Sunday, 19 May 2013

சட்ட விரோதமாக ஆயுதம் வைத்து இருப்பது குற்றமா?நடிகர் சஞ்சய் தத் தனது தலையணையாக ராமாயணம் புத்தகத்தை வைத்து இருப்பதால் அவரை விடுதலை செய்யலாமா ?இவ்வாறு வினா என் முன் கேட்டால் , அதற்கு பதிலாக சஞ்சய் தத் செய்தது குற்றம் ,ஆனால் அப்படி  யோசித்தால் இந்த பாரத்தில் உள்ள அனைவரையும் கைது செய்து ஐந்து ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்.சஞ்சய் தத்துக்கு தாவூத் இப்ராஹிம் போன்ற நிழல் உலக தாதாக்களின் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.இன்றைய நல்ல மனிதனாக இருப்பவன்  ஒருவனுக்கு பலரது பழக்கம் இருக்கிறது.அந்த பழக்கத்தில் அவனிடம் இருந்து சில பாதுகாப்பு கருவிகளை தனது பாதுகாப்புக்காக வாங்கி  வைத்து கொள்கிறார்கள் .ஆனால் அந்த நல்ல மனிதன் நாளைக்கு இந்த நாட்டுக்கு ஒரு தேச துரோகி என்று தெரிய வரும்போது அவனிடம் இருந்து ஆயுதம் வாங்கியவர்கள்    தேச  துரோகிகள்.அதுவும் சட்ட அனுமதி இல்லாமல் ஆயுதம் வைத்து இருப்பது மிகப்பெரிய குற்றம்.இதை நான் ஒத்துகொள்கிறேன்.
                                             

இதற்கு ஒரு உதாரணம்:வக்காரமாரி ஊராட்சியில் 18.05.2013 இரவு  10:00 மணி  அளவில்   ஒரு சம்பவம்   நடந்தது.அரசியல் போஸ்டர் ஓட்டும் தகராறில் இரண்டு  பேர்  அடித்து  கொண்டனர் . அதில்  ஒருவன்  செங்கல்  எடுத்து  மற்றொருவன்   தலையில்  அடித்தான் .அடி வாங்கியவன்   வலி தாங்க  முடியாமல்   தனது கையால்  திருப்பி  பலமாக  அடிக்க  ,இடையில்  வந்த  அவர்களது  பெற்றோர்கள்  அடி  வாங்கி கொண்டு  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  இருக்கிறார்கள் .செங்கல்லை ஆயுதமாக பயன்படுத்திய தலித் இளைஞர்   பெயர்  ஆ. அருண்
தாஸ்(+2 fail student :age:16),திருப்பி தனது கையை ஆயுதமாக ஈடுபடுத்திய தலித் இளைஞர்  பெயர் (மாரியப்பன் -tiles worker :age:26).இதில்  ஆயுதம் ஒருவனுக்கு அங்கு  கிடந்த  ஏதேனும்  ஒரு பொருளாகவும் ,மற்றொருவனுக்கு  தனது கைகள்  ஆயுதமாகவும்  இருந்து இருக்கிறது.அது  பாரதத்தில்  உள்ள ஒவ்வொருவரும்  ஏதேனும்  ஒரு ஆயுதத்தை பயன்படுத்துகின்றனர் என்பது தெரிகிறது.   தனது பாதுகாப்புக்காக  பயன்படுத்துகின்றனர் .இந்த ஆயுதம் வைத்து இருந்த விவகாரத்தில்
நடிகர் சஞ்சய் தத்துக்கு எனது தீர்ப்பு:
தற்போதைய  தீர்ப்பு  :5 ஆண்டுகள் கடுங்காவல்  தண்டனை (இந்த தீர்ப்பை நான் நிராகரிக்கிறேன்)

சஞ்சய் தத் வழக்கில்  எனது தீர்ப்பு :
அபராதம் :ரூபாய்  30 கோடி 
இந்த தொகையை  மும்பை  குண்டுவெடிப்பில்  காயம்  அடைந்த  மற்றும்  பலியான  குடும்பங்களுக்கு  பகிர்ந்து  அளிப்பது .
ஒரே  நபர்  சட்ட விரோதமாக ஒரு முறை  ஆயுதம் வைத்து இருந்தால் 
அவருக்கு  அபராதம் :30 கோடி அல்லது மூன்று ஆண்டு ஜெயில்
இரண்டாவது  முறை :60 கோடி அல்லது ஆறு ஆண்டு ஜெயில்
மூன்றாவது  முறை :5 ஆண்டு  ஜெயில் 50 கோடி   அபராதம் 
ஆயுதத்தை பயன்படுத்த முயற்சி;பயன்படுத்துதல்:10 ஆண்டு கடுங்காவல் தண்டனை
உயிர் சேதம் விளைவித்தால்:மரண தண்டனை 
பொருள் சேதம் விளைவித்தால்:இரு மடங்கு இழப்பீடு அல்லது ஆயுள் தண்டனை
இந்தியாவில்  உள்ள அனைத்து  மக்களும்   தனது பாதுகாப்புக்காக தனது வீட்டில்  கத்தி ,கோடரி ,அரிவாள்  ,போன்றவை  உபயோகம்  செய்கிறார்கள் .அப்படியே  குற்றமாக  கருதினாலும்  நடிகர் சஞ்சய் தத் தீவிரவாதிகளின்  தொடர்பு அவரை அறியாமல்  ஏற்பட்டு  இருப்பதால்(போதை நிலையில் இருக்கலாம் ) அவருக்கு  உரிய  தண்டனை  அதிக  பட்ச  அபராதம்  ஆகும் .

No comments:

Post a Comment