Wednesday, 13 March 2013

என் வாழ்வில் கணிதம் :
நான் சிறு வயது முதலே  கணிதத்தில் கூட்டல், கழித்தல் ,பெருக்கல்,வகுத்தல் போன்றவற்றை திறன்பட செய்து மேல்நிலை வகுப்புகளில் ஆசிரியர் இல்லாத காரணத்தால் கணிதத்தை மனப்பாடம் செய்து பரீட்சை எழுத வேண்டிய நிலைமை.
பின்பு கல்லூரி வந்ததும் கணிதம் எனக்கு பிடிக்காமல் போனது.கல்வியில் புள்ளியல்,நிகழ்தகவு போன்ற மிக முக்கிய கணக்குகள் வாழ்க்கைக்கு உதவும் என்றாலும் கணிதம் சொல்லி தரும் ஆசிரியர்கள் எந்திரம் போல செயல்பட்டதால் அவர்களிடம் இருந்து கணிதத்தின் உண்மையான உருவத்தை என்னால் காண முடியாமல் போனது.என்னை பொருத்தவரையில்  எந்த ஒரு பிரிவோடும் சேராத  கணிதம் என்பது அந்த துறையை சாராது மற்ற துறை அதாவது பொறியியல் துறையினரை கட்டுப்படுத்தும் கருவியாக இருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன் .அதனால் அந்த கணிதத்தில் ஈடுபாடு அதிகம் இருந்ததில்லை.அதனால் எந்த பிரயோஜனமும் என் வாழ்க்கைக்கு உதவாது.என்னை கேட்டால் கணிதம் என்பது அனைத்து துறைகளிலும் சேர்ந்து கற்பிக்கப்படால் அது ஒரு அற்புத ஞான கனி .ஆனால் அது தன்னிச்சையாக செயல்பட்டால் அது அந்த துறைக்கு மட்டும் வேண்டும் என்றால் புது கொள்கைகளை உருவாக்குவதற்கு பயன்படலாம்.ஆனால் மற்ற துறைகளுக்கு அந்த கொள்கைகளை புகுத்த வேண்டும். அதை விடுத்து தன்னிச்சையாக செயல்படும் எந்த ஒரு கணித கொள்கையும் கசப்பான நாவில் வைக்க முடியாத கனியாக இருக்கிறது.இந்த கனியை எவர் உன்ன விரும்புவார்கள்  .அதை கட்டுப்படுத்தி திணிக்கும் நிலையில் மாணவர்கள் வாந்தி எடுக்கிறார்கள் .அந்த வாந்தி வன்முறை,தீவிரவாதம்  ,கலவரம்,போராட்டம்   போன்றவை  கலந்ததாக  இருக்கிறது.
எனவே கணிதம் என்ற தன்னிச்சையாக இருக்கும் பாடத்தையும் ,அந்த துறையையும் இந்த பொறியியல் புலத்தை விட்டு எடுத்து விட்டு பொறியியல் புல மாணவர்களுக்கு ,மானுடம்,கலை,சமூகம் ,அரசியல் போன்றவற்றை மேலாண்மை செய்ய உதவும் உளவியல் துறையை தற்போது உள்ள கணித துறையை எடுத்து விட்டு அந்த இடத்தில் வைக்க வேண்டும்.இப்படி செய்வது என்பது எதிர்கால பொறியியல் மாணவர்கள் நாட்டை மேம்படுத்துவதில் திறன்பட செயல்படுவார்கள்.இல்லையேல் தீவிரவாதியாகி நாட்டை சீரழிப்பார்கள் .

No comments:

Post a Comment