Thursday, 6 June 2013

மனித மேலாண்மை என்பது என்ன ?
மனிதன் ஒரு பால் ஊட்டும் விலங்கு இனத்தை சார்ந்தவன். ஹோமோ சேப்பியன் என்ற குரங்கில் இருந்து பரிமாண வளர்ச்சி அடைந்ததாக அறிவியல் கூறுகிறது.

எனவே மனிதன் ஒரு விலங்கு.இந்த விலங்கை எவ்வாறு மேலாண்மை செய்வது?அது என்ன மனித மேலாண்மை.
ஒரு சமூகம் என்றால்,
                                                1. முறையான வாழ்க்கை
                                                2. முறை இல்லாத வாழ்க்கை 
                                                3.மேல் கூறிய இரண்டும் சரி சமமாக இருக்கும் வாழ்க்கை  என்று மூன்று வகையிலாக இருக்கிறது.

இதில் முறையான வாழ்க்கை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக கூறப்படுவது:கற்பு, வீரம்,செல்வம்  ஆகும்.இந்த மூன்றையும் நிறைந்த பாதுகாப்பான வாழ்வாக கூறப்படுகிறது.

முறையற்ற வாழ்க்கை என்பது பலதார உறவு, அச்சம், ஏழ்மை   என மூன்றும் முறையற்ற வாழ்வு எனப்படுகிறது.

இவை இரண்டும் சரி சமமாக இருக்கும் கலாசாரம் சேர்ந்த சமூகம் 
மூன்றாவது வகையில் ஆனது.இங்கு பிரச்சினைகள் உருவாகுவதற்கு அடிப்படை தளம் அமைக்கப்படுகிறது.

ஏற்ற தாழ்வுகள் நிறைந்த ஒரு சமுதாயம் பிரச்சினைகளை உறபத்தி செய்யும் தொழிற்சாலை ஆகும்.

இங்கு ஒன்றுபடுத்தி பார்த்தல்,சண்டை,அடிமை நிலை போன்றவைகள் தாழ்வு நிலைகளாக காணப்படுகிறது.

ஒன்றுபடுத்தி பார்த்தல் ,அடிமைப்படுத்தும் நிலை,சட்டத்தை பணத்தால் இயக்குவது போன்றவை உயர்ந்த நிலைகளாக காணப்படுகிறது.

இது போன்ற ஒரு சமுதாயத்தில் மனிதர்களை மேலாண்மை செய்யும்போது இரு தரப்பினரும் ஏற்று கொள்ள கூடிய பொது விஷயங்களை பரந்த மன நிலையோடு வெளிப்படுத்துதல் வேண்டும்.

இங்கு மனித மேலாண்மை தாழ்வு நிலையில் உள்ள ஒரு சமுதாயத்தை பொருளாதாரம் அளித்து, ஒரு படி உயர்வு நிலையான ஏற்ற தாழ்வு நிறைந்த உலகில் அவர்களின் பிரச்சினைகளான  மனவியல்,உடலியல் கோளாறுகளை கண்டறிந்து, அவற்றை நீக்கி, அவர்கள் நேர்மறையான மற்றும் திறமையான பாதையில் மேல் நிலையை அடைய வைப்பது மனித மேலாண்மை ஆகும்.

இந்த மனித மேலாண்மை ஒரு வளர கூடிய மற்றும் வளர்ந்த சமுதாயத்துக்கு பொதுவாக இயற்கை பேரிடர் நேரத்தில் செய்ய வேண்டி உள்ளது.அப்பொழுது இயற்கை பேரிடர் பாதிப்பில் இருந்து மக்கள் எளிதில் மீண்டு விடுவார்கள்.

No comments:

Post a Comment