வாழ்க்கை தேர்வுகள்:
பல தேர்வுகள் நடக்கிறது அதை பலரும் எழுதி கொண்டு இருக்கிறார்கள் .சில பாடங்கள் சில வருடங்களுக்கு ஒரு முறை மாற்றப்படுகிறது.அந்த பாடங்களை அப்படியே புரிந்து படிப்பவர் மற்றும் மனப்பாடம் செய்து படிப்பவர் என பல ரகம் உள்ளவர்கள் தேர்வுகள் எழுதுகிறார்கள்.இருப்பினும் இந்த தேர்வுகளில் அறிவாளிகள், புத்திசாலிகள் ,முட்டாள்கள்,அதிர்ஷ்டசாலிகள் இவை எதுவும் மதிப்பிடுவதில்லை . மாணவர்கள் நன்றாக படித்து இருக்கிறார்களா ?.மூளையில் சேகரித்து வைத்து இருக்கிறார்களா ?அதை வெள்ளை தாளில் வெளிப்பட செய்தார்களா?.என்பது மட்டுமே இங்கு மதிப்பிடப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.இவ்வாறு தேர்வு எழுதுபவர்கள் மேல் நிலை கல்வி ஆண்டில் இருந்தால் அவர்கள் அடுத்த கல்லூரி படிப்பை தேர்ந்து எடுக்க மீண்டும் அதே தேர்வுகள் பின்பு அதிலும் மதிப்பிடப்பட்டு அவர்கள் பல கல்லூரி வாசலில் அடி எடுத்து வைக்கின்றனர்.சிலர் எந்நேரமும் நான் திறமையானவன் இவர்கள் நல்லவன் என்பது (இவர்கள் சார்ந்த கலாசாரத்தை தீவிரமாக கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள்)அது போதும் .எனது படிப்பு ,வேலை எல்லாம் எனக்கு அடுத்த நிலை.என்று நினைத்து தேர்வை சந்திப்பவர்கள் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும் கவலைப்படுவதில்லை.அவர்களுக்கு அவர்கள் கலாச்சாரம் முதல் இடம்.ஆனால் சிலர் இருக்கிறார்கள் .போட்டி நிறைந்த இந்த உலகில் தனது குழந்தையை புத்தக அறையில் வைத்து பூட்ட கூட தயங்க மாட்டார்கள்.புத்தகங்களை நேசிக்க வேண்டும்.அது தனக்காக தனது சுய புத்தியை வெளிப்படுத்த ,தனது சுற்றுபுறத்தை ஆரோக்கியமாக வழி நடத்தி செல்ல பயன்படுவது என்று உணர்ந்து படிக்க வேண்டும்.அப்படிப்பட்டவர்கள் முதலில் புத்தகங்களை படிக்கும்போது அவர்கள் தன்னை,இந்த உலகை மறந்த நிலையான மிக உயர்ந்த நிலையான யோக நிலையில் இருப்பார்கள். இந்த நிலையில் அவர்கள் அனைத்தையும் அறிய வாய்ப்பு ஏற்படுகிறது.அவர்கள் அறியாமல் தினசரி செய்திகள் அவர்கள் காதுகளில் அனிச்சை செயல் போல வந்து விழுகிறது .அவர்கள் ஆரோக்கியமான உலகத்தை படிப்பவர்களாக ஆரோக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் தனது கலாசாரம் முதல்,அடுத்து படிப்பு,அடுத்து வேலை என்று இருப்பவர்கள் மட்டும் ஆவர்.இவர்கள் நிலையான கலாசாரதை தனது உணர்வுகளில் மேலோங்கி இருப்பதனால் மற்ற இரண்டு நிலையற்ற விஷயங்களான படிப்பு,வேலை இவைகளில் வெற்றி மற்றும் தோல்விகள் ஏற்பட்டாலும் இவர்களை பாதிப்பு அடைய செய்வதில்லை. தோல்வி ஏற்பட்டால் உடனடியாக எழுந்து வெற்றி பெரும் மன நிலையை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.வெற்றி ஏற்பட்டால் அடுத்த வெற்றி பெறுவதற்கு தயாராகிறார்கள்.வெற்றியால் இவர்கள் கலாசார பெருமிதம் மற்றவர்களை தாழ்த்த எண்ணுவது இல்லை.தோல்வியால் இவர்கள் மனம் தளர்வது இல்லை .இவர்கள் மற்ற கலாசாரத்தை கடைப்பிடிப்பவர்கள் வெற்றியை பார்த்து பொறாமை செய்வது இல்லை. அவர்களிடம் இருக்கும் ஆரோக்கிய பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதில் தயங்குவது இல்லை .ஆனால் இது எல்லாம் இல்லாதவர்கள் கலாசாரம் அற்றவர்கள் ஆவர்.இவர்கள் மேற்சொன்ன கலாசாரம் உள்ளவர்களிடம் இருந்து முற்றிலும் எதிரான பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பவர்களாக இருக்கிறார்கள்.உதாரணத்திற்கு தனது நிலை என்ன என்று நினைத்து பார்க்காத இவர்கள் கலாசாரம் அற்ற நிலையில் கிடைத்த வெற்றியை வைத்து கலாசாரத்தை கடைப்பிடிக்கும் மனிதர்களை தாழ்த்த செய்யும் வார்த்தைகளை வீசுவார்கள்.இதில் மனம் தளர்ந்து இவர்கள் அடைந்த வெற்றியான முறை தவறிய பாதையில் சென்று அடைந்த வெற்றியை அடைய தனது கலாசாரத்தை தூக்கி எரிய கூடியவர்கள் தனது உயிரையும் தூக்கி எரிந்து விடலாம் என்று நினைப்பார்கள் .இன்றைய நவீன காலத்தில் வெற்றி பெறுவதற்கு திறமை ஒன்று மட்டும் போதும் .மற்றவை எதுவும் கணக்கிடப்படுவதில்லை .அந்த வெற்றியாளன் ஒரு தூக்கு தண்டனை பெற இருக்கும் சிறை கைதியாக இருந்தாலும் சரி .கடுமையான உழைத்து படித்து 1160 மதிப்பெண்கள் வாங்க முடியும் .இந்த நிலைமை இன்று காணப்படுகிறது.எனவே படிப்பு ,வேலை போன்றவற்றிற்கு தேர்ந்தெடுக்க தேர்வுகள் நடத்தப்படலாம் .அதில் வெற்றி, தோல்விகள் ,எதிர்பார்ப்புக்கு மாற்றாக போன்றவை நிகழலாம் .ஆனால் இவை எல்லாம் தனது சிறப்பான கலாசார வாழ்வை பாதித்து விடுதல் கூடாது .கலாசாரம் என்னும் பெரிய பூங்காவில் அங்கம் வகிக்கும் சிறிய புற்கள் படிப்பு மற்றும் வேலை என்பதை உணர வேண்டும்.அந்த சிறு புற்கள் காய்ந்து விட்டால் மொத்த பூங்காவை இழுத்து மூடிவிடுதல் முடியுமா ?முடியாது .அந்த பூங்காவில் உள்ள புற்கள் காய்ந்து போனால் வேறு எவ்வளவு புற்கள் அங்கு விளைந்து இருக்கிறது .அதை வளர்த்து எடுக்க முடியுமா? என்று கருதி செயல்பட வேண்டும்.அப்பொழுது வாழ்க்கை தேர்வில் நாம் முழு வெற்றி பெற்று இருப்போம் .அந்த வெற்றியில் படிப்பு,வேலை போன்றவற்றில் வெற்றி பெறுவது சிறிய வெற்றியாக தோன்றும் .அவை சிறியவையாக தோன்ற கலாசார வாழ்வை கடைப்பிடித்து வாழ்க்கை தேர்வில் வெற்றி பெறுவோம்.அப்பொழுது வாழ்க்கை ஆரோக்கியம்,செல்வம்,அறிவு மூன்றும் பொலிவு இழக்காமல் நிலைத்து இருக்கும்.
No comments:
Post a Comment