Wednesday, 13 March 2013

என் வாழ்வில் புத்தகங்கள்:
எனக்கு சுமார் 8 வயது  இருக்கும்போது ஒரு நாள் பேருந்தில் கல்லூரி மாணவ மாணவிகள் இறங்கிய உடனே "தோச கடை ஓரத்திலே ,தோச ஒன்னாங்க ,தோச இரண்டாங்க" பாட்டு பாடி ஒரே மாதிரி நடனம் ஆடி பரவசம் ஏற்படுத்தினார்கள் .பின்பு தெரிந்தது அவர்கள் அண்ணாமலை பல்கலை கழகத்தில் இருந்து வந்த நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் .இவர்கள் எங்கள் ஊரில் முகாம் இட்டு பல விழிப்புணர்வு உள்ள நாடகங்கள் நடத்தி ஊரை தூய்மை படுத்தி மிக அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்தனர்.எனக்குள் வந்த முதல் விழிப்புணர்வு .அதில் இருந்து என் வாழ்க்கையில் புத்தகங்களின் அணிவகுப்பு தொடங்கியது.என்னை சுற்றிலும் எப்பொழுதும் சிறுவர் மலர்,மாயாவி காமிக்ஸ் புத்தகங்கள் இருந்து கொண்டே இருக்கும்.நானும் புத்தகங்களும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தோம்.இதற்கு என் பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகள் காரணமாக இருந்தனர்.நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது முதல் முதலாக எனது பள்ளியின் நூலகத்துக்கு சென்றேன்.ஆனால் அங்கு பொது தேர்வு எழுதுவோர் வர வேண்டாம் ,அடுத்த வருடம் வாருங்கள் என்று கூறிவிட்டனர்.இதனால் நான் பத்தாம் வகுப்பு பரீட்சையை முடித்து விட்டு லீவில் நூலகம் எங்கள் ஊரை தேடி வந்தது .இதற்கு மீண்டும் காரணமாக இருந்தது அண்ணாமலை பல்கலை கழகம்.வளர்கல்வி மூலம் நிறைய புத்தகங்கள்,செய்திதாள்கள்,மற்றும் வார புத்தகங்கள் என தனது சேவையை தொடங்கியது.இந்த நூலக பொறுப்பு என் வசம் வந்தது.அந்த வயதில் என் சகோதர சகோதிரிகள் படிக்கும் புத்தகமான பொன்னியின் செல்வன் புத்தகத்தை பார்த்து நானும் படிக்கலாம் என்று அதை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.எனது பத்தாம் வகுப்பு விடுமுறையை அழகான தமிழகத்தை ,இலங்கையை புத்தகத்தில்  கண்டு ரசித்தேன்.எனது விடுமுறை கடந்தது எனக்கு தெரியாமல் போனது.அந்த அளவு கல்கியின் எழுத்துகளில் என் ஆன்மாவை ஒப்படைத்து இருந்தேன்.உண்மையில் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அனுபவம் தருகிறது மற்றும் நமது எதிர்கால வாழ்வை தீர்மானிக்க வல்லது என்பதை பின் வந்த நாளில் தெரிந்து கொண்டேன்.எனக்குள் நான் படித்த புத்தகங்களில் பொன்னியின் செல்வன் தாக்கம் மிக அதிகம் .அந்த தாக்கத்தை என்னுள் முழு இன்பமான நிலையை அனுபவிக்கிறேன்.உன்னதமான கலாசாரத்தை எனக்குள் அந்த தாக்கம் தந்து இருக்கிறது.அதை நான் வரவேற்கிறேன்.என்னிடம் நூலக சாவி இருக்கும். எனது வாழ்வில் அதிக நேரங்கள் அந்த நூலகத்தில் செலவழித்தேன்.பின்பு வளர்கல்வி மையத்தின் பொறுப்பில் இருந்தவர் எனது குண நலன்களை பார்த்து வளர்கல்வி மையம் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள செய்தார்.நான் நிகழ்சிகளில் கலந்து கொள்ள அண்ணாமலை பல்கலை கழகத்துக்கு அழைத்து வரப்பட்டேன்.கடல் போல எங்கும் இருக்கும் கட்டிடங்கள்.ஒரு கிராமம் முழுவதும் பலகலை கழக கட்டிடமாக   இருந்தது.எனக்குள் அப்பொழுதுதான் அந்த ஆசை வந்தது.நம்மால் இங்கு படிக்க முடியுமா?அப்படி படித்தால் எவ்வளவு பெரிய விஷயம்.நான் அண்ணாமலை பல்கலை கழகம் ஏற்பாடு செய்து இருந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும்,போட்டிகளிலும் ,பயிற்சிகளும் கலந்து கொண்டு இருந்தேன்.அப்பொழுது நான் +2 படிக்கிறேன்.நூலகமும் ,புத்தகமும் என்னை விட்டு சென்று முழு நேர  பாட புத்தகங்கள் என்னை சூழ்ந்து இருந்தன.பள்ளியில்  முதல் ஆளாக வருவேன் என்று எதிர்பார்த்து இருந்தேன்.ஆனால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் போனது.பின்பு அண்ணாமலை பல்கலை கழக பொறியியல் சீட்டுக்காக அதிக நேரம் காத்து இருந்த நிலையில் அந்த காத்திருப்பு எல்லாம் எங்கள் ஊர் நூலகத்தில் கழிந்தது.எனக்கு பொறியியல் புல சீட்டு கிடைத்தது .என் அப்பா எனக்கு தெய்வமாக தோன்றினார்.காலில் விழவேண்டும் போல இருந்தது.என் அம்மாவுக்கு அளவு கடந்த சந்தோசம்.வகுப்புகள் ஆரம்பித்தது.நான் முதலில் வகுப்புக்கு செல்லவில்லை .நான் சென்ற இடம் நூலகம்.பொறியியல் புல நூலகம் .நீண்ட கம்பிகள் கொண்ட காற்றாடி வரவேற்றது.புத்தகங்கள் படித்து விட்டு சிதறி கிடந்ததை அங்கு இருந்த ஊழியர்கள் அடுக்கி வைத்து கொண்டு இருந்தனர்.ஒரு ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்து நாட்டு நடப்புகள் விவாதம் நடந்து கொண்டு இருந்தது..இது செய்தி தாள்கள் படிக்காமல் செவிகளுக்கு இலவசமாக ஊழியர்களிடம் இருந்து கிடைத்தது.பார்க்கும்போது தாசில்தார் அலுவலகம் போல இருந்தது.நூலகம் போல இல்லை.நூலகத்தில் இருக்கும் அமைதி அங்கு காணப்படவில்லை.பின்பு பின் பக்கம் சென்று பெரிய பழைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்ட பகுதிக்கு சென்று பார்த்த பொழுது அமெரிக்க சிவில் இன்ஜினியரிங் புத்தகங்களை பார்க்க முடிந்தது.அதில் இருந்து அமெரிக்காவில் முதல் நிலை சிவில் இன்ஜினியரிங்    என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. பின்பு புதியதாக பொறியியல் கல்லூரிக்கு இதயம் போல நடு மையத்தில் நூலகம் கட்டப்பட்டு திறப்பு விழா நடை பெற்றது.அங்கு முதலில் திறப்பு விழாவில் முதல் நாள் கலந்து கொண்டேன்.முதல் நாளே யோகாசனம்  திறப்பு விழா ஆரம்பிக்கப்பட்டது.எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.ஏனென்றால் நானும் யோகாசனம், தியானம் மூலம் வளர்ந்தேன் .அது போல நூலகமும் யோகாசனத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.பின்பு பி.இ. முடித்துவிட்டு நான் நெய்வேலியில் உள்ள லிக்னைட் கார்ப்பரேஷன் graduate  apprenticeship   training   சேர்ந்த பொழுது புதுமையான குடும்ப வாழ்க்கையும் ,வேளையில் பொறுப்புணர்ச்சியும் மிக்க மனிதர்களை பார்க்க முடிந்தது.நான் ட்ரைனிங் முடித்துவிட்டு மீதம் இருந்த நேரங்களை அங்கு உள்ள பொது நூலகத்தில் கழித்தேன்.அங்கு பல புத்தகங்களை படிக்க முடிந்தது.எதற்கும் பஞ்சம் இல்லை.அனைத்து உலக அறிவு கூடமாக இருந்தது.நான் ட்ரைனிங் செல்லாமல் முழு நேரமும் நூலகத்தில் இருந்து புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.அதில் "தமிழர்கள் ஏன் அடிமையானார்கள் "என்ற புத்தகம் கடந்த கால வரலாற்றில் தமிழர்கள் அனுபவித்த துயரங்களை படிக்கும்போது எனக்குள் புது வித தெளிவு ஏற்பட்டது.பின்பு அம்பேத்கர் எழுதிய அனைத்து  புத்தகங்களையும் படித்து முடித்தேன்,.தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பதிவாகி இருந்தன.இது எனக்குள் ஒரு கேள்வியை எழுப்பியது.இந்தியாவில் நிறைய சமூகம் இருக்கிறது.ஆனால் தலித் சமூகம் கொடுமைப்பட்டது  அம்பேத்கர் ஏன் பதிவு செய்ய வேண்டும்.சட்டத்தில் இட ஒதுக்கீடு பெற்று தர காரணமாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றியது.இருப்பினும் இந்த புத்தகம் ஏற்படுத்திய தாக்கம் எனக்குள் தலித் மக்களை பற்றிய ஆராய்ச்சி செய்வதற்கு தூண்டியது.இதற்கு பிரிட்டிஷ் கலாசார முறையை கடைப்பிடித்து ஆராய எண்ணினேன். அதற்கு காரணம் இருக்கிறது.பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஆளும்போது முக்கிய அதிகாரத்தில் இருந்தவர்கள் தலித் மக்கள்.அண்ணல் அம்பேத்கரின் தந்தை கூட ஒரு காவல் அதிகாரி என்று கூறப்பட்டு இருக்கிறது.சுதந்திரம் வேண்டும் என்று அனைத்து சமூகத்தினரும் கொதித்து எழுந்த நிலையில் எங்களுக்கு முதலில் சுதந்திரத்தை கொடுத்துவிட்டு பின்பு இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுங்கள் என்று அம்பேத்கர் கூறுகிறார்.இந்த புத்தகங்களை இந்தியாவில் உள்ள மற்ற சமூகத்தினர் படிக்கும்போது அவர்களுக்கு இரு விதமாக  மனநிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.ஒன்று என் மூதாதையர் இவ்வளவு பெரியவர்களா?எங்களுக்கு இப்படி அடிபணிந்து இருந்தார்களா?இந்த மன நிலையில் தலித் மக்களை நோக்கும்போது அவர்களை அடிமைப்படுத்த மனம் இயல்பாக எண்ணுகிறது.அடுத்து  என் மூதாதையர்கள்   இவ்வளவு பாவம் செய்தவர்கள் ? என்று நோக்கும்போது அந்த சபல புத்தியை பயன்படுத்துகிற தலித்துகள் இலவசமாக சலுகைகள் பெறுகிறார்கள்.எனவே பிரிட்டிஷ் அரசு உடன் தலித்துகள் இணைந்து இருந்தது போல ஒரு பொய்யான தோற்றம் இருந்தது என் தலித் ஆய்வு முடிவில் தெரிய வந்தது.தலித்துகளும்  இந்தியர்கள் இவர்கள் அயல் நாட்டவர்கள் அல்ல.இவர்களுக்கு என்று விசேஷ சலுகைகள் வழங்கப்படுவது  இவர்களை மேலும் அடிமை ஆக்குகிற  செயலே ஆகும் என்பதும் தெரிந்தது.எனவே இந்தியாவுக்கு தற்போது முக்கிய தேவை பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு,சலுகைகள் ஆகும் என்பதும் எனது ஆய்வு முடிவில் தெரிய வந்தது.
பின்பு நான் பொறியியல் மேல்நிலை படிப்பு அண்ணாமலை பல்கலை கழகத்தில் சேர்ந்த நேரத்தில்  நூலகம் மீண்டும் என்னை வரவேற்றது.தற்பொழுது பொறியியல் புலத்திற்கு இதயம் போல செயல்படுகிறது.எனது நூலக ஆய்வு முடிவில் ஒரு பொறியியல் புல முதல்வர் ஆவதற்கு முழு தகுதி நூலக தலைமைக்கு மட்டும் இருக்கிறது.அப்பொழுது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.அப்படியே வேறு துறையினர் கல்லூரியின் முதல்வர் ஆகும் நிலையில் அவர்கள் ஓராண்டு நூலக முதல்வராக பணியாற்ற வேண்டும் .அதற்கு பின்னரே பொறியியல் புல முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்.ஏனென்றால் நூலகத்தில் ஒலிக்கிற வார்த்தைகள் ,சிந்தனைகள் ,செயல்பாடுகள் ஒருவரது வாழ்வின் வெளிப்புற நடவடிக்கையை  தீர்மானம் செய்கிறது.நூலகத்தில் வரும் எவரும் தீயவர்களாக இருக்க முடியாது.அப்படியே தீயவர்களாக இருந்தாலும் அவர்களை கண்ணியமான  பேச்சில் ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இதற்கு வால்மீகி  கதை உதாரணமாக இருக்கிறது.அதற்கு நூலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களிடம் பெண்மை நிறைந்து இருக்க வேண்டும்.நூலக அதிகாரத்தில் உள்ளவர்கள் பெண்மை நிறைந்தவராக காணப்பட்டால் மட்டுமே ஒரு நூலகம் சிறப்பாக செயல்படுகிறது.பெண்மை என்பது அன்பு,துணிவு,மென்மையான  பேச்சு,நடத்தை ,அமைதி  தன்னம்பிக்கை ஆகும் இது நிறைந்து இருந்தால்  மட்டுமே அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த பெண்மை கற்பிக்கப்படுகிறது.இந்த பெண்மை அனைவரிடத்திலும் இருக்க வேண்டியது.அது நூலகத்தில் இருந்து கற்பிக்கப்படுகிறது.தற்பொழுது நூலகத்தில் என்ன மாற்றம் செய்யலாம்?
1.கணினியில் வேலை  புரிபவர்கள் திரை சீலை அல்லது கருப்பு  கண்ணாடி போடப்பட்ட சுவர்கள் இருக்கலாம்.
2.மின்சாரம் அணைந்த  உடன்   மானிடரை ஆப் சொல்லுவதற்கு பதில் அதை வாசகமாக எழுதி ஓட்டலாம்.
3.இடம் பற்றாக்குறை  காரணமாக மாணவர் விடுதிக்கு அருகில் உள்ள இடத்தில் ஒரு நூலகம் கட்டி செயல்படலாம்.
இதனால் என்ன பயன்?
கூடுமான அளவு வரை ஆசிரியர்களுக்கு புதிய ஆராய்ச்சி செய்ய நேரமும்,மாணவர்களுக்கு சுதந்திர புதிய ,பல பாட புத்தகங்களை படிக்கும் வசதியும் கிடைக்கும்.இதனால் வகுப்பு நேரங்கள் ஒரு நாளில் குறைவாக இருந்து  நூலக படிப்புகளை ஊக்கப்படுத்த அட்டவணை மாற்றி அமைத்தல் வேண்டும்.
நூலகத்தை தவிர மற்ற பொறியியல் புல இடங்களில் cctv நிறுவுதல் வேண்டும்.அது நூலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
தவறான முன்னேற்றம் கண்காணிக்கப்பட வேண்டும்.நேர்மறையான முன்னேற்றம் கற்பிக்கப்பட வேண்டும்.
 நூலகத்தில் உள்ள தலைமையை பொறியியல் புல முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறேன்  என்றால் ,அதற்கு காரணம்  இருக்கிறது.
ஒரு துறை ஆசிரியர் ஒரு பொறியியல் புலத்துக்கு  தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட  உடன் அந்த துறை மாணவர்களுக்கு இயல்பாக ஒரு வித அதிகாரம் வந்துவிடுகிறது.அந்த அதிகாரத்தை அவர்கள் தவறான வழியில் ஈடுபடுத்துகிறார்கள்.
கடந்த கால பொறியியல் வரலாற்றில் பார்த்தோம் என்றால் எந்த துறையை சேர்ந்த ஆசிரியர் பொறியியல் புல முதல்வராக தேர்ந்து எடுக்கப்பட்டால்  அந்த அத்துறை மாணவர்கள் முதலில் போராட்டத்திலும் மற்றும் வன்முறையிலும் ஈடுபடுகிறார்கள் என்பது எனது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.எனவேதான் ஒரு நூலக தலைமையை பொறியியல் புல முதல்வராக நியமிக்கப்படும் நிலையில் அந்த நிலை பொது நிலை ஆகிறது  .அங்கு மாணவ அதிகாரங்கள் தவறான வழியில் செல்வது இல்லை.அவர்களின் அதிகாரம் ஆரோக்கியமான நேர்மறை சாதனை செய்வதற்கு காரணமாக இருக்கிறது என்பது எனது ஆய்வு முடிவில் தெரிகிறது.

No comments:

Post a Comment