Friday, 17 May 2013

மழை இல்லாத தமிழகம்:
                                                
எறும்புகளின் அவசர கால
         அணிவகுப்பை காணமுடியவில்லை....
தவளைகளின் காம புலம்பல்கள்
               சகதிகள்  இல்லாமல் கேட்கவில்லை....
மழைத்துளியை தாங்கி முத்தமிடும்
              மாற இலைகளின் உதடுகள் காய்ந்து இருந்தது.....
வசந்த காற்றுகள் கனமழை சுமந்து
              ஜன்னல் ஓரம் எட்டவில்லை ......
மழை துளி உடன் மண் உடலுறவு செய்யும்போது 
             வரும் வாசனை இல்லை.........
குளத்தில் தனது பெரும்பான்மை இழந்து
            ஆட்சியை இழந்து இருந்தது ஆகாய தாமரை....
தொட்டால் சுருங்கும் தாவரம்  குறைந்த ஓட்டு வித்தியாசத்தில்
              வெற்றியை தொட்டு ஆட்சியை பிடித்து இருந்தது.....
ஊருக்குள் புதிய விருந்தாளி
             கடல் நீரின் வரவு.......
ஒரு லிட்டர் நீரில் ஒன்றரை  கிலோகிராம்  உப்பு
             உருவாக்கலாம் போல் இருந்தது....
காதலர்கள் முத்தம் இடுவதை தவிர்த்தனர்
             காக்கிறது  ,உப்பு நீர் பட்ட உதடுகள்...
வேற்றுமையில் ஒற்றுமை
           வியர்வை, நிலத்தடி நீர் ஒன்றாகி இருந்தது....
ஊர் ஒரு சனி கடவுள்  சந்நிதி
          அனைத்து பறவைகளும் காணாமல் போயிருந்தது
காகங்களை  தவிர.................
மழை ஏன் வரவில்லை
            மனிதர்களிடம்  மானம் அழிந்த நிலையா?
பாவம் என்னும் கடலில் மிதக்கும் நிலையா?
கேட்டேன் எனது ஆன்மாவிடம்
              ஆம் என்றது...........
ஆனால் இந்த பாவம் என்பது
               அறிவியலுக்கு தெரியாதாம்
மழை இல்லாத பாவ பூமியில்
                என்ன  தொழில் தொடங்கலாம் என்று யோசிக்கிறது....
அறிவியல் என்ன செய்யும்?
               உப்பு நீரை  நல்ல குடிநீராக மாற்றும்
இயற்கையை அழித்து தொழிற்சாலைகள் உருவாக்கும்
              விவசாயத்தை அழித்து வீட்டு மனைகள் உருவாக்கும்
கற்பை அழித்து கள்ள காதலை உருவாக்கும்
             இரவும் பகலும் ஒன்றாகும் மின்சாரத்தால்....
பூமியை தாண்டும்...பூமியை தோண்டும்.......
               ஆனால் மழையை வரவழைக்க முடியுமா?
அந்த கன மழைக்கு காரணமான
                கரிய மேகத்தை  உருவாக்க முடியுமா?
கரு மேகம் தரும் ஈர காற்று
                 உடம்பில் பட்டு மயிர்கள் சிலிர்ப்பு அடைந்ததா ?இல்லை
ஏனென்றால் பாவம்!பாவம்!பாவம்!
               இந்த பாவம் என்னும் பொருளுக்கு விலை இல்லை
    இலவசம் என்றால் இந்த மக்கள்
                இமயமலையை கூட தனது இல்லத்துக்கு
                                                       கொண்டு வருபவர்களே!
பாவத்துக்கு விலை நிர்ணயம் செய்தால்
                  மக்கள் அதை செய்ய தயங்குவார்கள் ....
எனவே பாவம் விலை ஏற்றம் பெறட்டும்
                     மக்கள் உபயோகம் செய்யாமல் இருப்பதற்கு............




           
              
              

No comments:

Post a Comment