Friday, 26 April 2013

கல்வி புலத்தில்  இருக்கும் கடைகள்:
நூறு சதவிகிதம் வியாபார புத்தியை கொண்டு அதன் வழியில் சென்று புதிய ஆய்வு கட்டுரைகளை வெளியிட விரும்பும் மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
நீங்கள் உங்கள் கல்லூரியில் படிக்கிறீர்கள் .ஆனால் நீங்கள் முழுமையான வியாபார புத்தியை கொண்டு உங்கள் படிப்பை அணுகி புதிய ஆய்வு கட்டுரைகளை வெளியிடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஒன்று உங்கள் கல்லூரியில் இருக்கிறது.அது சின்ன விஷயம் என்றாலும் "ஒரு சிறிய எறும்பு யானையின் காதில் சென்றால் யானை வீழ்வது போல"உங்களை அது வீழ்த்தும்.அது என்னவெனில் அந்த கல்லூரி வளாகத்தில்  உள்ள விற்பனை நிலையம் ஆகும்.அங்கு நீங்கள் எந்த ஒரு பொருளையும்  வாங்காதீர்கள்.ஏனென்றால் வியாபார நோக்கில் வளர்க்கப்பட்ட நீங்கள் படிப்பில் வியாபார புத்தி கொண்டு தனது கல்லூரியை ஒரு நிறுவனமாகவும்,தன்னை ஒரு முதலாளியாகவும் நினைக்கும்போது கல்லூரியில் உள்ள அணித்து தரப்பு மனிதர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பது போல தோன்றும்.ஆனால் முழு நேரமும் வியாபார நிலை கொண்ட அந்த கல்லூரி வளாகத்தில் உள்ள விற்பனை நிலையத்தை அணுகும்போது அதன் முதலாளி உங்கள் பலம்,அறிவு,வியாபார புத்தி என அனைத்தையும் தோற்கடிப்பது போல பேசுவார்.இதனால் நீங்கள் உருவாக்கிய  ஒரு வியாபார மாயையில் நிஜ  முதலாளி நுழையும்போது உங்கள் முகத்திரை கிழிக்கப்பட்டு நம்பிக்கை இழந்து போவீர்கள்.எனவே கல்வி புலத்தில் உள்ள கடைகளில் எதுவும் வாங்காமல் கல்வி கழகத்தின் வெளிப்புறம் உள்ள கடைகளில் வாங்குங்கள்.அதுவே நல்லது.ஆனால் கல்வி புல அறிவிப்புடன் வாங்கும் பொருட்களை மட்டும் அங்கு வாங்குவது நல்லது.

No comments:

Post a Comment