Friday, 22 March 2013

மாணவர்கள் போராட்டம் தேவையா?
பௌத்த மதத்தை பொறுத்தவரையில் கட்டுப்பாடாக அனைத்து விதத்திலும் இருந்து பொருளாதார நிலையை அடைந்து சுதந்திர மனிதனாக ஆவது என்பதை தற்போது பௌத்த மதத்தை கடைப்பிடித்து வரும் நாடுகள் தனகளது வழக்கமாக கொண்டு இருக்கின்றன.ஆனால் இந்து மதம் முழுமையாக ஒரு சில பிராமணர்களால் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகிறது.மற்றவர்கள் எல்லோரும் அரைகுறை.இவ்வாறு அரைகுறை மனிதர்கள் இந்து மதத்தின்  அடையாளத்தை வைத்து கொண்டு பொருளாதாரமும் இல்லாமல் கட்டுப்பாடும் இல்லாமல் தான் தோன்றி தனமாக இருப்பது என்பது வேண்டுமானால் அவர்கள் பெரும்பான்மை இருக்கும் பகுதிகளில் சாத்தியம் ஆகலாம்.ஆனால் இவர்களுக்கு நேர் எதிராக பெரும்பான்மை மக்களால் கடைப்பிடிக்கப்படும் புத்த சமயத்தை பின்பற்றும்  நாட்டில் வாழ்ந்தால்  நிச்சயம் கட்டுப்பாடு உள்ள சமுதாயத்தையும் சுதந்திரம் என்னும்  பெயரில் சேர்ந்து கெடுத்து ஒட்டு மொத்த நாட்டையும் சீரழிக்கிற செயல்களை செய்யும்போது பெரும்பான்மை மக்களால் சிறுபான்மை மக்கள் பல கொடுமைக்கு உள்ளாகின்றனர்.இதில் பெரும்பான்மை தனது கட்டுப்பாட்டில்  இருக்கும் நியாயத்தை ஆணித்தரமாக  எடுத்து உரைக்கிறது .இவ்வாறு நடைப்பெற்ற இலங்கையில் சிறுபான்மை இனத்தவரின் தலைவராக ஒருவர் தேர்ந்து எடுக்கப்பட்டு அவருக்கு குடும்பம் என்று ஏற்படுத்தி  கட்டுக்கோப்பாக  இருந்து வந்த  சமயத்தில் போர் மூண்டது சிறுபான்மை இன தலைவர் ஆரம்பித்த படை அழிந்தது.அவரும் அழிந்தார் .இப்படி  அழிந்த  நேரத்தில் பெரும்பான்மை மக்கள் வெற்றியை கொண்டாட மாட்டார்கள்.மாறாக அவர்கள் நாட்டை முன்னேற்ற  பாதையில் அழைத்து செல்ல சிறுபான்மை மக்களையும் தங்களின் நிலைக்கு கொண்டுவர முயற்சி எடுப்பார்கள்.இவ்வாறு முயற்சிக்கின்ற இந்த வேலையில் தேவையில்லாத போராட்டங்கள் அதுவும் வேறொரு நாட்டில் நடப்பதற்கான காரணம் என்ன?என்று நாம் ஆராயும்போது "ஒரு நிகழ்வு நடந்தது .அதை கூறுகிறேன் .நான் காலையில் ஓட்ட பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.அவ்வாறு நான் செல்லும் வழியில் பந்தல் போட்டு ஒரு சில மாணவர்கள் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தனர்.அது உண்ணாவிரத மேடை என்று எழுதியிருந்தது.ஒரு பெண் கூறுகிறாள்"இப்படியே உட்கார்ந்திட்டு இருந்தால் என்ன ஆவது?என்று.அதற்கு ஒரு பையன் "அப்புறம் எப்பொழுதுதான் பெரிய மனுஷனாக ஆவது"என்று.இவர்கள் பெரிய மனிதனாக தெரிய வேண்டும் என்பதற்காக ஏன் அப்பாவி தமிழர்களின் வாழ்வில் பகடை விளையாட வேண்டும்.தற்போது உண்ணாவிரதம் இருந்தவர்கள் எல்லாம் கடந்த காலங்களில் சினிமா,தொலைகாட்சி,செய்திதாள்கள் போன்றவற்றால் வளர்க்கப்பட்டவர்கள்.இவர்களுக்கு களத்தில் என்ன நடக்கிறது  என்று தெரிய வாய்ப்பு இல்லை.அப்படி இருக்க அதே ஊடகத்தின் வாயிலாக தாம் வெளி உலகத்திற்கு தெரிந்தால் பெரிய மனிதனாக விடுவோம் என்ற நினைப்பில் தற்போது உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.இதனால் பத்து பைசாவுக்கு பிரயோசனம் உண்டா?இல்லை இவர்கள் உண்ணாவிரதத்தால் இலங்கை அரசும் ,இந்திய அரசும் தமிழர்களுக்கு வாழ்வை உயர்த்த போகிறதா?என்று கேள்வி எழுப்பினால் அதற்கு ஒரு பதில் "எப்பொழுது ஒரு சிறுபான்மை இன தலைவன் இறந்து விடுகிறான் எனில்  அவனை வீழ்த்திய பெரும்பான்மை முன்னேற  சிறுபான்மை இனத்தவரையும் அழைத்து செல்கிறது.அது இயல்பு ,இயற்கை.இயற்கையை மாற்றவோ, அழிக்கவோ முயற்சி செய்தால் அந்த அழிவு இயற்கையை சார்ந்து  வாழும் மனித மற்றும் உயிரினத்திற்கு  ஆபத்து விளைவிக்க கூடியது என்பது இலங்கை அரசு ஒன்றும் அறியாதது இல்லை.எனவே  இந்த மாணவர்கள் போராட்டத்தால் அங்கு மாற்றம் உருவாக போகிறது என்பது முட்டாள்தனமான எண்ணம் என்பது உலகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும்  தெரிந்து இருக்கும்.இவர்கள் போராட்டம் நடத்துவது ஏன்?அப்புறம் எப்பொழுதுதான் நாங்கள் பெரிய மனுஷனாக ஆவது?இவர்களை பொருத்தவரையில் ஊடக,செய்திகளில் வரவேண்டும்.அனைவரும் இவர்களை பற்றி பேச வேண்டும்.அதற்கு தற்போது கிடைத்து இருக்கும் பகடைக்காய் இலங்கை தமிழர்கள்,நீங்களும் உருட்டுங்கள்  உங்களால் முடிந்தவரையில்...................முதலில் உங்கள்  நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க பாருங்கள்   பின்பு மற்ற நாட்டில் உள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு முயற்சி செய்யலாம்.இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு என்று அதிகாரங்கள்  உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பதை மறந்து விடவேண்டாம் .

No comments:

Post a Comment