தமிழ்!தமிழ்!தமிழ்!
என்னை கேட்டால் தமிழ் ஈழம் அமைப்பதற்கு முன்பு உங்களால் தமிழ்நாட்டை
இந்தியாவில் இருந்து பிரிக்க இயலுமா?என்ற ஒரு கேள்வியை நான் கேட்கிறேன்.நான் தமிழனுக்கு
மற்றும் தமிழுக்கு எதிரானவன் அல்ல.எந்த ஒரு தேசத்திலும்
பெரும்பான்மை சிறுபான்மையினரை அடிமை போல பாவிப்பது நடக்க கூடிய ஒன்று.ஆனால் அது அதிகாரத்திலும் ,ஆரோக்கியத்திலும்,அடிப்படை தேவைகளிலும் இருந்தால் அப்பகுதி சிறுபான்மை
மக்கள் எவ்வாறு சகித்து கொள்ள முடியும். உயிர் வாழ்வதற்கு
அத்தியாவசிய பொருட்கள் இல்லை எனில் அந்த மக்கள் போராடியதில்
என்ன தவறு இருக்கிறது.இளம் வயதில் இருந்தே திருக்குறளையும் ,தீண்டாமை ஒரு பாவ செயல் ,தீண்டாமை ஒரு பெரிய குற்றம்,தீண்டாமை ஒரு மனிதத்தன்மை
அற்ற செயல் என்று தன்னுடைய படிக்கும் பாட புத்தகத்தில் முதல் பக்கத்திலேயே படித்து படித்து பழக்கப்பட்ட
ஒரு தமிழ் இனம் ஆயுதம் ஏந்தி போராடி இருக்கிறது என்றால் அங்கு எந்த மாதிரியான அடிமை நிலை அவர்களுக்கு உருவாக்கப்பட்டு இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது.இந்த உலகில் உள்ள பெரும்பான்மை நாட்டில் தமிழ் இனம் வாழ்கிறது தன்னையும் பாதுகாத்து கொண்டு தான் இருக்கும் நாட்டுக்கும் சேவை செய்து கொண்டு ,அதற்கு காரணம் தான் இளம் வயதிலேயே படித்த
"அணைத்து ஊரும் நமது ஊர் "என்ற வார்த்தைகளும்,"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு"என்ற வார்த்தைகளும் மனதில் பதிந்தது ஆகும்.இப்படிப்பட்ட தமிழன் ஆயுதம் ஏந்தி போராட கூடிய நிலைமை வந்தது என்றால் அங்கு அவர்கள் அடிமை நிலையில் தங்கள் உயிரை,மானத்தை ,பொருளாதாரத்தை இழந்து கடை நிலைக்கு சென்று இருக்க வேண்டும்.அந்த நிலையில் போராளி குழு உருவாகியிருக்கும்.ஆனால் எப்பொழுதும் ஒரு தலைவன் கிடைத்து விட்டால் அந்த தலைவனை சோதித்து பார்ப்பதும்,அவன் தன்னை விட உயர் நிலை ஆகுவான் என்ற புத்தியும் ஒரு சில தமிழ் மக்களுக்கு
இருப்பது உண்மை.அவர்கள்தான்
தமிழ் இனம் அழிய காரணமாக இருந்திருக்க முடியும்.ஒரு இனத்தை அழிக்க வேறொரு இனம் நேரடியாக செயல்படும் முன் , அந்த இனத்தில் அங்கு ஏற்கனவே மறைமுகமாக அழிப்பதற்கான சக்தி உருவாகிவிடுகிறது.இது நேரடியாக இருந்தால் பரவாயில்லை .மறைமுகமாக இருப்பது ஒன்றே மிக அபாயத்திற்கு இட்டு சென்றது.விடுதலைபுலிகள் அழிந்ததை பற்றி இந்தியாவில்
இருக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் நிச்சயம் கவலை அடைந்து இருக்கமாட்டான்.ஏன் என்றால் ஒரு மிக பெரிய ஜனநாயக நாட்டின் ,இந்தியாவை மிக்க உச்சத்துக்கு அழித்து செல்ல கூடிய வல்லமை பொருந்திய ஒரு பாரத பிரதமரை கொல்ல துணிவது என்பது இந்தியாவில் உள்ள அத்தனை மக்களையும்
கொன்றதற்கு சமம் ஆகும்.இந்திய ராணுவம் செய்த அட்டூழியத்திற்கு நிச்சயம் அவர்கள் பின் வந்த நாளில் அவர்கள் பாவத்தை ஏற்று தண்டனை பெற்று இருந்திருப்பார்கள்.விடுதலைப்புலிகள் மட்டும் பொறுமையாக இருந்திருந்தால். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களையும் மத்திய அரசில் பங்கு வகிக்கும் ஒவ்வொரு ஆளும் அரசும் பாதுகாப்பு பணிகளில் தமிழனை அமர்த்துவதற்கு தயங்கியது என்றால் தமிழர்களை அந்நியனாகவே பாவித்து நடத்தி வந்தன.இது போன்ற தமிழ், தமிழன் புறக்கணிப்பு என்பது ஏற்கனவே நெடுங்காலமாக கண்ணில் தூசு விழுந்து நெருடுவது போல இலங்கை அரசால் இடையூறாக பார்க்கப்பட்ட விடுதலை புலிகளை அழிப்பதற்கு தக்க சமயம் பார்த்து காத்து கொண்டு இருந்து தன பெரும்பான்மை பலத்தால் ஒரு சில நாடுகளின் துணையோடு இந்த விடுதலை புலிகளையும் அழித்து ,அவர்கள் தங்கி இருந்த பகுதிக்கு உட்பட்ட தமிழர்களையும் அழித்தது என்பது இலங்கை நாட்டில் சிறுபான்மை
இன மக்கள் தமிழர்கள் இருக்கவே கூடாது.அது சிங்களர்களுக்கு மட்டும் சொந்தம் என்ற ரீதியில் தாக்குதல் செய்து கொத்து கொத்தாக உயிர்கள் பறிக்கப்பட்டது.இதற்கு தமிழர்கள் மேல் உள்ள பயம்தான் என்பது தெரிகிறது.அவர்களின் மூளைக்கு உள்ள வல்லரசுக்கு
உரிய சிந்தனை பொருளாதாரத்தில் இல்லை என்பது ஒன்று ஆகும்.அப்படியே பொருளாதாரம்
இருப்பினும் திராவிட கட்சிகளால்
உருவாக்கப்பட்ட போலி கலாச்சாரத்திற்கு அடிமையாக இருப்பது ஒன்றே ஆகும்.அதனால்தான்
தமிழனால் தமிழ் உணர்வு ,தமிழ் மொழி கேவலமாக பார்க்கப்படுகிறது.ஒரு இனத்தை கேவலமாக பார்ப்பது என்பதில் இருந்து கிடைக்கும்
ஒரே பலன் இழப்பு ஒன்றே ஆகும்.அதிலும் தனது இனத்தையே ,தனது மொழியையே ஒரு தமிழன் கேவலமாக பார்த்தால் நிச்சயமாக அவன் இழப்பது அவனையே ஆகும்.தற்போது இந்த களத்தில் புதியதாக ஜாதி கட்சிகளும்
சேர்ந்து ஒட்டு மொத்த தமிழ் இனத்தையே அழிவு பாதைக்கு அழைத்து செல்ல தயாராக தங்கள் செயல்களை முடுக்கி விட்டுள்ளன என்பதை நினைக்கும்போது தமிழ் இனத்திற்கும் ,தமிழ் மொழிக்கும் எதிர்காலம்
என்பது எவ்வளவு கலவரம் நிறைந்ததாக இருக்கும் என்பதை நம் மன கண் முன் தெரிகிறது.
ஒரு இனத்தின் போராளி ஜெயித்தால் அவன் அந்த இனத்தின் கடவுள் ,அதுவே அவன் தோற்றால் அந்த இனத்தின் தியாகி.தற்போது இலங்கையில் அழிந்த தமிழ் இனம் தமிழ்நாட்டுக்கு தியாகிகள்.ஆனால் மற்ற இனத்துக்கு அவர்கள் கோழைகள் .எனவே மற்ற இந்திய மாநிலத்துக்கும் மற்றும் டெல்லியில் ஆளும் அரசுக்கும் தமிழர்கள் தோல்வியை தழுபவர்கள்.உளவியல் ரீதியில் பார்க்கும்போது வலுவிழந்த
,பலம் அற்ற ,தோல்வியை தழுவுகிற ஒரு மனிதனோ அல்லது ஒரு இனமோ மற்ற வலிமையான இனத்தின் ஆரோக்கியத்துக்கு,வளர்ச்சிக்கு மிகப்பெரும்
இடையூறாக இருக்கிறது.இவ்வாறு இருக்கையில் தமிழ் இனத்தை பலம்
அ ற்றவர்கள் என்ற நினைப்பு வரும்பொழுதே அவர்களுக்கு
வலுவானதை திணிப்பதற்கு தமிழர்களை ஆளும் அரசு செய்ய எண்ணுகிறது.முதலில் தமிழ் இனத்தை பலம் அற்ற இனமாக தன மனதில் நினைத்த பின்பு அவர்களின் மொழியே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று அந்த மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முதலில் நிறுத்துகிறது.இதுதான் தற்போதைய இந்தியாவை ஆளும் அரசின் எண்ணம்,செயல் ஆகும்.ஒரு மந்திரி கேட்கிறார்"இந்தியை கற்காததால் நீங்கள் எதையோ இழந்தது போல இல்லையா"என்று,அதற்கு இன்னொரு மந்திரி
"இந்த நாட்டின் நிதி நிர்வாகத்தை கவனிக்கும்
முக்கிய பொறுப்பையே ஒரு இந்தி கற்காத தமிழன்தான் நிர்வகிக்கிறார்"என்று.நான் சொல்கிறேன்,மந்திரி பதவி என்பது நிலையானது அல்ல. எப்பொழது என்ன நடக்கும் என்று கூட கூற இயலாது ,ஆனால் தமிழை நீங்கள் கற்று விடுங்கள் மற்ற எந்த ஒரு மொழியையும்
கற்பது என்பது மிக்க சுலபம் .இந்தி மட்டும் தெரிந்தவர்கள் இந்தியாவில்
தமிழை கற்கும்போதுதான் முழுமை பெறுகிறான்.ஆனால் தமிழ் கற்றவன் ஏற்கனவே முழுமை மனிதனாக் மற்ற மொழிகளை தனது முழுமையுடன் சேர்த்து வளர்ச்சி பெறுகிறான்.ஒரு முழுமையில்
இருந்துதான் வளர்ச்சி சாத்தியம்.
இதை இந்தி மொழியை தாய்மொழியாக கொண்டு தமிழ் மொழி கற்று திறம்பட பேசுபவர்களை கேட்டு பாருங்கள் உண்மை தெரியும்.எனவேதான் தமிழன் ஏற்கனவே தனது முழுமையை தனது மொழியான தமிழ் மொழியோடு தக்க வைத்து மற்ற மொழிகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்கிறான் வளர்ச்சி பெற..அப்படி என்றால் தமிழ் மொழியில் வளர்ச்சி பெற முடியாதா?ஏற்கனவே வளர்பிறை போல வளர்ச்சியின் அத்தனை படிகளையும் தாண்டிய ஒரு மொழி முழுமை பெற்று பௌர்ணமியாக ஜொலிக்கிறது.அந்த பௌர்ணமி வெளிச்சத்தில் மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கு பாடுபடுகிறான் தமிழன்... இதை உணராத சிலர் தமிழுக்கு தேயும் நிலவை உண்டாக்க எண்ணுகின்றனர்.ஆனால் அவர்களுக்கு தெரியாது இது தேயும் நிலவு அல்ல என்று...........அந்த ஓளி தரும் நிலவை அழிக்க எண்ணி தனது மொழி இனத்திற்கு அழிவை ஏற்படுத்துகிறார்கள். அந்த ஓளி இந்த உலக மக்களின் இருளுக்காக உருவாக்கப்பட்டது.அதை பயன்படுத்தி மனித இனத்தின் வளர்ச்சி அடைய வேண்டும்.....
- SATHISH M.E.,(DME),AU.
No comments:
Post a Comment