Thursday, 9 May 2013

தமிழகத்தில் போக்குவரத்து கண்ணாடிகள் உடைப்பு :
ஒரு கட்சியின் தலைவரை கைது செய்ததும் இவ்வளவு பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருக்கிறதே.அதற்கு உரிய இழப்பீட்டை அந்த  பேருந்து கண்ணாடியை உடைத்தவர்கள்  கொடுப்பார்களா? நான் இதை ஏன் கேட்கிறேன் என்றால் இந்த கலவர நேரத்தில் 04/05/2013 அன்று  வக்காரமாரி ஊராட்சியில் நடைபெற்ற சம்பவத்தை கூறுகிறேன்.
இந்திரஜித்(+1 லிருந்து +2 செல்லும் மாணவன்  ),சதீஷ் குமார் (டிப்ளோமா முத்தையா பாலிடெக்னிக்),அரவிந்த் (லாரி கிளீனர்)வயது(18)  தலித் இளைஞர்கள்   மூவரும் ஊரில் உள்ள குளத்தில் மீன் பிடித்து  அதை எடுத்து சமைத்து டாஸ்மாக்கில் சாராயம் வாங்கிய  பின்பு  சூரியன்  மறைகிற வேளையில் ஊரில் உள்ள தலைமை குடிநீர்  வாரியம் செல்லும் பாதையில் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு ஓய்வில் இருந்த பொக்லைன் இயந்திரத்தின் நிழலில் சாராயத்தை குடித்துவிட்டு போதையில் கீழ் கிடந்த கற்களை எடுத்து பொக்லைன் இயந்திரத்தின் மூன்று கண்ணாடிகளை உடைத்தனர்.இதில் என்ன வேடிக்கை என்றால் அந்த இயந்திரத்தின் சொந்தக்காரர் அதே ஊரை சேர்ந்த காண்டிராக்டர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.அவர் தற்போது பேருந்து கண்ணாடிகளின் உடைப்பு காரணமான  சாதி கட்சியின் தலைவரின் சாதியை (வன்னியர்) சேர்ந்தவர்.அவர் இந்த உடைப்பு விவகாரத்தை கேள்விப்பட்டு ஊருக்கு ஒரு படைகளோடு வந்து தலித் மக்களின் வீடுகள் சேதம் செய்யவில்லை .மாறாக மக்களிடம் வந்து அவர் சொன்னபொழுது உடனே அந்த ஊராட்சி மன்ற தலைவரின் (தலித்)முன்னிலையில் பஞ்சாயத்து கூடியது.ஊராட்சி மன்ற தலைவர்   தலைவர் உட்பட அனைவரும் காண்டிராக்டர் கால் பாதம் படும் இடத்தில் உட்கார்ந்து அவரின் வார்த்தைக்காக காத்திருந்தனர்.அந்த மூன்று பெரும் வரவழைக்கப்பட்டனர்.உடனே அவர்களிடம் விசாரணை செய்த  நிலையில்   அவர்கள் ஒப்புக்கொண்டு உடனே காண்டிராக்டரின் காலில் விழ அவர் உணர்ச்சி பெருக்கில் அழ உடனே மக்களிடம் நீங்களே இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு சொல்லுங்கள் என்று கூறிவிட்டார்.தலித்  மக்கள்  அனைவரும் ஒன்று கூடி உடைத்த ஒரு நபருக்கு தலா 10,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்து இரண்டு நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டனர்.காண்டிராக்டர் பெருந்தன்மையோடு தனது வீட்டுக்கு சென்றார்.
இங்கு உண்மையில் நடைபெற்றிருக்க வேண்டியது .-கண்ணாடி உடைப்பு செய்தவர்களை   காவலில் பிடித்து கொடுத்திருக்க வேண்டும்.
இதை இரு தரப்பு மக்களும் செய்யவில்லை அதற்கு காரணம் அவர்களின் குழந்தைகள் மீது fir  போட்டுவிட்டால் படிப்பு பாதிக்கப்பட்டுவிடும் என்று கருதியது.
-காவல் துறை என்றால் பயம்
-தனக்கு இந்த மக்கள் பணிந்தனர்  என்ற அவரின் பெருமை எண்ணம் .
இது போன்று மேற்கூறிய  இரு சாதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சட்டத்தை மற்றும் காவல் துறையை மதிப்பதில்லை."நானே ராஜா, நானே மந்திரி" என்ற ரீதியில் செயல்படுகிறார்கள்.
அவர்களை பொறுத்தவரையில்
-காவல் துறை தங்கள் மீது பழியை சுமத்தி சிறையில் தள்ளும்
-சமாதான பேச்சு நடத்தாது.
-ஊடகங்களில் வெளிவந்து அவமானமாகி விடும்.போன்ற காரணங்களுக்காக இவர்கள் பஞ்சாயத்து பண்ணுகிறார்கள்.இதனால் மற்ற சமுதாயத்தினருக்கு இவர்களால் பாதிப்பு அதிகம் வருகிறது .
எனவே இவர்கள் விஷயத்தில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை மிக சரியானது ஆகும்.
 சட்டத்திற்கு பணிந்து எப்பொழுது இவர்கள் செயல் இருக்கிறது   அப்பொழுது வன்முறை இல்லாத தமிழகம் உருவாக்கி விடும்.ஏன் இவர்கள் சட்டத்தை மதிக்கமாட்டேன் என்கிறார்கள்? என்று யோசிக்கும்போது .....
ஏனென்றால் சட்டம் ஒரு தலித்தால் உருவாக்கப்பட்டது என்ற எண்ணமாக இருக்கிறது .ஒரு படித்த மாமேதை இயற்றியதாக அவர்கள் நினைக்கவில்லை.இருப்பினும்  சட்டத்தை இயற்றிய குழுவில் இருந்தவர்கள்  எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதை இவர்கள் அறிய மாட்டார்கள்.தற்பொழுது அந்த 10,000 ரூபாய் கொடுப்பதற்கு கூலி வேலை செய்யும் அவர்களின் பெற்றோர்கள் கடன் வாங்கி,தங்கள் சேர்த்து வைத்த நகைகளை அடகு வைத்து பணம் சென்று கொடுத்து இருக்கிறார்கள்.அதில் இரு பக்கமும் தலா 1000 ரூபாய் வாங்கியவர்கள் பஞ்சாயத்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.ஒரு ஊரில் தனி மனிதனின் சொந்த இயந்திரம் கண்ணாடி உடைக்கப்பட்ட விஷயம்   அதற்கு உரிய இழப்பீடு வழங்கி விட்டனர். அதுவே 500 க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருக்கிறது,இந்த நிமிடமும் உடைக்கப்பட்டு  இருக்கிறது.அதற்கு உடைத்தவர்கள் எவ்வாறு இழப்பீடு மற்றும்  நிவாரணம் வழங்க  போகிறார்கள்.
-பெட்ரோல் ,டீசல் விலையை தமிழக அரசு தனது இழப்பீட்டுக்கு தேவையான பணம் வருவது போல தற்காலிக விலையை சில மாதங்கள் உயர்த்துவது.
-பேருந்து கட்டணம் தற்காலிகமாக  உயர்த்துவது.
-பேருந்து கண்ணாடி உடைத்தவர்கள் காவல்துறையிடம் அகப்பட்டு இருந்தால் கண்ணாடிக்கு உரிய இழப்பீட்டை இரு மடங்காக வசூல் செய்வது.
-கூடுமான அளவு வரையில் இந்த விஷயத்தில் பண வசூல் செய்து இழப்பீட்டை ஈடுகட்டுதல் வேண்டும்.மாறாக சில மாதங்கள் சிறையில் இருக்க செய்யலாம்.ஆனால் அவர்கள் எதிர்கால வாழ்க்கை பாதிக்காத நிலையில்  காவல் துறை ஈடுபடுதல் வேண்டும்.(குறிப்பாக FIR போடுவது கூடாது )

No comments:

Post a Comment