளங்களை கொண்டு காணப்படுகின்றனர்.

அரசு உதவியை நம்பி வாழபவர்கள் :இவர்கள் புதிய தொழில் அனுபவங்கள்,வேலை வாய்ப்புகள் போன்றவற்றை தனக்கு உருவாக்கி கொள்ளாமல் அரசாங்கம் கொடுத்த பழைய இலவசங்களின் நினைவுகளை வைத்து சிந்திக்கின்றனர்.

இதனால் தம்மை அறியாமல் எதிர்மறை சிந்தனைகளுக்கு ஆளாகின்றனர்.இது அவர்களின் ஆழ் மனதில் நடைபெறுகிறது.
அவர்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்காத பொழுது திருடுதல்,கொலை செய்தல்,பயங்கரவாதம் போன்ற செயல்களை செய்து ஆரோக்கிய சமூகத்திற்கு எதிராக  உருவாகிறார்கள்.

எனவே இது போன்ற சமூக குழுக்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆழமான நிலையில் ,அரசாங்க வேலைவாய்ப்புகள்,தனியார் வேலை வாய்ப்புகள் மற்றும் இதர தொழில் தொடங்க அரசு சலுகைகள் போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது  பொருளாதார நிலையில் ஒரு சமூகத்தை நான் செய்த மனித  மேலாண்மை ஆகும்.
இதற்காக ஆரோக்கியமான பொருளாதார சமுதாயமாக நாம் உருவாக கடுமையாக உழைக்க வேண்டும்.

No comments:

Post a Comment