கணித பரீட்சை முடிந்தது:
நாள் 02;05;2013 :நான் பல நாட்களாக பயிற்சி எடுத்த கணித தேர்வு எழுதி முடித்தேன்.ஒரு பெரிய யுத்த களத்திற்கு சென்று வந்தது போல இருந்தது.அந்த போரில் சில இடங்களில் தடுமாற்றம் இருந்தாலும் அனைத்து வீரர்களையும் வீழ்த்தினேன்.ஆனால் அவர்கள் இறந்தார்களா?அல்லது உயிர் இருந்தும் நடிக்கிறார்களா?என்பது அவர்களை முகர்ந்து பார்க்கும் கழுகுகளுக்கு மட்டும் தெரியும்.அந்த கழுகுகள் எனது வெற்றியை தீர்மானிக்கிறது.அவர்களை கொத்தி தின்றால் நான் வெற்றி அடைந்துவிட்டேன்.முகர்ந்து பார்த்து திரும்பி போய்விட்டது என்றால் எனக்கு முழு வெற்றி கிடைக்கவில்லை என்று அர்த்தம் .போரிடுவதற்கு என்று கால தேவனால் கொடுக்கப்பட்ட நேரம் முடிந்ததால் அந்த வீரர்களுடன் இனிமேல் என்னால் போரிடவும் முடியவில்லை.இந்த போரை விட்டால் இனிமேல் அடுத்த போர் புரிவதற்கு சில மாதங்கள் ஆகலாம்.ஆனால் இனிமேல் நான் இந்த யுத்த களத்தில் போரிட விருப்பம் இல்லை.ஏனென்றால் கழுகுகள் கொத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.ஏனென்றால் எனது ஆயுதத்தை இன்று ஓரளவு நன்றாக பயன்படுத்தினேன்.
கழுகுகள்:கணித ஆசிரியர்கள்
என்னுடன் போர் புரிந்த வீரர்கள்: கணித பாடத்தின் கேள்விகள்
எனது ஆயுதம்:நான் அளித்த பதில்கள்
No comments:
Post a Comment