Tuesday, 2 July 2013

சுயநல இந்தியர்கள்



சுவிஸ் வங்கியில் இருந்த இந்தியர்களின் கருப்பு  பணம் என்னவாகும்?
சுயநல இந்தியர்கள் உருவாவதற்கு காரணம் என்ன?
ஒரு சுயநல இந்தியன் உருவாவது அவனின் சுய நல தாயின் மூலமாக மட்டும் ஆகும்.
ஒரு இந்திய பெண் தனது குடும்பத்தை மீறி எதையும் அணுகுவதில்லை,சிந்திப்பதில்லை.இதற்கு காரணம் ஆணாதிக்கம் என்று சொல்லப்படுகிறது.ஆனால் இந்த ஆணாதிக்கத்தை வளர்த்து விடுவது ஒரு இந்திய பெண் ஆகும்.
கலாசாரம்,கட்டுப்பாடு,வாழ்வியல் என்று அனைத்தையும் இன்றைய தலைமுறை சினிமாவில் இருந்து கற்று வந்தது.அது இன்றைய தலைமுறை முழுவதுமாக சினிமாவால் உருவாக்கப்பட்டது.போன தலைமுறை பாதி அளவு சினிமாவால் உருவாக்கப்பட்டது.பாதி அளவு  சாதி மற்றும் மதத்தால் உருவாக்கப்பட்டனர்.சாதி மற்றும் மதம் சார்ந்த மற்றும்  தங்கள் சுய நலத்துக்காக எடுக்கப்பட்ட படங்கள் ஈர்ப்பு காரணமாக அனைத்தும் சினிமாவில் கிடைப்பதால் முழுவதுமாக சினிமாவால் உருவாக்கப்பட்ட தலைமுறையாக இன்றைய மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
அவர்களின் சிந்தனை,நடத்தை போன்ற அனைத்தும் சினிமா நிறைந்து இருக்கிறது.
உதாரணம்:ஒரு அதிகாரம் அதாவது மக்களை ஆளும் அதிகாரம் எந்த நிலையில் இருக்கிறது அந்த நிலை மக்களிடம் காணப்படுகிறது.இந்தியாவில் அதிகாரங்கள் சினிமா தொடர்பு இல்லாமல் இருப்பதில்லை."அரசன் எந்த வழி, மக்கள் அந்த வழி" என்ற நோக்கத்தில் செயல்படும் சமூகம் சினிமாவால் முழுமையாக ஆளப்பட்டது.உருவாக்கப்பட்டது.ஆனால் நான் மேற்கண்ட சொன்ன செய்தியையும் சினிமா சொல்வதால்  அளவு கடந்த நம்பிக்கை சினிமா மேல் மக்களுக்கு உருவாகிறது.சினிமா சொல்கிறது "சமூகம் சீரழிவதற்கு நான் காரணம் அல்ல என்று",ஆனால் சாதாரண மக்களில் இருந்து நடுத்தர மக்களின் உண்மையான விழிப்புணர்வு அறிய முடியாமல் அறிவுக்கு   இந்த சினிமா பூட்டு போட்டது .
இதனால் இவர்களுக்கு செய்ய வேண்டிய மேல் நிலை பொருளாதார வர்க்கத்தினரிடம் "எங்களுக்கு செய்யுங்கள்,ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கள்"என்று கீழ்தர,நடுத்தர மக்கள் கேட்ககூட இயலாமல் அனைத்தையும் சினிமாவே செய்துவிட்டது.இதனால் தாங்கள் மட்டும் ஏன்?இந்த மக்களுக்கு செய்ய வேண்டும் .இவர்கள் போன்ற சினிமா அடிமைகளுக்கு  செய்தால் எந்த வகையிலும் உபயோகமான விஷயமாக இருக்காது என்று நினைக்கும் மேல் தர வர்க்கத்தினர் தங்கள் செலவு போக மீதம் சம்பாதித்த பணத்தை பாதுகாக்க சுவிஸ் வங்கியை தேடி ஓடினார்கள்.
இதில் மேல் தர வர்க்கத்தினர் என்பதில் கீழ் உள்ளவர்கள்  அடங்குவர் ,
1.அரசியல்வாதிகள்,
2.சினிமாக்காரர்கள்,
3.விளையாட்டு வீரர்கள்,
4.தொலைகாட்சி மற்றும் ரேடியோ சேனல் அதிபர்கள்,
5.செய்தித்தாள் அதிபர்கள்,
6.IAS ,IPS  போன்ற உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள்,  
7.நட்சத்திர ஓட்டல் அதிபர்கள்,
8.போதை மருந்து கடத்தல்காரர்கள்,
9.சாமியார்கள்,
10.ஜாதி மற்றும் மத சங்கங்களின் தலைவர்கள்,
11.பல்கலை கழக ,கல்லூரி நிறுவனர்கள்,
12.தகவல் தொழில் நுட்ப பூங்கா அதிபர்கள்,
13. (20 ஏக்கருக்கு மேல் வைத்து விவசாயம் செய்யும் விவசாயிகள்),
14.ரியல் எஸ்டேட் அதிபர்கள்,
15.செல்போன் நிறுவன அதிபர்கள்,
16.சாராய வியாபாரிகள்,
17.பெரிய தொழிலதிபர்கள்,
18.காபி எஸ்டேட் அதிபர்கள்,
போன்ற எண்ணற்ற மனிதர்கள் ஆவர்.
1.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் வீழ்ச்சி,
2.இறக்குமதி அதிகரிப்பு,ஏற்றுமதி குறைவு ,
3.உள்நாட்டு உற்பத்தி குறைவு,
4.பேரிடர்களால் சேதம்,
5.காலநிலை மாற்றத்தால் உணவு பயிர் விளையாமல் உணவு பஞ்சம்,
6.பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு,
7.அரசியல்வாதிகளின் பல கோடி ஊழல்,
8.மக்கள் தொகை பெருக்கம்,
9.சுகாதார சீர்கேடு,
10.மத மற்றும் இன கலவரங்கள் அதிகரிப்பு,
11.கொலை மற்றும் கொள்ளை அதிகரிப்பு,
12.பெண்களுக்கு பாலியல் பலாத்காரம்,
13.தீவிரவாத தாக்குதல்,
14.மாவோயிஸ்ட் தாக்குதல்,
15.வறட்சி,வெள்ளம்,சுனாமி,பூகம்பம்,புயல்,நிலசரிவு போன்ற இயற்கை பேரிடர் தாக்குதல்,
16.அண்டை நாடுகளின் ஆக்கிரமிப்பு, போன்ற இன்னும் எத்தனை ஆபத்துகள் இந்தியாவை தாக்கினாலும் இந்தியா என்றொரு நாடு தலை நிமிர்ந்து "எதுவும் நடக்கவில்லை"என்பது போல இருக்கிறது என்றால்,அதற்கு காரணம் இருக்கிறது.
அந்த காரணம் 'எந்த வழியில் கருப்பு பணம் சுவிஸ் வங்கிக்கு போனது , அதே வழியில் சுவிஸ் வங்கியில் இருந்து மீண்டும் பணம் இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.அதனால் மட்டும் தற்போதைய
1.பண புழக்கம் அதிகரிப்பு,
2.உற்பத்தி குறைவு,
3.டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சி,
போன்றவை காணப்படுகிறது.இந்த விளைவுகள் கூட  இந்தியாவுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.ஏன் என்றால் அந்த சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தையும் அந்நிய நாட்டு பணங்களாக மாற்ற கூடிய வல்லமை இந்தியாவுக்கு உண்டு.
இந்திய மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்பட்டாலும் மக்களுக்கு வழங்க கூடிய இலவச பொருட்கள் கிடைக்காமல் போனதில்லை.
அது தொலைகாட்சி,மடிக்கணினி ,கிரைண்டர்,மிக்சி,பேன் இப்படி ஏதேனும் ஒரு மாநிலத்தில் வெள்ளம் வந்தாலும் அங்கு நிவாரண தொகையாக  கொடுக்கப்படும் பல கோடிகள்(பாதிக்கப்பட்ட மாநிலத்துக்கு பக்கத்து மாநிலங்கள் கூட சில லட்சங்களை அல்லது 1 கோடி அளித்து அமைதியாக இருந்துவிடும்)ஆனால் முழுவதுமாக வறட்சி பாதித்து விவசாயிகள் விஷத்தை அருந்தி உயிரை விடும்  ஒரு  மாநிலத்தில் உள்ள அதிகாரங்கள்  ஏதேனும் ஒரு மூலையில் உள்ள மாநிலத்துக்கு நிவாரணம் பல கோடிகள் அளிக்கிறார்கள்.இது போன்ற தேவை உள்ள மற்றும் தேவை அற்ற இந்திய ரூபாய் மாறுதல்கள் சுவிஸ் வங்கியில் இருந்து வரவாக இருக்கலாம்.அங்கு பணத்தை போட்டவர்கள் அதிகாரத்திற்கு கொடுக்கும் அன்பளிப்பாக இருக்கலாம்.ஆனால் அவர்கள் இனிமேல் சுவிஸ் வங்கிக்கு எந்த வழியில் இந்தியாவில் இருந்து கருப்பு பணத்தை கொண்டு சென்றனர்,அந்த வழியில் கொண்டு வருவார்கள்.
ஏன் இந்த திடீர் முடிவை செய்வார்கள்?
இந்த சுயநலவாதிகளுக்கு எங்கிருந்து இந்திய மக்கள் மீது இவ்வளவு அன்பு வந்தது?அதற்கு காரணம்,
1.பல அயல்நாடுகள் இந்தியர்களின் போலி (எண்ணம்,செயல்,பேச்சு ஆகியவற்றில் போலி)முகத்திரையை கிழித்தது.அதனால் அவர்கள் வெட்கி தலை குனிய மனம் இல்லாமல் இந்தியாவுக்கு வருகிறார்கள்.
ஏனென்றால் பொருளாதாரத்திற்கு தேவையானது எண்ணம்,செயல்,பேச்சு ஆகும்.இது தற்காலிகமானது ,நிலைக்காது.இந்தியர்களை வெளிநாடுகளில் நிலைக்க செய்யவில்லை.
2.உடல் உழைப்பை விரும்பாத  இந்தியர்கள் "இருப்பது இந்த ஒரு   ஜென்மம்.இந்த ஜென்மம்.இந்த ஜென்மத்தில் உடலை வருத்தி உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக வைத்துகொள்ள மனம் இல்லாதவர்கள்.மாறாக எந்த இனத்தவர் இந்தியர்களிடம் வன்முறை தூண்டும் விதமாக போட்டி போடுகிறார்கள்?அந்த இனத்தின் பெண்ணிடம் உடலுறவு கொண்டால்   "இரண்டற கலந்து ,உங்கள் இனம் ஆகிவிட்டோம்"என்ற சுகத்தில் காலத்தை கழித்து மற்ற இனத்திற்கு தொந்தரவு தருபவர்களாக காணப்பட்டனர்.இது தெரிந்து அயல்நாட்டவர்கள் இவர்களை துரத்துவது "முகத்திரையை கிழித்தனர்"  எனப்படுகிறது.
மேற்கண்ட வரிகளில் நான் சொன்னவர்கள்  சுகத்தை மனதில் மட்டும் விரும்புவதால் அதற்கு சக்தி அளிக்க   மதிப்பை தேடுகிறார்கள்.இந்த மதிப்பு கௌரவத்தில் அடங்கி உள்ளது.இந்த கௌரவம் இந்தியாவில் மட்டும் கிடைக்கும்.அவர்களுக்கு வணக்கம்  போடவும்,காலில் விழுவதற்கு     ஆட்கள் இந்தியாவில் மட்டும் இருக்கிறார்கள்.அதனால் அனைத்து நாட்டுக்கும் சென்று கடைசியில் இந்தியாவுக்கு மீண்டும் திரும்புகிறார்கள்.
3.இதுவரை மக்களின் வளர்ச்சிக்கு  சினிமா பூட்டு போட்டது .அதனால் அவர்கள் தூங்கி கொண்டு இருந்தனர்.அதனால் சுலபமாக கருப்பு பணத்தை கடத்த முடிந்தது.தற்போது அந்த சினிமா  மக்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த பூட்டை திறந்தது. அப்பொழுது , எங்கு தங்களது தோட்டத்தில் உள்ள புற்களை(இந்திய முதலாளித்துவம்) மேய்ந்து (இந்திய புரட்சி) விடுவார்கள்?என்று எண்ணிய கருப்பு பண முதலாளிகள் முந்தி கொண்டு சலுகைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி மக்களை மீண்டும் கட்டிப்போட பார்க்கின்றனர்.ஆனால் இந்த சலுகைகள் எல்லாம் தற்காலிகமானது என்று மக்கள் உணர்ந்து சுய தொழிலில் கவனம் செலுத்த வேண்டும்.
என்னென்ன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருகிறார்கள்?
1.கல்லூரி,பல்கலைகழகங்கள் தொடங்குதல்,
2.அரசியல் கட்சி தொடங்கி உறுப்பினர் சேர்ப்பது,
3.வீடுகள் அதிகம் வாங்கி அங்கு பணத்தை பதுக்குதல்,
4.தொலைகாட்சி மற்றும் ரேடியோ சேனல் தொடங்குதல்,
5.சினிமா தொழிலில் ஈடுபடுதல்,
6.நட்சத்திர ஓட்டல் ஆரம்பித்தல்,
7.   (IT நிறுவனம் ஆரம்பித்தல்),
8.மறைமுகமாக தன்னை ஆளும் அரசியல்வாதிகளுக்கு அன்பளிப்பு அளித்தால்,
9.கோவில்களை கட்டுதல் மற்றும் கோவில்களுக்கு நன்கொடை அளித்தால்,
10.தனது பிறந்த நாள் போன்ற விழாக்கள் காரணம் காட்டி மக்களுக்கு இலவசங்கள் வழங்குதல்,
11.தனது சாதி மற்றும் மதம் குழுவை ஒருங்கிணைத்து அரசியல் நடத்துதல்,
12.புதிய தொழிற்சாலைகளை தொடங்குதல்,
13.புதிய கடைகளை உருவாக்குதல்,
14.டிராவல் வாகன நிறுவனம் வைத்து இருத்தல்,
15.தொண்டு நிறுவனம் ஆரம்பித்தல்,
16.சாமியார் அவதாரம் எடுத்தல்,
17.விவசாய நிலங்களை வாங்கி பயிர் செய்தல்,
18.இளைஞர்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்பு வழங்குதல்,
19.எங்கு விழா, துக்கம் நடந்தாலும் நலம் விசாரித்து பணம் வழங்குதல்,
20.விளையாட்டில் முதலீடு செய்தல்,
21.தங்க சட்டை,தங்க ஜட்டி அணிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவது போன்ற பணம் வைத்து சாதனை செய்தல்,
22.தேச உணர்வு அதிகம் உள்ள மனிதன்  என்று மிகைப்படுத்திய நடிப்பை வெளிப்படுத்துதல்,
போன்ற பல்வேறு சலுகைகளை மக்களுக்கு வழங்கி தான் அயல்நாட்டவரிடம் இழந்த  மதிப்பை பெறுவதற்கு கருப்பு பண முதலாளிகள் முயற்சி செய்வார்கள்.இதனால் பணப்புழக்கம் அதிகரித்து டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டது.
தற்காலிக சுயநலமற்ற இந்தியர்களால் மக்கள் சலுகைகளை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்.அந்த சலுகைகளும் போராடி பெறுகிறார்கள்.ஆனால் சினிமா மீண்டும் இந்தியர்களின் வளர்ச்சிக்கு பூட்டு போட   பல யுக்திகளை கடைப்பிடிக்கிறது. அது மீண்டும் பூட்டு போட்ட  பின்பு புதிய வகையில் சுயநலவாதிகள் மேற்கண்டவற்றில் அதிபர்களாக உருவாகி இருக்கிறார்கள்.ஆனால் சாதாரண மக்கள் தினம், நாள் முழுவதும் என்று வெயிலில் ஒரு மணி நேரம் வேலை செய்துவிட்டு பல மணி நேரங்கள் (தொலைக்காட்சி,சினிமாக்கு அடிமை)உறங்குகிறார்கள்.சம்பளம் வெறும் நூறு ரூபாய் .மத்திய அரசின் ஊராக வேலை வாய்ப்பு திட்டம் .மீண்டும்  கொத்தடிமைகளாக கிராமப்புற மக்கள் உருவாகிறார்கள்.இவர்கள் தங்களது  தனித்துவ இயல்பை அறிய முடியாதவாறு அவர்களின் அறிவுக்கு சினிமா மற்றும் தொலைகாட்சி சேனல்களால் பூட்டு போடப்பட்டு   இருக்கிறது .இதனால் முன்னேற்றம் என்பது காண முடியாததாக இருக்கிறது.
இதற்கு தீர்வு:இந்தியா தனது குழு அமைப்பை கலைத்துவிட்டு தனித்துவ இயல்புக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.

அதற்கு உரிய நடவடிக்கை :அதிகாரங்களால்  முதலில் ஆவணத்தில் உருவாக்கப்பட வேண்டும்.
                                                         ப்படிக்கு,                                                                                                                                                                   சதீஷ்  பிரிட்டிஷ் 



No comments:

Post a Comment