Wednesday, 30 January 2013


தெலுங்கானா வேண்டுமா?
ஆந்திர பிரதேசம் இது இந்தியாவின் மிகப்பெரிய நிலப்பகுதி கொண்ட மாநிலங்களில் ஒன்று ஆகும்.
மகாராஷ்டிரா,கர்நாடகா போன்ற மாநிலங்களில் எல்லைகளில் உள்ள மாவட்டங்கள் ஒன்று இணைந்து தெலுங்கானா மாநிலத்தை கேட்கின்றனர்.
இதில் முக்கிய விஷயம் என்ன என்றால் அந்த பகுதிகள் அனைத்தும் மலைகள் சார்ந்த குளிர் பகுதிகள் மற்றும் வளர்ச்சி அடைந்த பகுதிகள் ஆகும்.பெரும்பாலான தொழிற்சாலைகள் இந்த பகுதிகளில் உள்ளன.சீதோஷ்ண நிலையம் அடிக்கடி மாற கூடிய பகுதி ஆகும்.
இந்த பகுதிகளில் தெலுங்கு ,கன்னடம்,மராட்டி,ஹிந்தி போன்ற மொழிகள் பரவலாக பேசப்படுகிறது.
எனது கருத்து : 1.ஹைதராபாத்தை தலைமை இடமாக கொண்டு தனி தெலுங்கானா உருவாக்கப்பட வேண்டும்.
                                2.விசாகப்பட்டினம் தலைமை இடமாக கொண்டு ஆந்திரா உருவாக்கப்பட வேண்டும்.
இப்படி தெலுங்கானா என்ற மாநிலம் உருவாக்கப்படும் நிலையில் அதற்கு பெயர் தெலுங்கானா என்பதை நீக்கிவிட்டு வேறு பெயர் வைக்க வேண்டும்.அதுவும் அந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்டு அந்த பெயர் வைத்தல் வேண்டும்.
ஏனென்றால் அவ்வாறு பிரிக்கப்படும் நிலையில் ஆந்திராவில் உள்ள மக்களும் தெலுங்கு மொழி பேசுவதால் தன்னுடைய தாய்மொழி பற்றின் காரணமாக தெலுங்கானா மீது பற்று ஏற்பட்டுவிடும் என்ற காரணமாக தனி தெலுங்கானா உருவாக்கப்படவில்லை.இருப்பினும் வளர்ச்சி நிலையை கருத்தில் கொண்டு வேறு பெயர் வைத்து ஒரு புதிய மாநிலம் உருவாக்கப்படுதல் வேண்டியது அவசியமாகிறது.

No comments:

Post a Comment