Friday, 17 May 2013


IPL  கிரிக்கெட் சூதாட்டம்:
                 

இதுநாள் வரை இந்த விளையாட்டில் தற்போது மூன்று வீரர்கள் எந்த  காரணங்களுக்காக கைது  செய்யப்பட்டார்கள் ,அந்த காரணங்கள் நடக்காமல் இருந்தால் மட்டுமே ஆச்சரியம்.அது எப்படி  இந்த விஷயத்தில்  தங்களை  நியாயமான  உறுதியானவர்களாக   காட்டி கொள்ள அதிகாரங்கள் முயற்சி செய்கிறது.
இந்த போட்டி முழுக்க முழுக்க வியாபார நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.
வியாபாரிகள்   விலை  கொடுத்து  வீரர்களை  வாங்கி  இருக்கிறார்கள் .ஒரு  பொருளை  விலை  கொடுத்து  வாங்கும்   வியாபாரிகள்  அதைவிட  நல்ல  விலை  கிடைத்தால்  வாடகைக்கு  விடுவதும் ,விற்பதும்  தொழில்முறை  வர்த்தகத்தில் இருக்கின்ற  முக்கியமான  பழக்கங்களில் ஒன்று .இது   ஒன்றும்  புதியது  இல்லை.முதலில் சூதாட்டம் என்று கைது செய்து இருக்கும் வீரர்கள் கைது செய்வதற்கு முன்பு.IPL  தொடர்புடைய  அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.அதாவது எந்த வீட்டில் டிஷ் வாங்கி வைத்து இருக்கிறார்கள் அங்கு போய் IPL  பார்க்கலாம் என்று நினைக்கும்  பொது தேர்வு எழுத இருக்கும் பொறுப்பு இல்லாத மாணவன்  முதல் வீட்டில் நன்றாக    சாப்பிட்டு  தூங்கி  மாலை  ஆனதும்  IPL போட்டிக்கு  சென்று  பார்க்கும்  பொறுப்பு இல்லாத சோம்பேறி பார்வையாளர்கள்  வரை கைது செய்துவிட்டு  பின்பு  கிரிக்கெட் வீரர்கள் மீது  கை  வைக்க   வேண்டும்.
வீணாக வியாபார நோக்கில் செயல்படும் எந்த ஒரு விஷயத்தையும் தடை செய்தால் அது அரசுக்கு மிகப்பெரும் இழப்பு ஆகும்.
அதற்காக மக்களுக்கு தீங்கு அளிக்கும் வியாபாரத்தை செய்துவிடலாமா?
இங்கு ஏமாற்றுதல் ,சூதாட்டம் போன்ற காரணங்களுக்காக வழக்கு போடப்பட்டு இருக்கிறது.யாரை ஏமாற்றினார்கள்.நாட்டுக்காக விளையாடி நாட்டின் மேல் கரையை ஏற்படுத்த செய்தார்களா?இல்லை அவர்கள் வேலையை அவர்கள் செய்து இருக்கிறார்கள்.இது முழுக்க முழுக்க வியாபார நோக்கில் கொண்ட ஒரு விளையாட்டு    ஆகும்.ஒருவனின்   விளையாட்டு   மற்றும்   செயல்பாடு   எப்பொழுது   மற்ற   மனிதனுக்கு   மற்றும்  சமூகத்திற்கு   தீங்கு விளைவிக்கிறது   அப்பொழுது  அது தடை செய்யப்பட வேண்டும்.வீரர்கள் கைது செய்யப்பட வேண்டும்.இவர்கள்   பணத்தை  பதுக்கி  இருந்து  அந்த பணத்திற்கு    வரி    கட்டாமல் வரி ஏய்ப்பு செய்து  இருந்தால் அதற்கு  உரிய  நடவடிக்கை CBI எடுக்க   வேண்டும்.அதற்காக அவர்களின்  கிரிக்கெட் வாழ்வுக்கு   ஆயுட்கால   தடை விதிப்பது      என்பது     பாரதத்தின்   நேர்மறை  வியாபார சந்தையை  மூடுவதற்கு   சமம்    ஆகும்.

No comments:

Post a Comment