Friday, 22 March 2013

அது என்ன அமெரிக்க தீர்மானம்?
இந்தியாவை பற்றி பேசும்பொழுது முதலில் பூமி  அடுத்தது கண்டங்கள் .அந்த கண்டங்கள் அமைந்து இருக்கும் நிலப்பகுதி பின்பு கண்டங்களின் வரலாறு ,சீதோஷ்ண நிலை,மக்கள் எப்படி வாழ்ந்தால் பொருளாதார ,ஆரோக்கிய ,அறிவு   முன்னேற்றம் அடையலாம் என்பது அந்த கண்டத்தின் சீதோஷ்ண நிலை மற்றும் காலநிலை பொறுத்து அமைகிறது என்றால் அது எவ்வளவு   உண்மை.அதுபோல உலகில் உள்ள நாடுகளும் அதன் சீதோஷ்ண ,வரலாறு அடிப்படையில் கலாசாரம் கட்டமைக்கப்பட்டு நாளுக்கு நாள் கலாசார முன்னேற்றம் அடைந்து வருகிறது.இதில் என்ன விசேஷம் என்றால் இந்தியா என்றொரு பழமை பண்பாடு  ,மூன்று பக்க கடல்,ஒரு பக்க மலைப்பகுதி கொண்டு தனித்துவ அமைப்பை கொண்டு காணப்படுகிறது.இங்கு உள்ள சீதோஷ்ண நிலை அடிப்படையில் மத,ஜாதி ரீதியிலான கட்டுப்பாடுகளின் அடிப்படை பின்பற்றப்படுகிறது.இந்த மத,ஜாதி ரீதியிலான கட்டுப்பாடுகளை முதலில் உடைத்து எறிந்தவர்கள் ஐரோப்பியர்கள் ஆவர்.அவர்கள் உண்டாக்கிய புதிய குழப்பமான கலாசாரத்தில் தற்போது இந்தியா சென்று கொண்டு இருக்கிறது.அவர்கள் அமேரிக்கா கண்டதை போல பல்வேறு மாநிலங்கள் பல்வேறு சீதோஷ்ண நிலையை கண்டு ஒரு சுதந்திரமான முழு கட்டுப்பாடு அற்ற கலாசாரத்தை உருவாக்க எண்ணி ஆண்டு வந்தனர்.அதற்கு அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது இந்து மதம் ஆகும்.அப்படி இருக்க மிகவும் கட்டுப்பாடு உள்ள இந்து மதம் எவ்வாறு அவர்களுக்கு உதவி இருக்கும்.அதற்கு ஜாதி,வருணாசிரம கொள்கையும்  மிகவும் உதவிகரமாக இருந்து இந்திய மக்களை பல்வேறாக பிரித்து ஆளும் நிலையை கையாண்டு அழகாக ஆட்சி புரிந்து வந்தனர்.அது அவர்களுக்கு சிரமாக இல்லை.ஆனால் எந்த இந்த மதத்தையும்,சுதந்திர பிரிட்டிஷ் அமெரிக்க கலாசாரத்தையும் கொண்டு இந்தியாவை ஆண்டவர்கள்,அவர்களே எதிர்பார்க்காத வகையில் அதே இந்து மதத்தில் இருந்தும்,பிரிட்ஷ் அமெரிக்க கலாசாரத்தையும் கரைத்து குறித்த ஒரு மனிதன் அஹிம்சை மற்றும் அமைதி வடிவில் ஒட்டு மொத்த மக்களையும் ஜாதி,மத வேறுபாடு இன்றி ஒன்று சேர்த்தது என்பது ஆங்கிலேயர்கள் கனவிலும் நினைத்து பார்க்காத ஒன்று.இதுவரையும்  கண்டிராத ஒன்றும் கூட.அதனால்தான் சுதந்திரத்தை இந்தியாவுக்கு அளித்து "நீங்கள் எந்த கலாசாரத்தில் வாழ்வீர்கள்  என்று நாங்கள் பார்க்கிறோம்"என்று ஒதுங்கி விட்டனர்.இந்தியா முதல் முறையாக குழப்ப நிலையை சந்தித்தது.பிரிட்டிஷ் விட்டு சென்ற கலாசாரம் ,இந்தியாவின் பழமை கலாசாரம் பதிந்த நூல்களை கற்று தேர்ந்த சமுதாய கலாசாரம் என்ற இரண்டுக்கும் மத்தியில் இருந்து கொண்டு மக்கள் "குழம்பிய நிலையில் உள்ள குளத்தின் நீரின் அளவு முன்னேற்றம் அடைவது போல"முன்னேறி கொண்டு இருந்தனர்.இந்த குளத்தில் விழுவதற்கு விருப்பம் இல்லாமல் கஷ்டம் மற்றும் நஷ்டம் என்று சந்தித்தால் கூட பரவாயில்லை என்று ஒரு மதத்தினர் தனி நாட்டை பிரித்து தனக்கு என்று அமைத்து கொண்டனர் .இப்படியே முன்னேறி கொண்டு இருந்த குழம்பிய குட்டை ஒரு கட்டத்தில் அசுத்த நாற்றம் அடிக்க துவங்கியது.அந்த நாற்றம் தற்போது நிலவும் இந்திய பிரச்சினைகள்.இந்த பிரச்சினையை இந்திய மக்கள்  "எங்கள் நாடு ஜனநாயக நாடு இதெல்லாம் சகஜம் என்று ஒரே வார்த்தைகளில் கூறி இந்த பிரச்சினைகளை எல்லாம் அரசாங்கம் மறைக்கலாம்.ஆனால் நமக்கு அருகில் உள்ள அதே ஆசிய கண்டதை சேர்ந்த சீனா தேசத்தை இந்த விஷயத்தில் ஒன்றுபடுத்தி பார்ப்பதில் தவறு இல்லை.இங்கு "வேற்றுமையில் ஒற்றுமை" என்று பேசப்படுகிறது.வேற்றுமை என்பதே ஒற்றுமைக்கு முழுமையான எதிரான வார்த்தையாக இருக்கும்போது அது எப்படி வேற்றுமையில் ஒற்றுமையாகும்.இங்கு உள்ள வேற்றுமையில் ஒற்றுமை என்பது
*ஒன்றாக உட்கார்ந்து குடிப்பது
*பெண்களை அவர்கள் சம்மதம் இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்வது
*கிரிக்கெட்,சினிமா
இவைகள் தவிர வேறு எதில் இருக்கிறது வேற்றுமையில் ஒற்றுமை .
எவ்வளவோ நல்ல விஷயங்கள் ,சாதனைகள் இந்தியாவில் இருந்து நடத்தப்படுகிறது.அந்த சாதனைகள் எல்லாம் செய்பவர்களை உற்று பார்த்தால் அவர்களின் வாழ்க்கை பாதையில் ஒற்றுமை,ஒன்று என்ற கொள்கை இருக்கும்.எனவே இந்தியாவை ஒன்றிணைக்க  அதிகாரத்தில் ஆங்கிலம் மட்டும் என்ற ஒருமொழி  கொள்கை தேவைப்படுகிறது.
ஆனால் அமெரிக்க கலாசாரம் இது போன்று இல்லை.அந்த நாடு முழுமையான சுதந்திரத்திற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது.அங்கு ஒரு மொழி,நிலப்பரப்பு வேறு விதம்,காலநிலை ,வரலாறு இவை அனைத்தும் மாறுபட்டு இருக்கும்போது அங்கு உருவாக்கப்படும் கொள்கைகள் எப்படி ஆசிய கண்டத்திற்கு பொருந்தும்.முற்றிலுமாக பொருந்தாது.அது பொருந்த வேண்டும் என்றால் கட்டுப்பாடு உடன் பொருளாதார முழு வளர்ச்சியை பெற்ற பின்னர் இருக்கலாம்.தற்போது அவர்கள் முழு வளர்ச்சி பெறாத ஆசிய கண்டத்தில் தங்கள் கொள்கைகளை முன் வைக்க தீர்மானம் கொண்டுவர முயன்றால் அவர்கள் இங்கு வந்து வாழ்ந்து அனுபவித்து ஒரு கொள்கை மற்றும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.வெறும் வரலாற்றின் எழுத்துக்களையும்,வெளிச்சத்தையும் வைத்து கொண்டு அந்த வெளிச்சத்தில் நடக்க முயல்வது மின் மினி பூச்சியின் வெளிச்சத்தில் வீடு கட்டுவதற்கு சமம்.அந்த வீடு எப்படி ஒழுங்காக வரும்?இந்த அமெரிக்க கொள்கை தங்களுடைய அமெரிக்க சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது என்பதற்காக மற்ற நாடுகளின் கலாச்சாரங்கள்,கட்டுப்பாடுகள்  எல்லாம் தங்களின் சுதந்திர பொருளாதார கொள்கைக்கு கட்டுப்பாடு விதிப்பது போல இருந்தால்  ,அப்பொழுது எல்லாம் அமேரிக்கா அந்த நாட்டுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது என்பது இயற்கையான விஷயம் ஆகும்.அதற்காக அவர்களின் கொள்கைகள் இந்தியா சினிமா,கிரிக்கெட்,ஊடகம் போன்ற துறைக்கு வேண்டும் என்றால் தீனி போடுவது போல இருக்கலாம்.ஆனால் இந்த மூன்று துறைகளும் போடுகிற தீனியை இந்திய மக்கள்  சாப்பிடுவது என்பது கொடிய விஷத்தை அருந்துவதற்கு சமம்.எனவே அதை தீனியாக நினைக்காமல் இந்திய மக்கள்   கலாச்சாரத்தினை வளர்த்து எடுக்கும் கட்டுப்பாடாக எடுத்து கொள்வது நல்லது ஆகும் .இனிமேல் அந்த கட்டுப்பாடுகள் வைத்து இந்திய மக்கள்  மத, ஜாதிகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு மொழி கொள்கையான ஆங்கிலத்தை ஒரு மொழியாக்கி இந்தியாவை பாரத நாடாக உருவாக்கி  கட்டுப்பாடாக வாழ்வோம்.இந்தியாவுக்கு எதிர் புறத்தில் அமைந்து இருக்கும் அமெரிக்க கண்டமும் ஒரு மொழி ஆங்கிலம் ,அதனால் சுதந்திர கொள்கை.அது முன்னேற்றம் காண்கிறது.அது போல நமது இந்தி,இந்தியாவை ஒதுக்கி வைத்து ஆங்கிலம்,பாரதம் உருவாக்கி கட்டுப்பாட்டை வளர்ச்சியின் படியாக உருவாக்கி   முன்னேற்றம் அடைவோம் . அதுவே பாரத நாட்டிற்கு  நல்லது ஆகும்.

No comments:

Post a Comment