அது என்ன பாரதம்?அது என்ன அமேரிக்கா?
அமேரிக்கா என்று பெயர் வந்ததற்கு அந்த கண்டதை முதலில் கண்டுபிடித்த அமெரிக்கோ வெஷ்புகி என்ற மனிதரின் பெயரால் அமேரிக்கா என்ற பெயரால் அந்த மண் வளர்ந்து இருக்கிறது.அங்கு மனிதத்துக்கு மற்றும் மனித ஆற்றலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.மதம் பிடித்து பிடித்த மதத்துக்கு முக்கியத்துவம் தந்து அமெரிக்க நாடு சென்று கொண்டு இருக்கவில்லை.
பாரதம் என்றால் பரதன் என்ற மகாராஜா ஆண்ட வளமான புண்ணிய பூமி பாரதம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பாரதம் வடக்கு இமையமலையை தாண்டியும்,தெற்கு இலங்கை தீவை சேர்த்தும் ,மேற்கு இலட்ச தீவுகள் வரை விரிந்தும்,கிழக்கு வங்காளதேசத்தை தனது சொந்த மண்ணாக ஏற்று கொண்டும் காணப்படுகிறது.பாரதத்தில் மனிதத்துக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.ஆனால் இந்தியா என்றால் இந்து மதத்தை மட்டும் தாங்கி செல்கிறது.இந்தியாவில் மதத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுகிறது.அதனால்தான் நாட்டின் பிரதமர் கூட மத அடையாளத்துடன் இருப்பவராக இருக்கிறார்.அதனால் மனிதத்துக்கு ,மனித ஆற்றலுக்கு முக்கியத்துவம் தருவதற்கு இந்தியா தனது அனைத்து மத அடையாளத்தையும் உடைத்து எரிந்து மீண்டும் வளமான பாரதமாக உருவாக வேண்டும்.
ஆட்சி மொழியாக ஏன் ஆங்கிலம் இருக்க வேண்டும்?
இந்த மண்ணை ஒருங்கிணைத்து ஆண்ட பரதன் என்ற மகாராஜா ஆட்சிக்கு பின்பு சாதி, மத சண்டைகள் நிரந்து, பல அந்நிய படை எடுப்புகள் நிகழ்ந்து பாரதம் பிரிந்து கிடந்த நேரத்தில் அதை முழுமையாக ஒருங்கிணைத்து ஆட்சி புரிந்த பெருமை ஆங்கில ஆட்சியையே சேரும். அதுவும் மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்து இருக்கிறார்கள்.அவர்கள் தந்த ஒற்றுமைக்காக மரியாதை மற்றும் கௌரவம் செலுத்தும் விதமாக ஆட்சி மொழியாக ஆங்கிலத்தை மட்டும் உருவாக்க வேண்டும். மற்ற எந்த மொழியையும் வளர்க்க தனி பல்கலை கழகம் உருவாக்கி அந்தந்த மொழிகளில் ஆராய்ச்சி செய்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும்.ஆனால் அரசு சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்திலும் மற்ற மொழிகள் இருக்க கூடாது.ஆங்கிலத்தை தவிர.இதுதான் வளமான மனித ஆற்றல் மற்றும் மனித முக்கியத்துவம் கொடுக்க கூடிய மீண்டும் வளமான பாரதம் உருவாக வழி வகுக்கும்.
No comments:
Post a Comment