Monday, 20 May 2013

இந்திய  பத்திரிகைகள்:
                               



இன்றைய உலகில் எவ்வளவு கேவலம் அடைந்தாலும்,வெட்கம் அடைந்தாலும்,வேதனை அடைந்தாலும் அதை எதையும் வெளியில் காட்டி கொள்ளாமல் இந்தியாவின்  25 சதவிகித உண்மை மற்றவை  போலிகள்,கற்பனைகள் போன்றவைகளை அடிப்படையாக கொண்டு மிக சிறப்பாக வழி நடத்தி கொண்டு இருப்பது ஊடகங்கள் என்றால் அது உண்மை ஆகும்.அந்த ஊடகம் என்னும் சொல்லில் இந்திய ஆட்சி அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது செய்திதாள்கள் மற்றும் தொலைக்காட்சிகள் ஆகும்.உதாரணத்திற்கு ,சீன ஊடுருவல் ,சீன பின்வாங்கல் ,பாகிஸ்தானின் தோற்றம்,அமெரிக்க தோற்றம் ,இந்திய அரசின் தோற்றம் என்று எதுவாக இருந்தாலும் ஆதாரம் கால் பங்கு இருந்தாலும் முக்கால் பங்கு கற்பனையாக எழுதி இந்திய மக்களின் உணர்வுகளில் நஞ்சை விதைத்து அதில் அரசியல் நடத்தும்  அரசியல்வாதிகளுக்கு முழு ஆதரவாக  இருக்கும் செய்திதாள்களின் சமயோசித அறிவை பாராட்டியே ஆக வேண்டும்.இன்று உண்மையான ஜனநாயக மக்களுக்கும் ,ஆளும் அரசாங்கத்திற்கும் உள்ள இடைவெளி எவ்வளவு என்பதை கூட வெளிப்படுத்தாமல்  தனது செய்திகளை வெளியிடும் செய்திதாள்கள் தந்திர புத்தியையும் பாராட்ட வேண்டும்.ஓட்டு போடும் நிகழ்வுகளில் இருப்பது  ஜனநாயகமா?அல்லது இயந்திரத்தில் இவர்களே மாற்றம் கொண்டு வந்து வெற்றி பெற செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.
                                            

 
இங்கு சட்டம் ஒழுங்கில் ஜனநாயகம் மீறப்படுகிறது.இது எல்லாம் மறைமுகமாக நடைபெறுகிறது.ஏனென்றால்  இந்த நாட்டின் முதல் குடிமகன் மறைமுகமாக தேர்ந்து எடுக்கப்படுவதால்...
மாயையை  வெளிப்படுத்த ,உண்மை நடைமுறையை  அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லாத நிலையை மிக அழகாக செய்திதாள்கள் கையாள்கிறது.இந்த செய்தி நிறுவனங்கள் போல உண்மையான குடிமகனாக இருக்க முடியாது.எந்த அரசு வந்தாலும் அதற்கு ஏற்ப மாறி கொள்ளும் பச்சோந்தி புத்தி பெறுவது  சுலபமான காரியமா என்ன?
முதலாளித்துவ அதிகாரத்திடம் பணம் பெற்று ஊழல் செய்திகளை மறைக்கவும் ,ஊழல்களை நியாயப்படுத்தவும் இந்திய பத்திரிக்கைகளால் மட்டும் முடிந்த ஒன்று.இந்திய மக்களில் ஏழைகள், ஏழைகளாக இருக்கவும் ,பண வசதி படைத்தவர்கள் மேலும் பணம் உள்ளவர்களாக மாறவும் ஆட்சியாளர்களுக்கு மறைமுக அறிவுறுத்துவது  சாதாரண காரியமா? ஆனால் அதை சுலபமாக செய்து விடும் நமது பத்திரிக்கைகள்.
ஒரு செய்தித்தாள் புரட்சியான  செய்திகளை வெளிப்படுமா?என்று நீங்கள் இந்தியாவில் காத்து இருந்தால் "ஓடு மீன் ஓட ஒரு மீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு "என்ற கதை
.போல   ஆகும்.ஆனால் அந்த மீன் உங்கள் கண்களில் தெரிய  செய்யாது.
                                                                     
                         
                   



                                   
இங்கு அனைத்து பத்திரிக்கைகளும் ஆட்சி செய்பவர்களுக்கு மட்டும் அடிமை என்பது போல செயல்படுகிறது.
இது எதிர்கட்சிகளின் ஆளும் கட்சியை வசை பாடும் செய்திதாள்கள் வருகிறது .இதுவும் சுய நலத்தால் வருகின்ற செய்திதாள்கள் ஆகும்.
ஆங்கில ஆட்சி விடை பெற்று 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் பல அரசுகள் இந்தியாவை ஆண்டும் ,ஊழல் பெருச்சாளிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை சுரண்டினாலும் இதுவரை இந்தியா போன்ற நாட்டில் புரட்சிகள் ஏற்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்வது எது என்று கேட்டால் ஊடகங்கள் ஆகும்.மற்ற நாட்டில் எல்லாம் புரட்சிகள் ஏற்படுவதற்கு செய்திதாள்கள் காரணமாக இருக்கின்றன.ஆனால் இந்தியாவில் ஏற்படும் புரட்சிகள்  எரிந்த உடன் அணைப்பதற்கு முதலாளித்துவம் செய்திதாள்கள் என்ற முதலைகளுக்கு தீனிகளை போட்டு கொண்டு இருக்கின்றன.

                                          

இதனால் உண்மையாக இந்த நாட்டில் எது உண்மையான நடைமுறை எது போலியான நடைமுறை என்று மக்கள்  அறியும் முன்பு   அவர்களின் விழிகள் போலி,கற்பனையான செய்திகளால் மறைக்கப்படுகிறது.
இதனால் இந்தியா என்ற பெயருக்கு ஏற்ப (in -dia  )அதாவது ஒரு வட்டத்திற்குள் வாழ்வை முடிப்பவர்கள்.இந்திய மண்ணுக்குள் சுழன்று கொண்டு இருப்பவர்கள் .இது ஆட்சியில் உள்ள அதிகாரங்கள் இந்தியாவை உருவாக்கி அதன் மக்களை பலவீனமான வெளியுறவு கொள்கை உடையவர்களாக உருவாக்கி வைத்து இருக்கிறது.அதற்கு இந்த செய்திதாள்கள்  துணை போகின்றன.ஏனென்றால் அயல் நாட்டை படம் பிடித்து காட்டினால்  இங்கு புரட்சிகள் ஏற்பட்டு விடும் என்ற அதிகாரங்களின் பயத்திற்கு அடிபணியும் செய்தித்தாள்களை படித்துவிட்டு உங்கள் வாழ்வை நிர்ணயம் செய்யாதீர்கள்.பாரதம் எப்பொழுது அனைத்து நிலைகளிலும் உருவாக்கி ஆங்கிலம் என்ற ஒரு மொழி கொள்கையாக உருவாகிறது அப்பொழுது மட்டும் இந்த நாட்டின் வெளியுறவு கொள்கை பலமாக செய்திதாள்களில் எதிரொலிக்கும்.அப்பொழுது தமிழ்நாடு என்ற பெயரும் மாறி நவீன மெட்ராஸ் ஸ்டேட் உருவாகி ,ஆங்கிலம் மட்டும் ஆட்சி மொழியாக தமிழ்நாட்டில் இருக்கும்.இதை பார்த்து எனது மக்கள் பொருளாதார,அயல்நாட்டு மொழியில் உயர்வாக இருக்கிறார்கள் என்று தமிழ் மொழியின் மனம் மகிழ்வுடன்  பூரிப்பு அடையும்.அப்பொழுது இந்தியும் மற்ற மாநிலங்களின் தாய்மொழியும் தங்களுக்குள் நிறைவு பெற்று பாரத மக்களை வாழ்த்தும்.செய்திதாள்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டும் இருக்கும்.தமிழ் மற்றும் மற்ற மாநில மொழிகள் அதற்கு என்று பல்கலை கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு தனித்து செயல்படும்.புதிய ஆராய்சிகள் செய்யும்.அதை ஆங்கில மொழியின் வளர்ச்சிக்கு பயன்பட ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யும்.இந்த காலம் வெகு சீக்கிரமாக நடப்பதற்கு செய்திதாள்கள் புரட்சி செய்யட்டும்.

No comments:

Post a Comment